மார்ச் 8-ல் மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்?




மார்ச் 8-ம்தேதியைஉலகமகளிர்தினமாகநாம்கொண்டாடி வருகிறோம். வீட்டிற்குள்ளே இருந்தபெண்சமுதாயம் தற்போது வானில்பறந்துகொண்டிருக்கிறது என்றால், அதற்குவித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றிதினமேஇந்தமகளிர்தினமாகும். முதலில் அனைத்து மகளிருக்கும் கூடலின் சார்பில் மகளிர்தினநல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மார்ச் 8-ல்சர்வதேச மகளிர்தினம்கொண்டாடுவது ஏன்? அதுஎன்னமகளிர்தினம்? மார்ச்8-ம்தேதிக்கும் மகளிருக்கும் என்னசம்பந்தம் என்றுஉழைக்கும் கீழ்த்தட்டுப் பெண்வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப்பெண்கள் தினம்இன்றும் இருக்கிறது.

சர்வதேச மகளிர்தினம்என்றுஒருநாள் வருவதற்குக் காரணமேஇந்தஉழைக்கும் பெண்வர்க்கம் தான்என்பதுதங்கமுலாம் பூசப்படாத உண்மை!

மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர்தினம்என்றுநாமனைவரும் அறிவோம். ஆனால், எதற்காக மார்ச்எட்டாம் தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்? சற்றுவரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பலதகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

1789-ம் ஆண்டு ஜூன்14-ம்தேதிசுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் (அரசனின் ஆலோசனைகுழுக்களில்) என்றுகோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போதுபாரிஸில் உள்ளபெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! ஆணுக்கு நிகராகபெண்கள் இந்தச்சமுதாயத்தில் உரிமைகள் பெறவேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டுமணிநேரவேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றுபெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!

கிளர்ச்சிகள் என்றால் அதன்தீவிரம் புரிவதற்கு, அடுப்பூதும் பெண்கள், இடுப்பொடியப் பாடுபடும் பெண்கள் கையில்கிடைத்த ஆயுதங்களைக் கையில்எடுத்துக்கொண்டு பாரிஸ்நகரத்தெருக்களில் அணிதிரண்டனர்.

புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணியஅந்நாட்டு அரசன்இடியெனமுழங்கி, "இவர்களை என்அதிகாரம் கொண்டுஅடக்குவேன் என்றும்" ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைதுசெய்வேன் எனவும்அறிவித்தான்.

ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாகஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்ளஉற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப்பிளக்கஅரசமாளிகைநோக்கிஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது!

அரச மாளிகைமுன்புஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைதுசெய்வோம் என்றுமிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர்.

இதை எதிர்பாராத அரசன்அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்றுஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாதுபோகவும், அரசன்லூயிஸ்பிலிப்முடிதுறந்தான். இந்தச்செய்திஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிடஅங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்!

தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண்பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர்போராட்டங்களில் ஈடுபடஆளும்வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது.

இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம்என்றுதங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டுஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.

பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ்பிளாங்க், பெண்களை அரசவைஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்தநாள்1848-ம்ஆண்டுமார்ச்8-ம்நாளாகும்! அந்தமார்ச்8-ம்நாள்தான்மகளிர்தினம்உலகெங்கும் அமையஒருவித்தாக அமைந்தது.

உலக மகளிர்தினத்தை வேண்டுமானால் நாம்எளிமையாகக் கொண்டாடலாம். ஆனால்இந்தஉலகமகளிர்தினம்கொண்டாடுவதற்கு காரணமான போராட்டமும், அதன்வெற்றிகளும் அவ்வளவு எளிதாகக் கிட்டியதல்ல. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்இது.

18-ம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள்மட்டுமே பணியாற்றினர். மகளிர்வீட்டுவேலைகளை செய்யும் பொருட்டு வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்விகூடமறுக்கப்பட்டது. மருத்துவமும், சுதந்திரமும் என்னவென்று கண்ணில் காட்டப்படாமல் இருந்தகாலம்அது.

இந்த நிலையில்தான் 1857-ம்ஆண்டின் நடந்தபோரினால் ஏராளமான ஆண்கள்கொல்லப்பட்டதும், படுகாயமடைந்து நடக்கமுடியாத நிலைக்கு உள்ளானதும் நிகழ்ந்தது. இதனால்உலகின்பலநாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைத்தவிர்க்க நிலக்கரிச்சுரங்கள் மற்றும் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் மகளிருக்கு பணிவாய்ப்பு ஏற்பட்டது. இந்தசந்தர்ப்பம்தான் அடுப்பூதும் பெண்களால் தொழிற்சாலைகளிலும் திறமையாக பணியாற்ற முடியும் என்பதைஉலகிற்கு நிரூபித்தது. ஆண்களுக்கு நிகராகபெண்களாலும் வேலைசெய்யமுடியும் என்றுபெண்சமுதாயமே அப்போதுதான் புரிந்து கொண்டது.

எது எப்படிஇருந்தாலும், வேலைபார்க்கும் இடங்களில் ஆண்களுக்கு நிகராகபணியாற்ற வாய்ப்பு கிடைத்ததேத் தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதிஇழைக்கப்பட்டது. (அதுஇன்றுவரைபலஇடங்களில் தொடருவது மற்றொரு பிரச்சினை). இதனால்பெண்கள் மனம்குமுறினர். ஆண்களுக்கு இணையானஊதியம், உரிமைகள் கோரிபெண்கள் எழுப்பிய குரலுக்கு அப்போதைய அமெரிக்க அரசுசெவிசாய்க்கவில்லை.

அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர்நியூயார்க், இங்குநெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலைசெய்துமிகக்குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்தஊதியத்தைப் பெறுவதற்குக் கூடநிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான்கிடைக்கும் என்றநிலைஇருந்தது.

1857-ல் நியூயார்க் நகரில்உழைக்கும் பெண்கள் கூடிகுரல்எழுப்பினர். பெண்களின் முதல்குரல்ஒலிக்கத் தொடங்கியது பொன்னாள்! தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.

இதனால் அமெரிக்கா முழுவதும் கிளர்ந்தெழுந்த பெண்தொழிலாளர்கள் 1857-ம்ஆண்டுமார்ச்8-ம்தேதிபோராட்டத்தில் குதித்தனர். துணிகளை உற்பத்தி செய்யும் மில்களில் பணியாற்றிய பெண்கள் தான்இப்போராட்டத்திற்கு தலைமைஏற்றனர். இதனால்அதிர்ச்சி அடைந்தமில்உமையாளர்கள் இப்போராட்டத்தை அரசின்ஆதரவுடன் அடக்கினர். வெற்றிபெற்றதாக பகல்கனவும்கண்டனர். ஆனால்அந்தபகல்கனவுநீண்டநாட்களுக்கு பலிக்கவில்லை.

அடக்கி வைத்தால் அடங்கிப் போவதுஅடிமைத் தனம்என்றுபெண்தொழிலாளர்கள் 1907-ம்ஆண்டில் மீண்டும் போராட்ட களத்தில் குதித்து சமஉமை, சமஊதியம்கோரினர். இதைத்தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ளகோபன்ஹேகன் நகரில்1910 ஆம்ஆண்டில் பெண்கள் உரிமைமாநாடுநடைபெற்றது. இதில்உலகின்பலநாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டுதங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டின.

இந்த மாநாட்டில் கலந்துக் கொண்டஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சிதலைவர்கிளாரேசெர்கினே, ஒருகோரிக்கை தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர். அந்ததீர்மானத்தின் முக்கிய சாராம்சமாக மார்ச்மாதம்8-ம்தேதியைமகளிர்தினமாககொண்டாட வேண்டும் என்றுகோரிக்கை வைத்தார். பெண்களை அடக்கிஆளநினைத்த ஆண்சமுதாயம் இதற்குஒப்புக் கொள்ளுமா அல்லதுஇந்ததீர்மானம் நிறைவேற வழிஏற்படுத்துமா... பல்வேறு தடங்கல்களால் இந்ததீர்மானம் நிறைவேற முடியாமல் போனது.

இதற்கிடையே பெண்தொழிலாளர்கள் அமைப்பினர் ஆங்காங்கே உரிமைக் குரல்எழுப்பத் தொடங்கியிருந்தனர். 1920-ம் ஆண்டுசோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில்நடந்தபெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா கெலன்ரா கலந்துகொண்டார்.

அவர் தான்உலகமகளிர்தினத்தை ஆண்டுதோறும்மார்ச்8-ம்தேதிநடத்தவேண்டும் என்றுபிரகடனம் செய்தார். இதையடுத்து 91 ஆண்டுகளுக்கு முன்பு1921-ம்ஆண்டில் உலகமகளிர்தினத்தைக் கொண்டாடத் தொடங்கினர். அன்றுமுதல்இன்றுவரைஒவ்வொரு ஆண்டும் மார்ச்8-ம்தேதியைநாம்மகளிர்தினமாகக் கொண்டாடி வருகிறோம்.


ஒரு சிலஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவில் மகளிர்தினக்கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இந்ததினம்தங்களது குடும்பம், சமுதாயம், சமூகம், நாடுஆகியவற்றின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ள சாதாரணபெண்களின் முனைப்பை போற்றுவதற்காக கொண்டாடப்படுகிறது. இந்தநாளில்பாலினசமத்துவம், சமூகநீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டஉலகைஉருவாக்குவதற்கு நாம்அனைவரும் ஒன்றுசேர்ந்து பாடுபடவேண்டும். மேலும், அனைத்து வகையிலும் பெண்களின் முன்னேற்றம் என்றஇலக்கைஅடைவதில் நாம்கண்டுள்ள வெற்றிகளைக் கொண்டாட வேண்டிய தினமும் ஆகும்இது. அதேசமயம்பெண்கள் தொடர்பான அனைத்து வகைமுன்னேற்றங்களிலும் குறிக்கோள்களை அடைந்ததை நினைவுபடுத்தவும், மாற்றத்துக்கு வழிகோலும் திட்டங்களை செயல்படுத்தவும் இந்தநாட்டின் விதியைசீரமைக்க ஓய்வில்லாமல் பாடுபடுங்கள்.

No comments:

Post a Comment