தூய தமிழ்ப் பெயர்கள் - பெண் குழந்தைக்கு


தூய தமிழ்ப் பெயர்கள் - பெண் குழந்தைக்கு

1)
அல்லி
2) மிளிர்
3) திகழ் (திகழி)
4) மகிழ் (மகிழி)
5) மீகி ( (மீகம் என்றால் யாவற்றையும் மீறிய உயர்ச்சி மிக்கது என்று பொருள். தேவாரத்தில் தமிழ்நூலின் மீகம் அறிவார் (தமிழ் நூற்களின் தனி மேன்மையை உணர்வார்) என்று ஆண்டிருக்கின்றார் திருஞான சம்பந்தர்)
6) சிவணி (சிவணுதல் என்றால் கூடுதல் , சேர்ந்து வாழ்ந்து சிறப்பிப்பவள் என்று பொருள். அறிவு சேர்ப்பவள், அறிவோடு சேர்பவள், நற்பொருள் கூட்டுபவள், நற்பொருளோடு சேர்பவள்)
7) தெளி, தெளிர் (ஒளி, ஒளிவிடுதல், அறிவு, உறுதியான அறிவு)
8) தென்னி (அழகி, இனியவள்)
9) பொன்னி (இது பழைய பெயர் என்றாலும் வழக்கிழந்து வரும் பெயர்)
10) ஒள்ளி (ஒள் = ஒளி; அழகானவள்)
11) ஐயை (தலைவி)
12) ஒன்னி (அழகும் நட்பினிமையும் பொருந்தியவள்; ஒன்னார் = பகைவர்)
13) கல்லி (பருவத்துக்கு மேற்பட்ட நுண்ணறிவு; ஆங்கிலத்தில் precocious என்பார்களே அதற்கு நேர் ஈடான சொல்)
14) அளி (அன்பானவள்)
15) களி (மகிழ்ச்சியானவள்)
16) எழில்
17) கேண்மி (அன்பானவள். கேள் = அன்பு, கேளிர் = அன்பால் சுற்றமாய் அமைந்தவர்கள் நண்பர்களும் உறவினர்களும்; கேள்வன் = காதலன், அன்பன். கேள்> கேண்> கேண்மை)
18) செவ்வி (சிறந்தவள்)
19) நவ்வி (அழகு, இளமை, பெண்மான்)
20) நவ்வீ (நல்ல வீ; வீ என்பது முழுவதும் மலர்ந்த பூ)
21) நளி (தேன் தேன் போன்றவள், குளிர், குளுர்ச்சியானவள்; நளி என்றால் பெருமை என்றும் பொருள் எனவே பெருமையானவள்)
22) நன்னி (நல்லவள், சிறந்தவள்)
23) நல்லி (நல்லவள்)
24) முகை
25) முன்னி (சிந்திப்பில் சிறந்தவள், முதல் பெண்மகவுக்கு வைக்கத் தக்க சொல்லும் ஆம்,
26) முருகி (அழகி)
27) எழில், எழிலி
28) இசை
29) ஏழிசை
30) நேரி (பேரழகு, பெரும் அறிவு, கற்புக்கரசி (நேர்= கற்பு), உண்மையள், தகுதி மிக்கவள்)
31) நே (நே = அன்பு; நேயம் என்பது இதில் இருந்து வந்த சொல்)
32) நேயெழில்
33)நேயளி (இப்படி நே என்பதை வைத்து ஒரு 50+ சொற்கள் ஆக்கலாம்; நேயகி (நாயககி என்பது போல், அகத்தே நேயம் கொண்டவள் நேயகி)
34) பரவை (திருமகள், சுந்தரரின் மனைவியின் பெயர்; கடல் = கடல் போன்ற அழகு அறிவு, வலிமை என்று பொருள்)
35) புரவி (புரவி என்றால் குதிரை என்று பொருள், ஆனால் விரைந்தாற்றுவோர், காப்பவர் என்றும் பொருள்.)
36) புரீஇயள் (புரிவு = அன்பு; புரீஇ (அளபெடை) என்பது விரும்பி, அன்பு செய்து என்று பொருள்)
37) புதினி (புதியவள், புது நோக்குடையவள், புதுப்பூ, நவீன் என்னும் ஆண் பெயர் போல் பெண்பால் தமிழ்ப்பெயர்0
38) பூவல் (சிவப்பு, செவ்வழகி)
39) பொழினி (பொழில் = சோலை, பூந்தோட்டம், பெருமை)
40) மதிரை (குபேரனின் மகளின் பெயர், மதி போல் அழகானவள்0
41) மன்னி (சிந்திக்கும் தலைவி)
42) மாசிலி (தூயவள்; மாசிலி என்பது கடவுளின் பெயர்களுள் ஒன்று)
43) நன்மாரி (செல்வம் தரும் நல்ல மழைபோன்றவள்)
44) மீளி (காப்பாற்றுப்வள், மிகுதிறம் கொன்டவள்0
45) மீனி (மீன் போன்ற கண்ணுடையவள்)
46) சேகி (ஆற்றலுடைய பெண்; சேகன் = ஆற்றலுடைய ஆண்)
47) சேணி (சேண் என்றால் உயர்வு, சேணி என்றால் உயர்ந்த அறிவு கொன்டவர்கள் என்று பொருள். அறிவுசீவி என்னும் பொருள்; சேணி=ஏணி. இது வடமொழிச்சொல் என்னும் கருத்தும் உண்டு. ஆனால் சே = உயர்வு, செம்மை என்னும் தமிழ்வழிப் பொருள் கொண்ட தூய தமிழ்ச்சொல்லே)
48) தண்ணளி (குளிர்ச்சியான அன்பு பொருந்தியவள்; கடவுளுக்கும் கூறும் பெயர்; அருள்)
49) நயமி (நுண்ணழகுடையவள், நுண்ணறிவு உடையவள்)
50) புகழி (புகழ் மிக்கவள்)
51) புகலி (புகழ் மிக்கவள்; புகல், புகலுதல் என்றால் சொல்லுதல், மகிழ்தல். இது புகழ பெற உதவுவதால், புகல் என்பது நற்புகழுக்கும் ஆகும். புகலி என்றால் புகழி என்றும் பொருள்)

No comments:

Post a Comment