ஆஸ்துமா அரக்கன்!
ஆஸ்துமா தீவிரமாக இருக்கும்போது உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். நோயின் தீவிரம் மிக அதிகமாக இருக்கும் போது, மருத்துவர்கள் ‘நெபுலைசர்’ என்கிற கருவியின் மூலம் தீவிரத்தைக் குறைப்பார்கள். மருந்துடன் ஆக்சிஜனும் சேர்த்து, நீராவி வடிவத்தில் சுவாசிக்கும்படி நோயாளிக்கு
செலுத்தப்படும்.
இதற்கும் கட்டுப்படாத ஆஸ்துமா என்றால், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, நரம்பு வழியே செலுத்தக்கூடிய மருந்துகளைக் கொடுக்கத் தொடங்க வேண்டும். இன்ஃபெக்ஷன் இருந்தால் அதற்கும் மருந்து கொடுக்கப்படும்.
ஆஸ்துமாவுக்கான சிறந்த சிகிச்சை முறை என்றால் அது இன்ஹேலர் மட்டுமே. வாய் வழியே வைத்து உறிஞ்சக்கூடிய குழல் வடிவிலான சிறிய கருவியான இதில் ஏற்கனவே மருந்து ஏற்றப்பட்டிருக்கும். உறிஞ்சிய உடனேயே நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு மருந்து சென்று, சுருங்கிய காற்றுக்குழாய்களின் தசைகளைத் தளர்த்தி, நிவாரணம் அளிக்கும். பக்க விளைவுகள் இல்லாதது. இன்ஹேலரை சரியாக உபயோகிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். வாயில் வைத்து உறிஞ்சிய உடனேயே வாயைக் கொப்பளித்துத் துப்ப வேண்டும்.
இன்ஹேலரிலேயே இரண்டு வகை உண்டு. ப்ரிவென்ட்டர் என்பதை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஆஸ்துமா இருந்தாலும்,இல்லாவிட்டாலும் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். ரிலீவர் என்பதை, பிரச்னை தீவிரமாக இருக்கும்போது மட்டும் உபயோகிக்கலாம். பலருக்கும் இந்த வித்தியாசம் தெரியாமல், வருடக்கணக்கில் ரிலீவரை மட்டுமே உபயோகிக்கிறார்கள். அப்படி உபயோகிப்பது இதய நோயை வரவழைக்கலாம். ஜாக்கிரதை!
இன்ஹேலர் உபயோகிக்கத் தெரியாதவர்களுக்கு மருத்துவர்கள் ‘ஸ்பேசர்’ என்கிற கருவியைப் பரிந்துரைப்பார்கள். பக்க விளைவுகள் இல்லாத இன்ஹேலர் உபயோகித்து, கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே பாதுகாப்பானது. அளவின்றி, அடிக்கடி ஊசி, மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறவர்களுக்கு, நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன், ஆஸ்டியோ பொரோசிஸ், பருமன் போன்ற பிரச்னைகள் வரலாம்.

No comments:
Post a Comment