ஒரு கிராமப் பஞ்சாயத்தில்


ஒரு கிராமப் பஞ்சாயத்தில் உள்ள பெரிய குளத்தில், மீன்பிடிக்கும் உரிமையை யாருக்கு கொடுப்பது என்று முடிவு செய்வதற்க்கு உரிய கோப்பு ஒன்னு, முதல்வர் காமராஜர் பார்வைக்கு வந்தது.

சம்பந்தப்பட்ட துறை சார்ந்த செயலரிடம் இது குறித்து பேசிய காமராஜர், "இந்த குளத்தில் மீன் பிடிக்கும் உரிமையை தனிபட்ட நபருக்கு கொடுத்தால், அதில் வரக்கூடிய லாபம் முழுவதும் அவருக்கே போய்ச் சேரும். அதேபோல் 10 பேருக்குச் சேர்த்துக் கொடுத்தால், லாபம் முழுவதும் அந்த 10 பேருக்குத்தான் போகும். ஒரு கூட்டுறவு சங்கத்துக்கு அந்த உரிமையை வழங்கினால், அந்த லாபம் அனைத்தும் அந்த கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே போய் சேரும். இப்படியெல்லாம் செய்யாமல், அந்த கிராம பஞ்சாயத்து ஏற்று நடத்தினால், அதில் வரக்கூடிய லாபம் முழுவதும் அந்தக் கிராமத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் போய்ச் சேரும். இதில் எது நல்லது" என்று கேட்டார். தாங்கள் சொன்னபடி, கிராம பஞ்சாயத்து ஏற்று நடத்துவதுதான் நல்லது. ஆனால், அதற்க்கு சட்டத்தில் இடமில்லையே" என்று அந்த அதிகாரி கூறினார்.

உடனே முதல்வருக்கு கோபம் வந்து விட்டது. "எது நல்லது என்று நீங்களே கூறினீர்கள். அதை நிறைவேற்றச் சட்டவிதிகள் இடம் தரவில்லையெனில், அதை உடனே மாற்றி உத்தரவு போடுங்கள். மக்களுக்காகத்தான் சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்களல்ல" என்று உறுதியுடன் தெளிவாக கூறினார்...!

No comments:

Post a Comment