உலகில் சிறந்தவர்,


உலகில் சிறந்தவர்,

பிரான்சு தேசத்தில் பாரிஸ் நகரத்தில் ஒரு பல்கலைக்கழக மனோதத்துவப் பேராசிரியர்,வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போது சொன்னார்,''உலகிலேயே சிறந்த மனிதன் நான் தான்,''உடனே ஒரு மாணவன் தைரியமாக எழுந்து,''உங்களால் அதை நிரூபிக்க முடியுமா?''என்று கேட்டான். அடுத்து ஆசிரியர்,''உலகிலேயே சிறந்த நாடு எது?''என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்.மாணவர்கள் அனைவரும் பிரான்சு தேசக்காரர்களே.எனவே அவர்கள்,''பிரான்சு தான் சிறந்த நாடு,''என்றனர். பின் ஆசிரியர் கேட்டார்,''பிரான்சிலேயே சிறந்த நகரம் எது?''மாணவர்கள் அனைவரும் பாரிஸ் நகரை சேர்ந்தவர்கள்.எனவே அவர்கள் ஒருமித்து சொன்னார்கள்,''பாரிஸ் நகரம்தான்சிறந்த நகரம்.'' ''பாரிஸ் நகரிலேயே சிறந்த இடம் எது?''என்று ஆசிரியர் கேட்கே,மாணவர்கள் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்ததால்,அதுதான் சிறந்த இடம் என்றனர்.''நமது பல்கலைக் கழகத்திலேயே சிறந்த துறைஎது?''என்று ஆசிரியர் கேட்க,அவர்கள் அனைவரும் மனோதத்துவத் துறையில் இருப்பதால்,அதுதான் சிறந்த துறை என்று தயக்கம் ஏதுமின்றிக் கூறினார்.அடுத்து பேராசிரியர்,''அந்த சிறந்த துறையின் தலைவர் யார்?''என்று கேட்க,''நீங்கள்தான்,''என்று கூறினர். இப்போது பேராசிரியர்,நிரூபிக்க முடியுமா என்று கேட்ட மாணவனிடம் கேட்டார்,''அப்போது நான் தானே உலகின் சிறந்த மனிதன்?''

 

No comments:

Post a Comment