நேற்று அலுவலகம் முடிந்து வீட்டிற்க்கு செல்லும் வழியில் ஒரு சிக்னலை (Signal) கடக்கவேண்டி இருந்தது. சிக்னலின் அருகில் வரும்போது என் பக்கம் பச்சை நிற விளக்கு ஏரிந்துகொண்டிருந்தது..இன்னும் 26 நிமிடங்கள் இருந்தது..ஆகையால் நான் அதை கடக்க முற்ப்பட்டபோது எதிர் திசையிலிருக்கும் வண்டிகள் நகர ஆரம்பித்தன.. "ஐய்யயோ" யாராவது இடித்துவிடுவார்களோ" என்ற அச்சத்தில் சென்றபோது நேராக ஒரு கார் வந்து எதிர்ப் பார்த்தபடியே இடித்து நின்றது. வண்டியை பேலன்ஸ் செய்வதற்குள் என் வாகனம் கீழே விழுந்தது..நல்ல வேலையாக நான் விழவில்லை..காயமும் இல்லை..
காரை ஓட்டி வந்தவரிடம் " என்னங்க அவரசரம்..அதான் உங்களுக்கு ரெட் சிக்னல்தானே இருக்கு, அதுக்குள்ள வந்து இடிச்சீட்டீங்களே" என்றவுடன்,
காரில் இருந்தவர் கடுப்பாகி " சரி வழியை விடுங்க" என்று சத்தமிட்டார்.
எனக்கு சுர்ரென்று கோவம்..ஒரு மன்னிப்பு கூட கேட்க்காமல் ஓலமிடுகிறாரே என்று நானும் " என் சிக்னல்தானே போட்டு இருக்கு எதுக்கு வந்தீங்க" என்று கேட்டேன்..
உடனே அவர் " எல்லோரும் நகர ஆரம்பித்தார்கள், நானும் நகர ஆரம்பித்தேன்..இதிலென்ன தவறு, பெரிய சட்டம் பேசுகிறாய்" என்றார் கூலாக..
திரும்பவும் கோவம் தலைக்கேறியது எனக்கு.. உடனே நான் "யோவ், நீ எல்லாம் படிச்சவன் தானே...ரெட் சிக்னல் இருந்தா கடக்க கூடாதென்று அறிவில்லையா?? அடுத்தவன் பீ தின்னா, நீயும் தின்னுடுவியா?? சட்டம் எல்லாம் பேசவில்லை..நீ இடிச்சு நான் செத்து போயிருந்தனா, சட்டத்துகிட்ட நீ பேசி இருப்ப, என் சாவுக்கு என்ன பதில் சொல்லுவ" என்று திட்டியவுடன் கொஞ்சம் கூட்டம் அதிகமாகி என்னையை சமாதான படுத்திய போது கடுங்கோவத்துடன் கீழே கிடந்த வண்டியை எடுத்துகொண்டு கிளம்பினேன்.
#தோழர்களே, நண்பர்களே, உங்களுக்கான சிகனல் இருக்கும்போது மட்டும் உங்கள் பாதையை கடக்க முயற்ச்சியுங்கள்..மனித உயிர் விலை மதிப்பில்லாதது.!
அரிது அரிது இவ்வுலகில் ஒரு உயிராய் பிறப்பது அரிது..
அதிலும் மானிடனாய் பிறப்பது அரிது.!
நன்றி : Surya Born To Win

No comments:
Post a Comment