”” பரதேசி”” தங்கராஜ்..
******************
மூணாறு தேயிலைத் தோட்டங்களில் செங்குத்தான பகுதிகள், சாய்வான பகுதிகள், விளிம்புகள் என்று சகல இடங்களிலும் தேயிலையைப் பயிரிட்டிருக்கிறார்கள்.
சிறிது நேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தால் நம் தலை மீதும் ஒரு செடியை நட்டுவிடுவார்கள் போல!
இப்படியெல்லாம் எப்படி நட முடிகிறது, எப்படித் தேயிலைகளைப் பறிப்பார்கள் என்று தங்கராஜிடம் கேட்டபோது, ’முடியுது, முடியலைங்கிற பேச்சுக்கு இடமில்லை. நடச் சொன்னால் நடணும். நடும்போது உருண்டு விழுந்தால், ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போவாங்க’ என்றார்.
தேயிலை எஸ்டேட்டுக்குள் இருந்த தங்கராஜ் வீட்டைப் பார்க்கச் சென்றோம். ஆஸ்பெஸ்டாஸ் போட்ட சிறிய வீடுகள் வரிசையாக இருந்தன. வாசல் சுத்தமாகவும் சில பூச்செடிகளுடன் அழகாகவும் இருந்தது. ஒரு பெரிய கட்டில், ஒரு பீரோவுடன் இருந்த அந்த ஹாலில் நான்கு பேர் அமரும் அளவுக்கு இடம் இருந்தது. மிகச் சிறிய சமையலறை. பின்புறம் குளியலறையுடன் கூடிய கழிப்பறை. மகன் கல்லூரியில் படிப்பதாகவும் மகளுக்குத் திருமண ஏற்பாடு செய்வதாகவும் சொன்னார்.
‘தேயிலைத் தோட்டத்தில் 25 வருஷம் வேலை செஞ்சிட்டு விட்டுட்டேன். வருமானம் கம்மி; வேலை அதிகம். இப்ப பக்கத்தில் இருக்கிற ஹோட்டல்களில்தான் வேலை செய்யறேன். என் மனைவி இன்னும் தேயிலைப் பறிக்கத்தான் போறா. அவளும் போகலைன்னா இந்த வீட்டை நாங்க காலி பண்ணணும். வீட்டுக்கு ரெண்டு பேர் இவ்வளவு வருஷம் வேலை செஞ்சும் இந்த வீட்டை எங்களுக்குத் தர மாட்டாங்க. வேலைக்குப் போக முடியாதவங்க வீட்டு மேல கேஸ் போட்டுடுவாங்க. அது பத்து வருஷம் நடக்கும். இப்படித்தான் எங்க காலம் ஓடுது.
இவங்க குடுக்கிற அரிசி மட்டும்தான் நல்லா இருக்கும். மத்தபடி ரேஷன் பொருள்களை வாங்கறதில்லை. அவங்க ஆஸ்பத்திரி பக்கம் தலை வச்சும் படுக்கிறதில்லை. மாசத்துக்கு 5,500 ரூபாய்க்குள்ள சம்பளம் வரும். அரிசி, வீட்டு வாடகை, லோன் எல்லாம் போக நாலாயிரம் வந்தாலே பெரிய விஷயம்.
என் மக இப்பத்தான் ஏலக்காட்டுக்கு வேலைக்குப் போறா. என்னை விட அதிகம் சம்பாதிக்கிறா! அந்தக் காலத்தில இந்த வேலை ரொம்பக் கொடூரமா இருந்திருக்கு. இப்ப யூனியன் இருக்கிறதால எவ்வளவோ எங்களுக்குப் பாதுகாப்பு இருக்கு.
இப்ப எல்லாம் வேலைக்குச் சேர்க்கும்போது யூனியன்ல சேரக்கூடாதுன்னு சொல்லிட்டுத்தான் சேர்க்கறாங்க. எங்க பையன் படிக்கிறதால வேறு வேலைக்குப் போயிடுவான். ஆனா வறுமை இருக்கிற வரைக்கும் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய ஆள்கள் தடையில்லாமல் கிடைச்சிட்டேதான் இருப்பாங்க!'
கடந்த 60, 70 ஆண்டுகளில் தேயிலைகளைப் பறிப்பதற்கு கருவிகள், தேயிலைகளை பக்குவப்படுத்துவதற்கான நவீன தொழில்நுட்பங்கள் எத்தனையோ வந்திருக்கின்றன. ஆனால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைதான் இன்றும் பெரிய அளவில் முன்னேற்றம் காணவில்லை.
சுஜாதா எஸ்வி

No comments:
Post a Comment