கல்வி வியாபாரம்...


என் பிள்ளையை பள்ளியில் சேர்க்கலாம்னு அப்ளிக்கேஷன் வாங்க போயி இருந்தேன்...ஃபீஸ் எவ்வளவுன்னு விசாரிச்சா 40,000 ரூபாய் கேக்கிறாங்க.மூன்றறை வயது பிள்ளைக்கு இவ்வளவு ஃபீஸ் வாங்கி என்ன சொல்லி தர போறாங்கன்னு தெரியலை...
சென்னைல எவ்வளவுவுன்னு விசாரிச்சா பெரிய கல்வி கொள்ளையே அங்க தான் நடக்குதாம். என் தங்கச்சி தன் மூன்று வயது குழந்தைக்கு தனியார் பள்ளியில் ஒரு லட்சம் ரூபாய் பணம் கட்டி சேர்த்து இருக்காங்களாம்.இந்த பணத்துக்கு ரசீது எதுவும் தரமாட்டாங்களாம்,ஜூன் மாதம் பள்ளியில் சேர்ப்பதற்கு இந்த மாதமே பணத்தை கட்டிட வேண்டுமாம் இல்லைன்னா அட்மிசன் கிடையாதாம்...
விதைக்க வேண்டிய கல்வி இன்று பணத்துக்கு அடமாணம் வைக்கபட்டிருக்கிறது.நான் பல் மருத்துவம் படிப்பதற்கு ஒரு ஆண்டுக்கு 19,500 ரூபாய் கல்லூரியில் கட்டினேன்,இன்று என் மூன்று வயது மகனுக்கு 40,000 ரூபாய் கட்டுகிறேன்.கல்வி துறை எங்கே போய் கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை.
இன்று பல பள்ளிகளில் சிந்திக்க செய்யும் வழிகளில் பாடம் நடத்தாமல் மனப்பாடம் செய்ய சொல்லி பாடம் நடத்துகிறர்கள்.சொன்னதை சொல்லுமாம் கிளி பிள்ளை,நம் பிள்ளைகளை கிளிகளாக்கவா பள்ளிக்கு அனுப்புகிறோம்.
பிள்ளைகளுக்கு பள்ளிகள் , என்ன படிக்கிறோம் என்பதை சொல்லிக்கொடுத்து சிந்திக்க வையுங்கள் , ஏண்டா படிக்கிறோம் என்ற நிலைக்கு தள்ளாதீர்கள்...குதிரைக்கு கடிவாளம் கட்டுவது போல் பிள்ளைகளுக்கும் கடிவாளம் கட்டாதீர்கள்,நாலாப்பக்கமும் பார்க்க விடுங்கள் அவர்களை சிந்திக்க விடுங்கள்...
கற்கும் போது கல்வி கசப்பாகத்தான் இருக்கும்
கற்றப்பின் கரும்பினை போல சுவையாக இருக்கும்
இன்று கல்வி நிலையங்களே கசக்கின்றது...
தமிழ்த்தாய்க்கு 100 கோடியில் சிலை வைப்பதற்கு பதில் தமிழ் வழி கல்விக்கு வழிவகை செய்யுங்கள்.தமிழ்த்தாய் உங்களை வாழ்த்துவாள்.
அரசாங்கம் எதுஎதுக்கோ இலவசம் கொடுக்கிறது,எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி கொடு,தனியார் பள்ளிகளின் கல்வி கொள்ளையர்கள் மேல் சரியான நடவடிக்கை எடு...தரமான கல்வி கொடு.

Ilayaraja Dentist.

No comments:

Post a Comment