காமராசர் அவர்கள் முதல்வராக இருந்த போது


காமராசர் அவர்கள் முதல்வராக இருந்த போது ஒரு முறை எண்ணெய் தேய்த்துக்கொண்டு குற்றால அருவிக்கு சென்றாராம். அருவியில் யாரும் குளித்துக் கொண்டிருக்கவில்லையாம். மக்கள் கூட்டம் ஒரு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாம் காவலர்களால்.

ஏன்யா அருவி காலியா இருக்கு.? சுற்றுலாப் பயணிகள் யாரும் குளிக்கலையா என்று காமராசர் கேட்டிருக்கிறார். இல்லைங்கைய்யா, முக்கியஸ்தர்கள் வந்தால் எவரையும் அருவியில் குளிக்க அனுமதிப்பதில்லை, இது வெள்ளைக்காரன் காலத்திலிருந்து இருந்து வரும் வழக்கம் என்றார்களாம் அதிகாரிகள்.

உடனே காமராசர் கோபம் கொண்டு, இது வெள்ளைக்காரன் ஆட்சியா..? இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சியைய்யா..? மக்களுக்காகத்தாம் நாம் இருக்கிறோமே ஒழிய நமக்காக மக்கள் இல்லை, உடனே மக்களை அருவியில் குளிக்க அனுமதிங்கய்யா என்று சொல்லி விட்டு மக்களோடு மக்களாக இவரும் குளித்து மகிழ்ந்திருக்கிறார்.

அதனால்தானய்யா இவர் இன்றைக்கும் கர்மவீரர் காமராசர் என்று உள்ளன்போடு மக்களால் அழைக்கப்படுகிறார்...!

No comments:

Post a Comment