அனைவருக்கும் என் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.!!!!
பொங்கல் சிறப்புக்கள்
பொங்கல் சிறப்புக்கள்
தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாகக்
கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா.
மகரத்திருநாளாக தமிழர்களால தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்,
ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென்
ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும்
அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து
அனேகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற
உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
மகரத்திருநாள்
வரலாறு
இந்திர
விழா என்ற பெயரில் நல்ல
மழை பொழியவும், நாடு செழிக்கவும் இந்திரனை
ஆயர்கள் வழிபட்டு வந்தனர். ஆயர்கள் பக்தியோடும் பயத்தோடும்
இந்திரனை வழிபட்டனர். ஆகவே, பகவான் ஸ்ரீ
கிருஷ்ணரின் அறிவுரைப்படி ஆயர்களுக்கும் அவர்தம் ஆநிரைகளுக்கும் வளங்கள்
தரும் கோவர்த்தன மலைக்கு ஆயர்கள் மரியாதை
செய்தனர் . இதனால் கோபமுற்ற இந்திரன்
புயலாலும், மழையாலும் ஆயர்களை துன்புறுத்தினான். கோவர்த்தன
மலையை குடையாய் பிடித்து இந்திரனிடமிருந்து ஆயர்களையும் அவர் தம் ஆநிரைகளையும்
ஸ்ரீ கிருஷ்ணர் காத்தருளினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து
இந்திரனிடமிருந்து ஆயர்களையும் அவர் தம் ஆநிரைகளையும்
காத்த நாளே சூரிய நாராயண
பூஜையாகும்.இந்திரன் தன் தவறை உணர்ந்து
கண்ணனிடம் தன்னையும் மக்கள் வழிபட வேண்டும்
என்று வேண்டிக்கொண்டதால் தை 1-ம் நாள்
முன்தினம் இந்திர வழிபாடை(போகி
பண்டிகை) ஆயர்கள் கொண்டாடினர். தை
1-ம் நாள் சூரியபகவானை சூரியநாராயணராக
பாவித்து வழிபட்டனர். அதன் மறுநாள் தங்களின்
ஆநிரைகளுக்கு விழா (மாட்டுப்பொங்கல்) எடுத்து
தங்களின் உணவுகளை அவைகளுக்கு படைத்தும்,
காளைகளுடன் விளையாடியும் (ஜல்லிக்கட்டு,மஞ்சு விரட்டு) விழாவை
கொண்டாடினர். இதுவே நாளடைவில் மூன்று
தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது.
பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க
உண்மையாக இருந்து வருகிறது. இந்திர_விழா என்ற பெயரில்
இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. மணிமேகலையின் ஆரம்பமான விழாவரை காதையில் இந்திர_விழா என்ற பெயரில்
பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த விழா,காவிரி
பூம்பட்டினத்தில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இப்போது, பொங்கல், தைப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும்
பொங்கல் என்ற மூன்று நாட்கள்
மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால், அந்தக் காலத்தில்
28 நாள்கள் நடந்துள்ளதற்கான சான்றுகள் இருக்கிறது. முதன்முதலாக இந்திர விழா நடத்திய
போது அதை நாட்டு மக்களுக்கு
முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவித்தனர்.
இப்போது பொங்கல் ஊரையும், நாட்டையும்
சுத்தம் செய்வது போல அப்போதும்
நடந்துள்ளது. நகர வீதிகளில் பழைய
மணலை மாற்றி புது மணல்
பரப்பினர். காவல் தெய்வங்கள் முதல்
சிவன் கோயில்கள் வரை சிறப்புப் பூஜை
நடைப்பெற்றது. இவ்விழா நாளில் பகைமை,
பசி,நோய் நீங்க இறைவன்
பிரார்த்தனை செய்யப்பட்டது. மழைக்குரிய தெய்வம் இந்திரன், அவனை
வழிபட்டால், மாதம் மும்மாரி பெய்து
பயிர் செழிக்கும் என மக்கள் நம்பிக்கை.
பிற்காலத்தில், சூரியன் பற்றிய அறிவு
மக்கள் வந்தவுடன் சூரியன்சந்தோஷத்தை நிர்ணயிப்பவர் என்ற நம்பிக்கை வந்து,
தங்கள் கண் முன் காட்சி
தரும் அந்த கடவுள் பொங்கல்
படைத்து வழிபட்டனர். பூமி இருக்கும் நீர்
ஆவியாக்கி மேலே கொண்டு சென்று,
ஒன்றுக்குப் பத்தாக மழை பெய்விப்பார்
என்ற ரீதியில் இந்த நன்றியறிதல் தெரிவிக்கப்பட்டது.
தாங்கள் அறுவடை செய்த புது
நெல் தை முதல்நாளில் சமையல்
இந்திர விழா என்ற பெயர்
பொங்கல் என மாறியது.
உழவர் திருநாள்
பொங்கல்
விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே
கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய
இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த
கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும்
தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின்
உதவியால் ஆடி மாதம் முதல்
உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில்
வீட்டிற்குக் கொண்டு வந்து தமது
உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும்
நாளே தைப்பொங்கல்.
பொங்க வைக்கும் முறை
தைப்பொங்கலுக்குச்
சில நாள்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள்
வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்குத்
தேவையான பொருள்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை
பலர் வாங்குவர்.
நான்கு
நாள் திருவிழா
பொங்கல்
விழா நான்கு நாள் கொண்டாட்டம்
ஆகும்.
போகி
போகியன்று,
வீட்டின் கூரையில் செருகப்படும் பூலாப்பூ
போகி பண்டிகை இந்திரனுக்காக ஆயர்களால்
கொண்டாடப்படும் விழாவாகும்.
போகி என்ற சொல் இந்திரனை
குறிக்கும். போகத்தை(விளைச்சலை) தந்தவன்
போகி.
பொங்கல்
பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும்.
மார்கழி கடைசி நாளன்று போகி
கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன
புகுத்தல் வழக்கம்.ஆயர்கள் இந்திரவிழாவை
முடித்து சூரியவழிபாடை தொடர்ந்தனர்.
அக்காலத்தில்
போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி
வைக்கும் பழக்கம் இருந்தது. அப்போது
அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த
வரலாற்று அறிஞர்கள், அந்நாளைப் புத்தர் இறந்த தினமென்று
கண்டறிந்துள்ளனர்.
போகி(ஆங்கிலம்: Bhogi தெலுங்கு:భోగి) தமிழ் ஆண்டின்
மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று[1] அதாவது
பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை சனவரி 13 ஆம் நாளில் கொண்டாடப்படும்.
ஆனால் சில ஆண்டுகளில் சனவரி
14 ஆம் நாளிலும் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் இறுதி
நாளையே போகிப் பண்டிகையாக தமிழ்
நாட்காட்டியில் குறிப்பிடுகிறார்கள். பரவலாக போகிப் பண்டிகை
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில்
கொண்டாடப்படுகிறது.
இந்தநாள்
'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக்
கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை
அழித்துப் போக்கும் இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர். அந்தச்
சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. அக்கால
வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால்
நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு
நன்றி கூறும் நாள் போகி
என்போரும் உண்டு. கடந்த ஆண்டுக்கு
நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகையாகும்.
வீட்டில்
உள்ள பழைய மற்றும் தேவையில்லாத
பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல்
வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள்
போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள், வீட்டில்
தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.[2]
இவற்றோடு
பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற
வேண்டத்தகாத எண்ணங்களையும் "ருத்ர கீதை ஞான
யக்ஞம்" என அழைக்கப்படும் அக்னி
குண்டத்தில் எறிந்து பொசுக்கி வீட்டை
மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய
எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க
வேண்டும் என்பது இதில் உள்ள
தத்துவமாகும்.பல்வேறு தெய்வீக குணங்களை
தூண்டுவதன் மூலம் ஆன்மாவை உணர்தல்,
ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை
பிரதிபலிக்கிறது. பெரும் பொங்கல், மகர
சங்கராந்தி மற்றும் லோரி எனப்படும்
பண்டிகைக்கு முந்தைய நாளில் போகிப்பண்டிகை
கொண்டாடப்படுகிறது.
இதையொட்டியே
பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது
வர்ணம் பூசி வீட்டை அழகு
படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு
புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல்
சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய
காட்சியாகும்.
இல்லம்
தோறும் போகி அன்று, வைகறையில்
'நிலைப்பொங்கல்' நிகழ்வுறும். வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு,
தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி
நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை,
பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து,
கர்ப்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை
வணங்குவர். சிறு மணித்துளிகளில் இது
முடிவுறும். இதைக் குடும்பத்தலைவி நடத்துவார்.
போகிப்
பண்டிகையின் போது போளி, வடை,
பாயசம் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும்
மகரத்திருநாள்
மகரம் என்ற சொல் சூரியனை
குறிக்கும்.
பொங்குதல்
என்பதன் வினைப்பெயரே பொங்கல்.
மாட்டுப்
பொங்கல்
உழவுத்
தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே
இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர்
தெளித்தல் என்றொரு மரபு மதுரை
மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல்
! மாட்டுப் பொங்கல்!
பட்டி பெருக! பால் பானை
பொங்க! நோவும் பிணியும் தெருவோடு
போக!' என்று கூறி மாடு
பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை
தொழுவத்தில் தெளிப்பர்.
மாட்டுப்
பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின்
மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும்.
இது பட்டிப் பொங்கல் அல்லது
கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது.
மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி
தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும்
பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக்
கொண்டாடுகின்றனர்.
அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச்
சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை
குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின்
கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி,
கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை
கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில்
சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள்.
திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும்
புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு
அணிவித்தும் தயார் செய்வார்கள்.
உழவுக்கருவிகளை
சுத்தம் செய்து சந்தனம், குங்குமம்
வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து
கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத்
தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த
பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச்
சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக
எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர
தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு,
காளை, எருமை என அனைத்து
கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.
இப்போதும்
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை
பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.
காணும்
பொங்கல்
இந்நாளில்
மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச்
சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப்
பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில்
நான்காம் நாள் இடம்பெறும்.இது
பொதுவாக இந்தியாவிலேயே கொண்டாடப்படுகிறது.
காணும்
பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில்
நான்காவது நாள் இடம்பெறும் விழா
ஆகும். காணும் பொங்கலைக் கன்னிப்
பொங்கல் அல்லது கணுப் பண்டிகை
என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர்
ஆசி பெறுதல் என்பன அடங்கும்.
பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு
மரம் ஏறல் போன்ற வீர
சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள்
இடம் பெறும்.
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல்
பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை
கட்டி அதனை எடுத்து முதிய
தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து
ஆசி பெற்று அதனை கல்லில்
இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.
சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்
“தைஇத்
திங்கள் தண்கயம் படியும்” என்று
நற்றிணை
“தைஇத்
திங்கள் தண்ணிய தரினும்” என்று
குறுந்தொகை
“”தைஇத்
திங்கள் தண்கயம் போல்” என்று
புறநானூறு
“தைஇத்
திங்கள் தண்கயம் போல” என்று
ஐங்குறுநூறு
“தையில்
நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று
கலித்தொகை
No comments:
Post a Comment