காமெடிக்காக மட்டும் அல்ல!


நீதிபதி:-
உங்கள் கடையில் இரட்டை டம்ளர் முறை உள்ளதா?
கடைக்காரர்:-
நிறைய டம்ளர் இருக்குங்கய்யா.

நீதிபதி:-
அதில்லை! தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு என தனியாகவும் மற்றவர்களுக்கு என தனி தனி டம்ளர்ல கொடுப்பீங்களா?

கடைகாரர்:-
ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் வந்தா தனித்தனியா டம்ளர்லாதான் கொடுப்பேங்க.

நீதிபதி:-
அது தீண்டாமை சட்டப்படி குற்றம்னு தெரியாதா?

கடைக்காரர்:-
அய்யா ஒரே டம்ளரில் ரண்டு பேருக்கும் கொடுத்தா எப்படிங்கையா குடிப்பாங்க?

நீதிபதி:-
வேண்டுமென்றே குழப்புகிறீர்கள்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி டம்ளர் வச்சிருக்கீரீர்களா?

கடைகாரர்:-
அய்யா நான் சொந்தமா முதல் போட்டு கடைவச்சிருக்கேன் என் கடையில் வியாபாரம் எப்படி பண்ணுவது என்பது என் விருப்பம் நான் வித்தியாசமா ரண்டு டம்ளர்ல கொடுக்கரது அவங்களுக்கு அவமானம்னா வேறகடைக்கு போலாமே, என்னை இப்படித்தான் கொடுக்கனும்னு சொல்ல இவங்க யாரு?

நீதிபதி:
குற்றத்தை ஒப்புக்கொண்டதால் தண்டனை விதிக்கிறேன்.

கடைக்காரர்:
சரிங்கையா,எனக்கு அவசரமா பாத்ரூம் போகனும் உங்க பாத் ரூம்க்கு போகட்டுங்களா?

நீதிபதி:
அங்கெல்லாம் போகக்கூடாது..பொது பாத்ரூம் தனியா இருக்கு. அங்கதான் போகனும்.

கடைக்காரர்:
இங்க மட்டும் எதுக்கு ரெண்டு பாத் ரூம் 
அப்ப நாங்க தீண்ட தகாதவங்களா?
இந்த பாத்ரூம் நீங்க சொந்த செலவில் கட்டியதா? அல்லது  நீதிமன்றம் உங்கள் வீட்டின் ஒரு பகுதியா? அல்லது  இந்த அநியாயத்தை கேட்க ஒரு வழக்கறிஞருக்கு கூட தைரியம் கிடையாதா அல்லது   எல்லாருமே ஜால்ரா கோஷ்டிகள் மற்றும்  தொடை நடுங்கிகள் தானா?

அப்படி பார்த்தா கவர்மெண்டு காசுல படித்துச்சுட்டு, கவர்மென்ட் சம்பளமும் வாங்கி கொண்டு நீங்க தான் தீண்டாமையை கடை பிடிக்கறீங்க மற்றும் தூண்டி விடறீங்கனு நான் சொல்றேன் !
போலீஸ்காரய்யா நீதிபதிமேல கேஸ் போடுங்க. என்ன செலவானாலும் பரவாயில்லை...எனக்கென்று ஒரு யோக்கியமான அறிவாளி வக்கீல் கிடைக்காமல போய்டுவார். ரெண்டுல ஒண்ணு பார்த்திரேன்!

No comments:

Post a Comment