சார்! நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?
கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா.....?
கல்யாணத்துக்கு முன்னாடிதான் சொல்லுங்களேன்.....
கல்யாணத்துக்கு முன்னாடி,
எனக்கு முருகனைத்தான்
ரொம்பப் பிடிக்கும் .....
அப்போ பின்னாடி.....?
அட,
அதை ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம்
நான் வேண்டாத தெய்வமே
இல்லை.....!!?!!?!!?
-----------------------------
சத்தியவான் சாவித்திரி .....
தன் கணவனை.....
எமதர்ம ராஜாவிடமிருந்து
தன் தந்திர வரங்களால்
கடுமையாகப் போராடி மீட்டாள்.....
கதையின் கருத்து :--
ஒரு புருஷன...
பொண்டாட்டிகிட்ட இருந்து .....
எமதர்மனால கூட
காப்பாத்த முடியாது.....!!!
-----------------------------------------
மனைவி:
ஏங்க! உங்களைக்
கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு
என் புத்தியை
செருப்பாலத்தான்
அடிச்சுக்கோணும்.....!
கணவன்:
செருப்பு இந்தா இருக்கு.....!
புத்திக்கு எங்கே போவ!!??
------------------------------------------------
கணவன்:
"என்ன சமைச்சிருக்கே ...?
சாணி வரட்டி மாதிரி இருக்கு...
நல்லாவேயில்லை"......
மனைவி:
"கடவுளே! .....
இந்த மனுஷன்
இன்னும் என்னவெல்லாம்
சாப்பிட்டுப் பார்த்திருக்காரோ.....?
தெரியலையே... ஏ...ஏ... ஏ....." !
----------------------------------------------------
மனைவி என்பவள் திருக்குறள் போன்றவள்.....
அடேங்ங்ங்ங்ங்ங்ங்கப்பா!
எவ்வளவு அதிகாரங்கள்.....?
No comments:
Post a Comment