கிச்சன் டிப்ஸ்


கிச்சன் டிப்ஸ் – 1

* முட்டை உடைந்து தரையில் கொட்டி விட்டால், அந்த இடத்தில் சிறிது உப்பை தூவுங்கள். நாற்றம் இருக்காது.

* முட்டையை அடித்து ஆம்லெட் போடும்போது, சிறிது பால் கலந்து கடைந்து ஊற்றினால், ஆம்லெட் மென்மையாக இருக்கும்.

* மீனை சுத்தம் செய்வதற்கு முன், சிறிது நேரம், உப்பை போட்டு கிளறி வைக்கவும். இப்படி செய்வதால், மீனிலிருந்து வாடை வராது.

* மீனில் ஒமீகா 3 பேட்டி ஆசிட் உள்ளது. இது தரமான கொழுப்பு. ஆகையால், மீன் உணவை எந்த வயதினரும் உண்ணலாம். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் இந்த மீன் உணவை முள்நீக்கி மசித்துக் கொடுக்கலாம்.

* மஞ்சள் பொடி, உப்பு, எலுமிச்சை சாறு கலவையில், மீன் துண்டுகளைப் போட்டு வைத்தால், அதிக வாடை வராது.

* கையில் எண் ணெய் தடவிக் கொண்டு மீன் சுத்தம் செய்தால், கையில் வாடை இல்லாமல் இருக்கும். அல்லது சுத்தம் செய்த பிறகாவது, கையில் எண்ணெய் தடவ வேண்டும்.

* இறாலை உரித்துக் கழுவியதும் சிறிது நேரம் மோரில் ஊறவிட்டால், வாடை மிகவும் குறைந்து விடும். சுவையும் கூடுதலாக இருக்கும்.

* இறால் நாலு நிமிடம் வெந்தால் போதும். அதற்கு மேல் வெந்தால், ரப்பரைப் போல் அழுத்தமாகி விடும். இறால் வாயு அதிகம் உற்பத்தி செய்யும். எனவே, இறால் சமைக்கும் போது, இஞ்சியும் பூண்டும் அதிகம் சேர்க்க வேண்டும்.

* கோழியின் தோல் பகுதிக்கு அடியில், அதிக கொழுப்பு படிந்துள்ளது. எனவே, கோழி சமைக்கும் போது, அதிக கொழுப்புள்ள எண்ணெய், நெய் ஆகியவை சேர்த்து தயாரிக்கக் கூடாது.

கிச்சன் டிப்ஸ் – 2


* வெண்டைக்காய் புதியதாக இருந்தால், சமைக்கும் போது வழுவழுப்பாக இருக்கும். அதை தவிர்க்க, வெண்டைக்காய் மீது மோரையோ அல்லது புளி கரைத்த நீரையோ தெளித்தால் நன்றாக இருக்கும்.

* சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்த பிறகு, அதை பிரிஜ்ஜில் 2, 3 மணி நேரம் வைக்க வேண்டும். அதன் பின், பொரித்தோமானால், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், தனி தனியாகவும் மொர மொரப்பாகவும் இருக்கும்.

* பச்சை மிளகாய் பழுக்காமல் இருக்க, ஒரு பாட்டிலில் மிளகாயுடன் மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை போட்டு, இறுக மூடி வைக்க வேண்டும்.

* பயறு வகைகளை வாங்கியதும், அவற்றை வெறும் கடாயில் போட்டு, லேசாக சூடாக்க வேண்டும். அதன் பின், டப்பாவில் போட்டு வைத்தால், பூச்சி பிடிக்காது.

* பருப்பு ரசம் செய்றீங்களா? இரண்டு பச்சை மிளகாயை நீள வாக்கில் வெட்டி, ரசம் நுரைத்து வரும் போது போடுங்கள். அதன் சுவை சூப்பராக இருக்கும்.

* தோசை பொடி அரைக்கும் போது, ஒரு டேபிள் ஸ்பூன் சீரகத்தை வறுத்து, பருப்புடன் சேர்த்து அரைக்க வேண்டும். இப்படி செய்வதால், வாசனையாக இருப்பதுடன் எளிதில் செரிக்கும்.

* வெங்காய பக்கோடா கமகமவென்று இருக்க வேண்டுமா? பக்கோடா செய்யும் போது, பாதி வெங்காயத்தையும், சிறிது இஞ்சியையும் மிக்சியில் விழுதாய் அரைத்து, அதை மாவில் கலந்து பக்கோடா செய்யுங்கள். பிறகென்ன, வாசனை ஊரையே தூக்கும்.

* ப்ரைட் ரைஸ் மற்றும் வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது, அதனுடன் வேக வைத்த சோளத்தையும் சிறிது சேர்த்துக் கொள்ள வேண்டும். இது பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி, உணவின் சுவையும் சூப்பராக இருக்கும்.

* முள்ளங்கி, காலிபிளவர் போன்ற காய்களை வாங்கும் போது, அவற்றின் இலைகளோடு சேர்த்து வாங்க வேண்டும். அந்த இலைகளை பொடியாக நறுக்கி, பருப்பு சேர்த்து கூட்டு சமைத்து சாப்பிட நன்றாக இருக்கும். சூப் தயாரித்தும் சாப்பிடலாம்.

* அரைத்து விட்ட சாம்பார் செய்யும் போது, அரைக்க வேண்டிய சாமான்களுடன் கொஞ்சம் கசகசாவை வறுத்து அரைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.

* பாயசம் செய்யும் போது பால் திரிந்து போனால், இரண்டு சிட்டிகை சமையல் சோடாவை போட்டால் திரிந்த பால் சரியாகிவிடும்

* தயிர் பச்சடி, சாலட் என்று எது செய்தாலும், தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்ட, வாசனை சற்று தூக்கலாக இருக்கும்.

* தேங்காய் துருவும் போது, தேங்காய் ஓடும் சேர்ந்து வரும் அளவிற்கு துருவக் கூடாது. தேங்காய் ஓட்டுத்தூள் குடல் புண்களை ஏற்படுத்தும்.

* துவையல் அரைக்கும் போது, மிளகாயைத் தவிர்த்து மிளகு சேர்த்து அரைக்கலாம். கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டது மிளகு.

* துவரம்பருப்பை வேக வைக் கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.

* வெள்ளி நகைகள் வைத்திருக்கும் டப்பாவில் சிறிதளவு கற்பூரத்தை போட்டு வைத்தால் நகைகள் கறுக்காது.

* பெண்கள் மாதவிலக்கு காலத்தில் கோதுமை கஞ்சி உண்டு வந்தால், மாதவிலக்கு ஒழுங் காக நடைபெறும்.

கிச்சன் டிப்ஸ் – 3


காய்கறிகளை நறுக்கிய உடனேயே அவற்றை சமைக்க வேண்டும். அப்படி சமைக்காமல், வெகுநேரம் வைத்திருந்தால், காற்று பட்டு, அவற்றில் உள்ள அனைத்து சத்துக்களும் போய்விடும். சத்துக்கள் போன காய்கறிகளை உண்பதால் எந்த பலனும் இல்லை. எனவே, நறுக்கிய உடனே சமைத்துவிட வேண்டும்.
காய்கறிகள் வாடிப் போய் விட்டால் கவலை வேண்டாம். பிரிஜ்ஜிலிருந்து ஜில்லென்ற தண்ணீரை எடுத்து, அதில், சில துளிகள் எலுமிச்சை சாற்றை சேர்த்து, அந்த தண்ணீரில் வாடிய காய்கறிகளைப் போட்டு வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து அவற்றை எடுத் தால், அப்போது தான் வாங்கியது போன்று புத்தம் புதிதாய் தோற்றமளிக்கும்.

* பச்சை குடைமிளகாய் சில நேரம் காரமாக இருக்கும். அந்த காரத்தை போக்குவதற்கு, விதைகளை நீக்கிவிட வேண்டும். பிறகு, அதை சாம்பாரில் போடவோ, கறியாக வதக்கவோ செய்யலாம். புளிச்சாறு அல்லது மோரில் ஊறவைத்து சமைத்தாலும், காரம் தணிந்து விடும்.

* சிலர் பாகற்காயை வெட்டிய பின் வேக வைத்து, அந்த தண்ணீரை கொட்டி விடுவர். இவ்வாறு செய்தால், பாகற்காயிலுள்ள சத்து வீணாகி விடும். அதற்கு பதில், பாகற்காயின் மேல் முள்ளை லேசாக நீக்கிவிட்டு, இரண்டாகப் பிளந்து, பாகற்காயின் உள்ளேயும், வெளியேயும் சிறிது உப்பையும், மஞ்சள் பொடியையும் தடவி அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன்பின், அதை கழுவி உபயோகித்தால், கசப்பு குறைந்திருக்கும்.

* சமையலுக்கு உபயோகிக்கும் பெருங்காயத்தை, முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் அந்த நீரை உபயோகித்தால், மணம் சீராக அமையும். பெருங்காயமும் குறைவாக செலவாகும்.

* பெருங்காயம் கல் போன்று இருந்தால், உடைப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். எனவே, வெறும் கடாயை அடுப்பில் வைத்து, காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதை கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து போட்டு விட்டால், தனித் தனியாக, ஆறியவுடன் டப்பியில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.

* காலிபிளவர், முள்ளங்கி, டர்னிப், முட்டைகோஸ் ஆகியவற்றை வாங்கி சில நாட்களுக்கு பின் சமைத்தால், சகிக்க முடியாத வாடை ஏற்படும். இதை தவிர்க்க, சிறிது எலுமிச்சை சாற்றையும், சர்க்கரையையும் கலந்து சமைக்க வேண்டும். அவ்வாறு சமைத்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

* காலிபிளவரை, சமைப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன், இலைகளை நீக்கிவிட்டு, ஒரு பிடி உப்பு கலந்த நீரில், குடை மாதிரி அமிழ்ந்திருக் கும்படி, வைக்க வேண்டும். இப்படி செய்தால், கண்ணுக்கு எளிதில் தெரியாத பூச்சிகள் அனைத்தும் நீரில் மிதந்து வரும். அதன் பின் காலிபிளவரை எடுத்து, நல்ல தண்ணீரில் கழுவி விட்டு உபயோகிக்கவும்.

* சில கத்திரிக்காய்கள் கடுப்பு குணம் கொண்டு இருக்கும். சிறிது சுண்ணாம்பு கலந்த நீரில், நறுக்கிய கத்திரிக்காய்களை, சிறிது நேரம் போட்டு வைத்து, பிறகு கழுவி உபயோகித்தால், கத்திரிக்காயின் கடுப்பு தன்மை போய்விடும்.

* தோசை சுடும்போது, தோசை கல்லிலிருந்து தோசை எடுக்க வராமல் ஒட்டிக் கொள்ளும். அத்தகைய சமயங்களில், ஒரு வெங்காயத்தை பாதியாக வெட்டி, தோசை கல்லில் ஒவ்வொரு முறையும் தோசை வார்ப்பதற்கு முன் தேய்த்தால், சுலபமாக தோசை எடுக்க வரும்.

No comments:

Post a Comment