மாலை நேர வேளையிலே,
தாவணி மூடிய முகத்தோடு,
நடந்து சொன்றோம்
நானும் அவளும்.
மெல்லிய அலையிலே
துள்ளிய குருமணல்
அவள் பஞ்சுக் கால்களில்
எட்டியெட்டிப் பற்றியது.
மின்னல் வேகத்தில்
விரந்து வந்த நண்டுக் கூட்டம்
தொட்டுப் பார்க்கும் ஆசை கொண்டு
நெருங்கி அவளை ஓடிவர,
கத்திக் கதறி பயந்தோடி வந்து
கட்டியணைத்தாள் என்னை.
சிரித்த படி நானும் நிற்க
பஞ்சு விரல்களால்
அஞ்சியஞ்சித் தீண்டினாள்.
காற்கொலுசின் சத்தம் கேட்டு
தரைக்கு வந்த சிற்றலைகள்
முத்தமிட்டுச் சென்றது
அவள் பாதங்களை.
மணல் மீது வெளி வந்த சிப்பிகளை
ஆசையாய் சேர்த்தாள் அன்று.
வற்றாத கடலாக
பொங்கியது ஆனந்தம்.
இன்று
அவளின்றி நான் சென்றேன்
அத்தனையும் மாறி விட்டது,
என் மூச்சும் நின்று விட்டது.
இடைவெளி இல்லாத நெருக்கத்தில்
காதலர்கள் கால்சுவடுகள்……………….
அவளின்றி நான்
பாதம் வைப்பது எங்கே..?
No comments:
Post a Comment