இன்று குடியரசு
தினம்;
சுகம் சுகம்
அதை உணர்ந்திடும்
மனம்;
ஆதிக்கம் படைத்த
முடியாட்சி - அது
முடிந்துபோன
கதையாச்சு;
அடிமை விலங்கை
உடைச்சாச்சு - இது
ஆனந்தமான
மக்களாட்சி;
உரிமை என்பது நம்
உடைமை
உண்மை பேசுவதே
வலிமை;
வாழ்வில் தேவை
என்றும் எளிமை
எதிலும் கொள்ளாது
இருப்போம் பெறாமை;
சுதந்திரம்
கண்டது நம் பொறுமை - என்றும்
சுகத்தினை
அளித்திடுவது ஒருமை;
நல் தலைவர்
அமைவது பெருமை - அதற்கு
அனைவரும்
வாக்கிடுவது நம் கடமை;
ஜெய்ஹிந்த்...!
தினம் தினம்
இன்று குடியரசு
தினம்
சுகம் சுகம்
அதை உணர்ந்திடும்
மனம்...!!
நன்றி: சிறப்பு கவிஞர் "மு.வித்யாசன்" மற்றும் ஈகரை தளம்.
No comments:
Post a Comment