வீட்டிற்கு விருந்தினர் வந்ததும், சொம்பு நிறைய தண்ணீர் கொடுக்கும் வழக்கம் நம் முன்னோரிடம் உண்டு. அது ஏன் என்ற ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?


தண்ணீர் மனிதர்களின் மனநிலையை மாற்றும் அற்புதமான சக்தி கொண்டது. முதலில் பயண களைப்பை போக்கி விடும். இரண்டாவதாக தண்ணீர் அருந்துபவரின் மனநிலையை சாந்தப்படுத்தும். 

கோபதாபத்துடனோ, வெறுப்புணர்ச்சியுடனோ வருபவர்கள் தண்ணீர் அருந்தினால் சாந்தமாகிப் போவார்கள். 

பதற்றத்துடன் வருபவர்கள் மனநிலையில் தளர்வு கண்டு இயல்பு நிலையை அடைவார்கள்.

யாராவது சண்டைக்கு வந்தால் கூட 'மொதல்ல தண்ணி குடிப்பா, அப்புறம் எல்லாத்தையும் பேசிக்கலாம்" என்று அக்கம் பக்கம் இருப்பவர்கள் சமாதானம் செய்வார்கள். 

தண்ணீர் குடிப்பதால் சண்டையிடும் நோக்கத்துடன் வந்தாலும் அவர்களின் ஆத்திரம் வெகுவாய் குறைந்துவிடும் என்பதே இதற்கு காரணம். 

இதற்காகவே விருந்தினர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் பழக்கம் உருவானது. விருந்தினரின் மனநிலை எதுவாக இருந்தாலும், அது கேடுமிக்கதாக இருந்தாலும் தமது குடும்பத்தை தாக்காமல் காத்துவிடக்கூடியது. 

இந்தத் தண்ணீர் கொடுக்கும் வழக்கம் குறைந்து வருகிறது. ஓடிப்போய் ஒரு குளிர்பானம் கொடுப்பது கௌரவமாக கருதப்படுவது கசப்பான உண்மை.

No comments:

Post a Comment