கெட்ட வார்த்தையா??! கேட்ட வார்த்தையா??!


குழந்தைகள் உள்ள பெற்றோர்களுக்கான பதிவு இது..

வீட்டில் கணவன், மனைவி இடையே சண்டை நடந்து முடிந்த நிலையில்,

மகன்: அம்மா.,அம்மா, "நாய்"னா என்னது மா?

அம்மா: உங்க அப்பாதான்டா "நாய்".

மகன் : அப்பா.,அப்பா., "பேய்"னா என்னபா?

அப்பா: உங்க அம்மாதான்டா "பேய்"

மகன்: "முண்டம்"னா என்னபா?

அப்பா: நம்ம வீட்டுல கிடக்குதே "நாற்காலி", அதான்டா 'முண்டம்'

மகன் : "விஷம்"னா என்னபா?

அப்பா : உங்க அம்மா காலைல குடிக்க காபி தாராலே அதான் 'விஷம்'

மகன் : "தண்டம்"னா என்னபா?

அப்பா : நம்ம வீட்டுக்கு விருந்தாளினு சொல்லிட்டு வாராங்களே அவங்கதான் 'தண்டம்'..

அம்மா கடைக்கு போறாங்க.

அப்பா தோட்டத்துக்கு போறாங்க.

பையன் மட்டும் வீட்ல தனியா இருக்கான்!!!!

இந்த நேரத்துல அவங்க சொந்தகாரங்க வீட்டுக்கு வாராங்க, இப்பா நம்ம பையனின் உபசரிப்பு எப்படி இருந்ததுன்னா,
வாருங்கள் தண்டங்களே, வந்து முண்டத்தில் அமருங்கள்.

பேய் கடைக்கு சென்றுருக்குது!

நாய் தோட்டத்திற்கு சென்றுருக்குது!
உங்களுக்கு அருந்த சூடாக விஷம் கொண்டு வருகிறேன்,....
!!!!?????????!!!!

சொந்தகாரங்க எடுத்தாங்க பாருங்க ஓட்டம்!!!!

குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை.. 

கேட்ட வார்த்தைகளை தான் பேசுவார்கள்.


எனவே 
குழந்தைகள் முன் மிகுந்த கவனமாகவும் மரியாதையுடனும் நடந்திடுவோமே..


உங்க‌ள் குழந்தையை மற்ற குழந்தையோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்!!

அவர்கள் மற்றப் பெற்றோரோடு உங்களை ஒப்பிட்டுப் பார்த்து விட்டால்..... !??!!!!!

No comments:

Post a Comment