இரத்த சோகை என்றால் என்ன?

இரத்த சோகை என்றால் என்ன?

இரத்த சோகை என்பது, உடலில் ஹீமோகுளோபின் அல்லது இரத்தச் சிவப்பு அணுக்கள் குறைவுபடுவதே. ஹீமோகுளோபின் என்பது, திசுக்களுக்கு ஒக்சிஜனைக் கொண்டுசெல்லும், இரத்தச் சிவப்பு அணுக்களிலுள்ள (RBC) இரும்புச் சத்து நிறைந்த புரதமாகும்.

ஒருவரின் இரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவு மிகக் குறைவுபடும்போது இரத்த சோகை ஏற்படுகிறது. அதாவது உடலில் போதியளவு ஒக்சிஜன் வழங்கப்படாதிருக்கும் நிலையாகும். இது உடல் வெளிறுதல், களைப்பு அல்லது சோர்வு, மற்றும் உடற் பலவீனத்தை ஏற்படுத்தலாம்.

இரத்த சோகை ஒரு குறுகிய காலத்துக்கு அல்லது ஒரு நீண்ட காலத்துக்கு நீடிக்கலாம். தீவிரம் குறைந்த நிலைமைகளில், உணவு முறையில் ஒரு எளிமையான மாற்றம் தான் சிகிச்சையாக அளிக்கப்படுகிறது.தீவிரம் கூடிய நிலைகளுக்கு மருத்துவச் சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.
இரத்த சோகைக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

இரத்த சோகைக்கான அறிகுறிகள் அதன் கடுமை, ஹீமோகுளோபின் எவ்வளவு விரைவாகக் குறைகிறது மற்றும் அதற்கான காரணம் என்ன என்பனவற்றை பொறுத்திருக்கிறது. ஒரு பிள்ளையின் உடல் எவ்வளவு நன்றாக ஹீமோகுளோபினின் தாழ்ந்த நிலையைச் சமாளிக்கின்றது என்பதிலும் தங்கியுள்ளது. அறிகுறிகள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

இரத்தத்தின் சிவப்பு நிறத்துக்கு ஹீமோகுளோபின் தான் காரணமாக இருப்பதால், தோல் வெளிறுதல்
உடலில் ஒக்சிஜனின் அளவு குறைக்கப்பட்டதால், உடலில் சக்தி குறைவுபடுதல்
உடலில் ஒக்சிஜனின் அளவு குறைந்ததால், உடற்பயிற்சி செய்தபின் அல்லது விளையாடிய பின் விரைவான சுவாசம்


மிகவும் பொதுவாக, இரத்தத்தில் போதியளவு இரும்புச் சத்து இல்லாதிருப்பதால் இரத்த சோகை ஏற்படுகிறது.
உங்கள் பிள்ளை அடிக்கடி களைப்படைந்து, பெலவீனமாக மற்றும் வெளிறி இருந்தால் இரத்த சோகைக்காக உங்கள் மருத்துவரைச் சந்திக்கவும்.
உங்கள் குழந்தை இன்னும் திட உணவுகள் உண்ணத் தொடங்காவிட்டால் குழந்தை ஃபோர்மூலாக்கள் இரும்பு சத்தால் நிறைந்திருக்கவேண்டும்.
இறைச்சி மற்றும் பச்சைக் காய்கறிகள் உட்பட, இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவும்.
................................................................................................................................................................

No comments:

Post a Comment