பருவால் தொல்லையா?



இளம் வயதினருக்கு 'பரு' என்ற சொல் மிகுந்த இன்னலைத் தரக்கூடியதாக இருக்கிறது. பருக்களை விரட்டுவதற்கு அதிக சிரத்தை மேற்கொண்டு, விளம்பரங்களில் காட்டப்படுகின்ற 'க்ரீம்'களை பயன்படுத்துவர்.
ஆனால், சிலநேரங்களில் எதிர்வினைகள் ஏற்பட்டு மேலும் அவதிக்கு ஆளாக நேரிடும். இதுபோன்ற சமயங்களில் நமக்கு உதவி புரிவதே இயற்கை வைத்தியம்.
பருக்களை விரட்டி முகப்பொலிவை கூட்டும் பொருட்களில் சிறந்தது வெட்டிவேர் என்றால், அது மிகையாகாது. வெட்டி வேரில் பல்வேறு மருத்துவப் பயன்கள் இருப்பினும், முகப்பருவை போக்குவதற்கு உகந்ததாக காணப்படுகிறது.
முதலில் வெட்டி வேரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி தூளாக்கிக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவுக்கு வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன், கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றினை கொதிநீரில் கலந்து முந்தின நாள் இரவே ஊறவைத்து விடவேண்டும்.
அதனை, மறுநாள் நன்றாக அரைத்து, அந்த விழுதுகளை பருக்கள் மீது முழுமையாக தடவேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து ஒரு நாள் தவிர்த்து ஒருநாள் செய்து வந்தால், பருக்கள் மறைந்துவிடுவதோடு, முகப்பொலிவும் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment