ஒருவரது உடல் நலத்தை கண்கள் சொல்லி விடும். கண்களும் அதற்குக் கீழ் உள்ள தோல் பகுதியும்பளிச்சென இருப்பது அவசியம் இந்த இரண்டுமே உங்கள் உடல் நலத்தின் கண்ணாடி எனலாம்.
நவீன வாழ்க்கை முறையில் பரபரப்பு, மன அழுத்தம் அதிகம் ஆகிய காரணங்களால் உணவுமுறைகள் மாறி விடுகின்றன. இதனால் கண்கள் ஒளியிழந்து அதைச் சுற்றிலும் கரு வளையம்ஏற்படுகிறது. மேலும் கண் புடைத்தலும் ஏற்படுகிறது. இவற்றைத் தடுத்துக்கொள்ள விற்றமின் ஏ நிறைந்த உணவைச் சாப்பிட வேண்டும். பப்பாளி, முட்டை, மீன், பால், கீரைகள் போன்ற உணவுகளில் விற்றமின் ஏ சத்து அதிகம். இவை கண்களுக்கு நல்லது.
குளிர்ந்த நீரில் எப்போதும் கண்களையும் முகத்தையும் கழுவுங்கள். கரு வளையம் களைய, வெட்டிய வெள்ளரிக்காயை வட்ட மாக கண்களை மூடி இமை மீது வைக்கவும்
வெதுவெதுப்பான பாலில் பஞ்சினை நனைத்து, 15 நிமிஷங்களுக்கு கண் மீது வைக் கவும் கண்களைச் சுற்றியுள்ள தசைகளை மென் மையாக மசாஜ் செய்வதன் மூலம் கண்கள் களைப்பு நீங்கி புத்துணர்ச்சி பெறும் பகலில் சிறிது நேரம் உறங்கி விழிக்கலாம்
தினசரி ஐந்து முறை சிறு சிறு பயிற்சிகளை கண் களுக்கு அளிக்கலாம். கண்களை மெதுவாக மூடி பின்னர் தூரத்திலிருக்கும் ஒரு பொரு ளைப் பார்க்கலாம். பிறகு கை தூரத்திலுள்ள ஒரு பொருளைப் பார்க்கலாம். தூங்கச் செல்வ தற்கு முன் முகத்தை நன்கு கழுவுவது கண்க ளுக்கு அழகூட்டும்.
No comments:
Post a Comment