பாகனை ஏன் கொல்கிறது யானை?



கோடை வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க கேரளத்தில் பாகன்களின் மரணமும் அதிகரிக்கிறது. தனியார் தொலைக்காட்சிகளில் இதைப்பார்த்தவர்களுக்கு விலங்கு கொடூரமாகத் தெரியலாம். யானைகளின் தும்பிக்கை ஆசிர்வாதத்திற்கு, பயத்தையும் மீறிதலைகுனிபவர் பலர். பாகன்களுக்கு அதுஒருபணவேட்டை. சூடாறுமுன் யானையின் சாணத்தை மிதித்தால் காய்ச்சல் வராதுஎன்பதுகேரளத்தவரின் நம்பிக்கை. யானைமுடியைஉடலோடுதொடுமாறு கட்டிக்கொண்டால், பேய்பிசாசுஅண்டாது; ஐஸ்வர்யம் பொங்கும் என்பதுஐதீகம். கேரளமாநிலத்திலேயே அதிகப்படியான யானைகள் உள்ளன. எனவேதான் யானைச்செய்திகளும் அம்மாநிலத்தில் இருந்து அதிகம்வருகின்றன. அம்மாநிலக் கலாசாரப் பாரம்பரியத்தில் யானைகளுக்கு சிறப்பிடமுண்டு. பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் யானைஎழுன்னுளிப்பு கட்டாயமானதாகும். பலயானைகள் நகையழகு பரிவாரத்துடன் பட்டங்கட்டி கஜகம்பீரத்துடன் தலையாட்டி நிற்பது கண்கொள்ளாக்காட்சி. யானைஒன்றுக்கு ஒருநாள் வாடகைகுறைந்தது ரூ. 5000.

யானை ஏன்பாகனைக் கொல்கிறது? யானைகளைப் புரிந்து நடக்கயானைரசிகனாகிய மனிதனுக்குத் தெரியவில்லை என்பதேமுதல்காரணம். இன்றுயானைகளுக்குக் காட்டிலும் நாட்டிலும் பாதுகாப்பு இல்லை. யானைஒருகாட்டுவிலங்கு. அடிக்கும் அச்சுறுத்தலுக்கும் பயந்தேஅதுசிலகாரியங்களைச் செய்கிறது. மற்றவிலங்குகளைவிட சற்றுஅதிகமாகவே யானைகள் மனிதகொடூரத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன. ஒருயானைக்கு இரண்டுபாகன்கள் உண்டு. யானைகளை நல்லவர்களாக்குவதும் கொலைவெறியர்களாக்குவதும் பாகன்களையும் பாகன்களின் செயல்களையும் பொறுத்தே அமைகிறது. ஒருநல்லபாகன்எப்போதும் யானையின் நல்லநண்பனாகவும் இருப்பார். யானைக்கும் இதுபுரிந்து அதுதிருப்தி தெரிவிக்கும். சம்பவங்கள் எதிர்மறையானால் விளைவும் எதிர்மறையாகவே இருக்கும். முதற்பாகனாக வருவதற்கு முன், இரண்டாம் பாகனாகஇருந்து 5 ஆண்டுகள் தீவிரஅனுபவம் பெற்றிருக்க வேண்டும். யானையைத் தொடாதவர்களும் யானைகளின் மனோபாவம் புரியாதவர்களும் தொழிலுக்காகப் பாகன்களாக மாறிவரும்போது, செய்கைகள் கொடூரங்களாக மாறிமனிதஓலங்கள் டி.வி. காட்சிகளில் தெரியஆரம்பிக்கின்றன. தலைவர்கள் வருகையின்போது கொளுத்தும் வெயிலில் பள்ளிக்குழந்தைகள் வரவேற்க நிற்கும் ஒருநாள் காட்சிநம்மிடம் பலகண்டனங்களைப் பெறுகிறது. வெப்பத்தைக் கிரகிக்கும் கருப்புத்தோலையுடைய, மென்மையான பாதங்கொண்ட யானையைப் பலமணிநேரம், பலநாள்கள் தார்இளகும்சாலையில் நிற்கவைப்பதும் கொண்டுபோவதும், கொடூரம் இல்லையா? வனங்களுக்குள் குளுமையான சூழ்நிலையில் உலாவியும் குட்டைகளுக்குள் உருண்டு புரண்டும் சுகம்அனுபவித்த யானைகளை மனிதனின் சுயதேவைக்காக அடக்குமுறையில் அல்லலுறச் செய்வது நியாயந்தானா?

வெறிநாய் என்பதுபோலயானைக்கும் மதம்பிடித்தல் மனிதனுக்குக் கிலியைஏற்படுத்துவதாகும். மதச்சுரப்பி என்பதுயானைகளுக்கே உரியது. விஞ்ஞானத்தின்படி யானையின் தலையில் இருபுறமும் காதிற்கும் கண்ணிற்குமிடையே மதச்சுரப்பி அமைந்துள்ளது. வெளிப்புறத்தில் சிறுகீறல் போன்றுஇதுகாட்சியளிக்கும். இதுசெயல்படும் நாள்களில் அப்பகுதியைச் சுற்றிநீர்வீக்கம் ஏற்பட்டு பசைபோன்ற கருப்புத்திரவம் அதிலிருந்து வழியத்தொடங்கும். இம்மதக்காலத்தின் பராமரிப்பு முறையைப் பொறுத்தே மனிதஉயிர், குறிப்பாக பாகனின் உயிர்ப்பாதுகாப்பு அமைகிறது. மதநீர்15 நாள்கள் முதல்90 நாள்கள் வரைஒழுகுகிறது. கீழ்ப்படியாமை, தப்பித்து ஓடும்பழக்கம், மனிதருடன் பகை, எதையும் அழிக்கும் மனோபாவம் போன்றவை மதக்காலச் செயல்கள். சராசரியாக யானைகளுக்கு 20-25 வயதின் போதேமதம்பிடித்தல் உண்டாகிறது. தொடர்ந்து 60-65 வயது வரைஆண்டுக்கு ஒருமுறையோ அல்லதுஇருமுறையோ இதுஏற்படுகிறது. ஆசியயானைகளில் டிசம்பர் முதல்ஏப்ரல்வரையிலான காலங்களிலேயே மதம்அதிகமாக ஏற்படுகிறது. காட்டுயானையிலும் நாட்டுயானையிலும் மதம்ஏற்படும். மதத்தின் உச்சநிலையை அடைந்தயானையாரையும் அருகில்வர அனுமதிக்காது. தீவனம்உண்ணாது. கையில்கிட்டிய எதையும் எடுத்து எதிரில் நிற்பவரை நோக்கிஎறியும். மனிதனைப் பொறுத்தமட்டில் மதக்காலமும் மற்றகாலமும் ஒரேகணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதாலேயே உயிருக்கும் உடைமைக்கும் இழப்புஏற்படுகிறது.

மதங்கொண்ட யானையின் உடலில்குளுமையை ஏற்படுத்த வேண்டும். குளிப்பாட்டியும் குடிநீர் அளித்தும் வரவேண்டும். வெயி#ல் கொண்டு செல்லக்கூடாது. வேலையில் ஈடுபடுத்தக்கூடாது. கட்டியிட்டு ஓய்வுகொடுத்து மூன்றுமாதம் பாரமரிக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக விழாமற்றும் பண்டிகைக் காலங்களும் யானைகளுக்கு மதம்பிடிக்கும் காலமும் டிசம்பர் முதல்ஏப்ரலுக்குள்ளேயே அடங்குகின்றன. நாளொன்றுக்கு ரூ. 5000 நட்டம்வீதம்3 மாதத்துக்கு ரூ. 4.5 லட்சம்எனக்கணக்குப் பார்க்கக்கூடாது. ரூ. 10 லட்சம், 15 லட்சம்எனக்கொடுத்து யானைவாங்கிவளர்ப்போருக்கு இந்நட்டம் பெரியதாக இருந்தாலும் மதம்கொண்ட யானையால் ஏற்படும் உயிருக்கும் உடைமைக்குமான இழப்புஅதைவிடஅதிகமல்லவா!

காட்டில் விரும்பியவற்றை ருசித்து உண்டு, இளைப்பாறிய யானைகளுக்கு நாட்டில் அவைசெய்யும் வேலையைக் கருத்திற்கொண்டு அரைவயிறு நிறையும் அளவுக்குக்கூட உணவுஅளிக்கப்படுவதில்லை. பாகனேஇதற்குக் காரணமென அறிவுக் கூர்மைஉள்ளயானைகள் சினங்கொள்கின்றன. பாகனின் நிலைமையோ இதைவிடமோசம். நிரந்தரத் தொழிலோ, காப்பீடு வசதியோஇல்லை. இறுதியில் யானையின் சினம்பாகனின் கொலையில் முடிகிறது. யானைச்சாவுகளையும் யானைகளின் மூலமானமனிதமரணங்களையும் எவ்வாறு தவிர்ப்பது? வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் முதல்பிரிவில் சேர்க்கப்பட்ட விலங்கு யானையாகும். யானையைத் தொந்தரவு செய்தால் 6 ஆண்டுகடுங்காவல் தண்டனையுண்டு. இச்சட்டத்தின்படி வெயிலில் அலைக்கழித்தல், பட்டினி போடுதல், காயமேற்படுத்துதல் போன்றவற்றை ஏற்படுத்துவோர் குற்றவாளிகளாவர்.

யானை வளர்ப்பில் முறையான அக்கறையுடையோரையும் பயிற்சி பெற்றோரையும் மட்டுமே பாகன்களாக ஆக்கவேண்டும். பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் யானைகளை உபயோகப்படுத்துமுன் அவற்றின் உடல்நிலை குறித்து கால்நடைமருத்துவரின் நலச்சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்படவேண்டும். யானைகளுக்கு மதம்பிடித்துள்ளதா, இல்லையா என்பதைஅறிந்து கொள்ளஇதுஉதவும். யானைகளைத் தொடர்ச்சியாக மூன்றுமணிநேரத்துக்கு நடத்திச் செல்லக் கூடாது. நாள்ஒன்றுக்கு 30 கிலோமீட்டருக்கு அதிகமாக நடத்திக் கொண்டுசெல்லக்கூடாது. தினமும் குளிப்பாட்ட வேண்டும். பாகனுக்குக் காப்பீட்டு வசதியையானைஉரிமையாளர் செய்யவேண்டும்.


யானைகாட்டுவிலங்குதான். மனிதனின் சிலசுயதேவைகளுக்கும் கொடூரங்களுக்கும் பயந்தேபலகாரியங்களைச் செய்கிறது. உசுப்பேற்றிவிட்டால், யானைக்கல்ல, மனிதனுக்கே அடிசறுக்கும் என்பதைஉணரவேண்டும்.

(கட்டுரையாளர், கால்நடை மருத்துவர்.)

No comments:

Post a Comment