தொலைவில் வைப்போம் தொலைக்காட்சியை


தொலைவில் வைப்போம் தொலைக்காட்சியை

அதிகமாக டி.வி. பார்ப்பதால் குழந்தைகளின் வலதுமூளை, இடதுமூளையைவிடஅதிகம்பணிபுரிந்து ஒருநிலையற்ற சலனமனம்உள்ளமனிதரைஉருவாக்கும். குழந்தைகளின் கவனிக்கும் திறனைடி.வி. குறைக்கிறது.
உணவு, உடை, உறைவிடம் இவற்றைப் போல்தொலைக்காட்சியும் நம்அன்றாடத் தேவைகளில் ஒன்றாகி விட்டது. இன்றையஇயந்திர வாழ்க்கையில், தொலைக்காட்சியே நடுத்தர, கிராமப்புற, நகர்ப்புற மக்களின் வருமானத்திற்கேற்ற பொழுதுபோக்கு அம்சமாக விளங்குகிறது.

உலகே ஒருகிராமமாகச் சுருங்கிவிட்ட இன்றையச் சூழ்நிலையில் எந்தநாட்டில் இருந்தாலும் எந்தமொழிபேசினாலும் தன்சொந்தமொழியில் உள்ளநிகழ்ச்சிகளைப் பார்க்கும் வாய்ப்பை வெளிநாட்டில் வாழும்மக்களுக்கு வழங்கியுள்ளது செயற்கைக் கோள்தொலைக்காட்சி. இசை, நடனம், கல்வி, சொல்லாற்றல், கவிதைஇவற்றில் தனித்தன்மை கொண்டபலமாணவர்களுக்காக பலநிகழ்ச்சிகளை நடத்திஅவர்களைத் தொலைக்காட்சி ஊக்கப்படுத்துகிறது.

தொலைபேசியின் மூலம்பலகல்வியாளர்கள், மருத்துவர்கள், ஆலோசகர்களின் கருத்துகளை நேயர்கள் நேரடியாகக் கேட்டுப் பயன்பெற முடிகிறது.

இப்படி பலநன்மைகளைத் தொலைக்காட்சி ஏற்படுத்தினாலும் தனிமனித வாழ்விலும் சமூகத்திலும் தொலைக்காட்சி பலவிருப்பந்தகாத பாதிப்புகளை உருவாக்கி இருக்கிறது என்பதைமறுக்கமுடியாது.

முன்பெல்லாம் எந்தத்தெருவிற்குச் சென்றாலும் கூட்டம் கூட்டமாகக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பார்கள் . இப்பொழுது இதுஓர்அரியநிகழ்ச்சியாகி விட்டது. பள்ளியிலிருந்து வரும்குழந்தைகள் பலமணிநேரம் உட்கார்ந்து வீட்டுப்பாடம் செய்யவேண்டியுள்ளது. பின்தொலைக்காட்சியின் முன்அமர்ந்து ஒருநாளின்எஞ்சியநேரத்தையும் கழித்து விடுகிறார்கள். குழந்தைகளின் உடலும்மனமும்இதனால்சோர்வடைகின்றன.

ஏதாவது ஒருமெகாசிரியல் நடந்துகொண்டிருக்கும் போதுதொலைபேசி மணிஒலித்தாலோ அல்லதுயாராவது வந்தாலோ முழுமனத்தோடு அவர்களுடன் உரையாடமுடிவதில்லை. இதன்விளைவாக நண்பர்கள், உறவினர்கள் என்றுஎவரும்அடிக்கடி பார்த்து, பேசி, பழகும்களிப்பை ஒதுக்கி வருகிறோம். வெளியில் வேலைமுடிந்ததும் "தன் பெண்டு, தன்பிள்ளை, சோறுவீடுசம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு, தன்வீட்டுத் தொலைக்காட்சி உண்டு" என்றுவாழ்க்கை முறையேமாறிவிட்டது. இந்நிலை இப்படியே தொடர்ந்தால் சமூகத்தில் ஒவ்வொருவரும் தனித்துப் போகவேண்டிய சூழ்நிலை ஏற்படும். விளைவுவிரக்தியும் மனச்சோர்வும் தான். அய்யோஎன்றஅலறல்கேட்டால் அடுத்தவீட்டுக்காரர்கள் ஓடிவரும்நாகரிகம் குறைந்து கொண்டேபோவதற்கு, தொலைக்காட்சியும் ஒருகாரணம்.
இவைமட்டுமல்லாமல் மருத்துவ ரீதியாகவும் பலபாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிகநேரம்தொலைக்காட்சி பார்த்தால் கண்பார்வைகெட்டுவிடும்என்பதுஎல்லோருக்கும் தெரிந்த உண்மைதான்.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் பாலியல் மற்றும் வன்முறை சம்பந்தப் பட்டகாட்சிகள், நம்முடைய நாகரிகத்தையும் கலாசாரத்தையும் சிரழிக்கும் வகையில் பலசமூகப்பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றஅச்சம்வளர்ந்து வருகிறது. இவைதவிரஎண்ணிப் பார்க்க முடியாத பலபாதிப்புகளையும் தொலைக்காட்சி ஏற்படுத்துகிறது.

தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் மூளையைப் பெரிதும் பாதிக்கிறது என்றமருத்துவ வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்." தொலைக்காட்சித் திரையிலிருந்து வெளிவரும்கதிர்வீச்சு, 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மேல்அபாயகரமான விளைவைஏற்படுத்துகிறது. டி.வி. பார்ப்பது குழந்தைகளின் மூளைக்குத் தீர்க்க முடியாத பாதிப்பை ஏற்படுத்துகிறது" என்று மத்தியநடத்தைஅறிவியல் நிறுவனத்தின் (Central Institute of Behavioural Sciences) இயக்குநரும், குழந்தை மனநல மருத்துவருமான டாக்டர் சைலேஸ்பகோங்கர் கூறுகிறார்.

கடந்த இரண்டுஆண்டுகளாக " மாந்தன் " என்ற பெயரில், குழந்தைகள் மத்தியில் இந்நிறுவனம் நடத்திவந்தஆய்வு, டி.வி.யிலிருந்து வெளிவரும் கதிர்கள் மூளையின் பகுதிகளில் சேதம்ஏற்படுத்துகின்றன என்றுநிரூபித்துள்ளது. இந்தஆய்வுசம்பந்தமான தனிப்பட்ட சோதனைகளும் " டி.வி. பார்க்கும் போதுஅபாயமான புதியவேதிப்பொருள்கள் குழந்தைகளின் மூளையில் உருவாகின்றன" என்று கண்டறிந்துள்ளன. " அதிகமாக டி.வி. பார்ப்பதால் குழந்தைகளின் வலதுமூளை, இடதுமூளையைவிடஅதிகம்பணிபுரிந்து ஒருநிலையற்ற சலனமனம்உள்ளமனிதரைஉருவாக்கும். குழந்தைகளின் கவனிக்கும் திறனைடி.வி. குறைக்கிறது. இதுமட்டுமல்லாமல் அவர்களுடைய சகிப்புத் தன்மையையும் குறைத்து, விரக்திக்குச் சாதகமான மனநிலையை அவர்களிடம் உருவாக்குகிறது. அவர்களுடைய நினைவுத் திறன், உணர்ச்சிக் கட்டுப்பாடு மற்றும் ஆய்வுத் திறனையும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறது" என்று டாக்டர் பகோங்கர் கூறுகிறார்.

சமீபத்தில் மேற்கொள்ளப் பட்டஆய்வின் படி, தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்ப்பது குழந்தைகளிடம் ஒருமெய்மறந்தநிலையைஉருவாக்கும் என்றும் மூளையின் மேற்பகுதியில் உள்ளசக்திவாய்ந்த பகுதிகளில் உள்ளகவனத்தை மூளையின் கீழ்ப்பகுதிக்கு மாற்றிஇழிந்தஉணர்ச்சிகளுக்கு இடம்தேடிக்கொடுக்கும் என்றும் கண்டறிந்துள்ளனர். மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் இத்தகைய மாற்றம் அபின்போன்றபோதைஉணர்வைஉடலில்இயற்கையாகத் தோற்றுவிக்கிறது. இந்தப்பாதிப்பிற்கு சிகிச்சையே கிடையாது என்பதுதான்மிகவும் அச்சமளிக்கும் விஷயமாகும். இதனைத்தடுக்கலாமே யொழியகுணப்படுத்த இயலாது.

மூளை மட்டுமல்லாமல் உயர்ரத்தஅழுத்தம், அதிகஅளவிலான கொலஸ்ட்ரால் போன்றநோய்களினால் உடலும்பாதிக்கப்படுகிறது. குழந்தைகள் கீழ்ப்படியும் தன்மையை அறவேமறந்துவிடுகிறார்கள்.
சரி, இவற்றுக்குத் தீர்வுதான்என்ன? டி.வி. யை முழுமையாகத் தவிர்க்க முடியுமா என்றகேள்விகள் மனத்தில் எழலாம். முழுமையாகத் முடியாவிட்டாலும் டி.வி. பார்க்கும் நேரத்தின் அளவைநம்கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும். வருமுன்காப்பது நல்லது.

குழந்தைகளுக்குப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது தான்இதற்குஒரேவழிஎன்றுமனநலமருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒருநாளைக்கு இரண்டிலிருந்து மூன்றுமணிநேரமாவது குழந்தைகள் படித்தால் தான்இக்குறையை ஓரளவிற்குக் கட்டுப் படுத்தலாம். பாடப்புத்தகத்தைத் தவிர, குழந்தைகளுக்கான கதைகள், துணுக்குகள், வண்ணம்தீட்டுதல் போன்றபொழுதுபோக்கின் மூலம்அறிவைவளர்க்கும் புத்தகங்களை வாங்கித் தரவேண்டும். குழந்தைகளுக்கு கற்றலின் இனிமையைப் புரியவைக்கவேண்டும்.

பள்ளிகள் மற்றும் சமூகநிறுவனங்கள் மூலம்இதுதொடர்பான விழிப்புணர்வைப் பெற்றோர்களிடம் ஏற்படுத்த வேண்டும். டி.வி. க்கு " முட்டாள்களின் பெட்டி" என்றபெயரும் உண்டு. இப்போது அப்பெட்டி எதிர்காலச் சமுதாயத்தையே முட்டாளாக்கும் பெட்டியாக உள்ளது. டி.வி. யைத் தவிர்த்து " அறிவை விரிவுசெய்; விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை" என்றுநம்வீட்டுச் சிறார்களை உற்சாகப் படுத்தி உணரவைப்போம் !

(கட்டுரையாளர் : ஆங்கில விரிவுரையாளர், கிங்ஸ்பொறியியல் கல்லூரி, புனல்குளம்.)

 

No comments:

Post a Comment