'சே குவேரா' பெற்றோருக்கு எழுதிய கடிதம்...


'சே குவேரா' பெற்றோருக்கு எழுதிய கடிதம்...

அன்பிற்குரியவர்களே!

மீண்டும் என் கால்களுக்கடியில் ரோசினாண்டேயின்விலா எலும்புகளி உணர்கிறேன். கேடயத்தை கைகளில் ஏந்திக்கொண்டு பயணத்தை ஆரம்பிக்கிறேன். 10 வருடங்களுக்கு முன்பும் இதே போல விடைபெற்று ஒரு கடிதத்தை எழுதியிருந்தேன். அதில் நான் ஒரு சிறந்த படை வீரனாகவும், சிறந்த மருத்துவராகவும் இல்லாமல் இருந்ததற்காக வருத்தப்பட்டிருக்கிறேன். இன்று நான் அவ்வளவு மோசமான படை வீரன் அல்ல.

மேலும் நம்பிக்கையுள்ளவனாக நான் இருப்பதைத் தவிர வேறு ஒரு மாற்றமும் இல்லை. என்னுடைய மார்க்சீயம் இன்னும் ஆழமானதாகவும், தூய்மையானதாகவும் ஆகியிருக்கிறது. தங்களை விடுவித்துக் கொள்ளும் பொருட்டு போராடும் மக்களுக்கு ஆயுதம் தாங்கிய போராட்டம் மட்டுமே தீர்வு என்று நம்புகிறேன். அதன்படியே நடக்கிறேன். பலர் என்னை சாகசக்காரனாக அழைக்கலாம். ஒரு வித்தியாசம். தன்னுடைய நம்பிக்கைகளை உண்மையென்று காட்ட தன்னையே பணயம் வைக்கிற சாகசக்காரன்தான் நான்.

இதுவே முடிவாக கூட இருக்கலாம். நான் விரும்பாவிட்டாலும் கூட, எது வேண்டுமானாலும் நடக்கலாம். அப்படியிருந்தால் உங்களைக் கடைசி முறையாகத் தழுவிக்கொள்கிறேன். உங்களை மிகவும் நேசிக்கிறேன். அதை வெளிப்படுத்த எனக்குத் தெரியவில்லை. பல சமயங்களில் நீங்கள் என்னை புரிந்து கொள்ளவில்லை. இருக்கட்டும் இன்று என்னை நம்புங்கள்.

நொய்ந்து போன என் கால்களியும், ஓய்ந்து போன எனது நுரையீரகளையும் மன வலிமையால் ஒரு கலைஞனின் நுட்பத்தோடு சரி செய்து வைத்திருக்கிறேன்.

இருபதாம் நூற்றாண்டின் இந்த சிறியப் போராளியை அவ்வப்போது நினைத்துக் கொள்ளுங்கள். சிலியா, ராபர்ட்டோ, மார்ட்டின், பீட்ரீஸ் மற்றும் அனைவருக்கும் எனது முத்தங்கள்.

என் அன்பு தாய் த்ந்தையே, உங்களுக்கு கீழ்படியாத இந்த தறுதலை பிள்ளையின் தழுவலை ஏற்றுக் கொள்ளுங்கள்.

- '
எர்னஸ்டோ'

(Courtesy :Agazhvaan GGanesh)

 

No comments:

Post a Comment