மனசு


மனசு

முதல் இரவில் கால் அடி எடுத்துவைக்கும் பெண் போல, அந்த அறைக்குள் நுழைந்தேன்.
என்னுடன் வந்த நண்பர்கள் அனைவரும் ஒவ்வொரு அறைக்குள் மறைந்தனர். இது ஒரு

கொண்டாட்டமான நேரம் ஆம் எனக்கு அடுத்த மாதம் திருமணம், பாச்சிலர் பார்ட்டி
இது. பார்ட்டியின் முடிவில், இருப்பதை இழக்க செய்யும், சான்றிதழ் இல்லாமலேயே,
நிரூபணம் ஆகும்

விஷயம்

"
வாங்க"

குரல் கேட்டு, கூச்சத்துடன் பார்த்தேன், என்னை விட வயது முதிர்ந்த ஆனால்,
அழகான பெண், என்னை கூர்ந்து பார்த்துக்கொண்டு அதே சமயம், ஒரு இகழ்ச்சியான
புன்னகையை

உதடுகளில் தவழ விட்டு....

"
வந்து இப்படி பக்கத்துல உட்க்காருங்க. புதுசு போல இருக்கு? இதுதான் முதல்
தடவையா?"

ஆச்சர்யத்துடன் நான். "எப்படி?"

"
எப்படின்னா?"

"
இல்ல கரக்டா எப்படி?

"
உன்ன மாதிரி எத்தன பேர பார்த்திருப்பேன், என் சர்வீசுல?"

"
என்ன பயமா இருக்கா?"

"
ஆமாம்"

"
இங்க வாயா" என இழுத்து என்னை அணைத்து, பின், ஆண்மையின் மூலாதாரமான விஷயத்தை
தன் கையால் பிடித்தாள்.

எதோ நெருப்பு துண்டம் என் மேல் விழுந்த மாதிரி துடித்து விலகினேன் .

"
என்ன ஆச்சு? ஏன் விலகி போறே. எதுக்கு வந்தியோ அத பண்ண வேண்டியதுதானே?"

ஒரு கூர்மையான பார்வை என் மீது. அவள்தான்

"
கூசுது இல்ல, உடம்பெல்லாம்"

"
ஆமாம்"

"
எதுக்கு வந்தே?"

"
இன்னும் ஒரு மாசத்துல எனக்கு கல்யாணம். முடியுமா? முடியாதான்னு?"

"
டெஸ்ட் பண்ண வந்தியா?"

"
ஆமாம்"

"
ஒண்ணு சொல்றேன், கேட்பியா?"

"
சொல்லுங்க"

"
அதோ இந்த மறைப்புக்கு பின்னால போய் உட்க்கர்ந்துக்கோ. நீ இங்க இருக்கிறது
வர்றவங்களுக்கு தெரியாது. நான் சொல்லுற வரைக்கும் நீ அங்கிருந்து வரக்கூடாது.
என்ன சரியா?"

"
சரிங்க" மந்திரத்திற்கு கட்டுபட்டவன் போல, அவள் சொன்னபடி செய்தேன்.

அவள் அடுத்த ஆட்டதிற்கு தயார் ஆனாள்

அடுத்த மூன்று மணிநேரம், 5 நபர்கள் வந்து சென்று விட்டார்கள்.

"
என்ன முழிச்சிக்கிட்டு இருக்கியா, இல்ல தூங்கிட்டியா?"

"
இல்ல தூங்கல"

"
வெளில வா"

"
பசிக்குதா உனக்கு"

"
ஆமாங்க"

"
டி சாப்பிடுவோமா?"

"
டேய் பையா 6 ஆம் நம்பர் ரூமுக்கு ரெண்டு டி, பிஸ்கட் " என்று குரல்
கொடுத்துவிட்டு, என்னை பார்த்து

"
உனக்கு அப்புறம் எத்தன பேர் வந்தாங்க"

"
ஐஞ்சு"

"
ஒவ்வொருத்தனும் பேசினது உனக்கு கேட்டிருக்குமே?"

"
கேட்டுச்சு"

"
பேமானிங்க, வீட்டுல தோற்துட்டு, இங்கேயும் வந்து தோத்து போறாங்க"

"
ஆண்மைங்கிறது மனசுல இருக்கு. மனசு சொன்னா உடம்பு கேட்கும், இங்கே வந்தவன்
எல்லாம் பாரு ரெண்டு நிமிஷம் தாக்கு பிடிக்க முடியல, இதுல 180 நிமிஷம் என்னால
இயங்க

முடியும்ன்னு பீலா உடரானுங்க பேடி பசங்க, மனசால தோர்த்தவங்க, உடம்பாலேயும்
கண்டிப்பா தோர்ப்பாங்க."

"
ஆமாங்க என்றேன்" கண்களில் நீர் அரும்ப

"
என்னடா வேசி வேதாந்தம் பேசறாளேன்னு நினைக்கிறையா?"

"
அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க"

"
நீ எப்படி நெனைச்சாலும் எனக்கு கவலை இல்ல. ஏன்னா என் மனசுல கல்மிஷம் இல்ல,
ஆனா நானும் தோத்து போனவதான். நடிப்புக்கு, சினிமால, இதுதான் முதல் படின்னு
சொன்னத

கேட்டு விழுந்தேன், இதுதான் கடைசிபடின்னு பின்னாடிதான் தெரிஞ்சுது. இப்படி
தெரிஞ்சே சேத்துல விழுந்தேன் இல்ல? நானும் தோத்தவ தான்"

"
டி சாப்பிடு"

"
இன்னமும் ஒரு மாசத்துல, ஒனக்கே, ஒனக்குன்னு ஒருத்தி வரப்போறா. தோத்து
போய்டாதே, எதோ உன்ன பார்த்த உடனே, தோணிச்சு, தோற்கிற பேமானிங்க மத்தியில,
வாழவே

ஆரம்பிக்காத நீ இங்க நிக்கிற, நீ வரக்கூடாத இடம்யா இதெல்லாம்" என்றவளை பார்த்து

"
அப்போ என் என்ன அணைச்சு பிடிச்சீங்க" சட்டேன்று கேட்டுவிட்டேன்

அவள் சிரித்தபடி, " நான் தொட்டவுடனே, என்ன ஆச்சு உனக்கு?"

"
முடியும்னு தோணிச்சு"

கண்களில் குறும்பு வழிய

"
பசியோட இருக்கிறவனுக்கு வேதாந்தம் சொன்னா புரியாதும்பாங்க, அதான்,
சாப்பாடுக்கு பதில் ஒரே ஒரு பழம் கொடுத்தேன், இதுக்கும் மனசு தான் காரணம்"

"
உங்கள, உங்க முகத்த ஒரு போட்டோ எடுத்துக்கவா?"

என்னை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டே,"எதுக்கு?"

"
வாழ்கையில தோல்விக்கான பாதை தெரியும்போதேல்லாம், இந்த போட்டோவ பார்த்தேன்னா
சரியான பாதை புலப்படும் இல்ல அதுக்கு தான்" என்றேன்

"
பாதைய தேர்ந்தேடுக்கிறதும் மனசு தான்யா" என்றவள் என் கண்ணிற்கு வேசியாக
தெரியவில்லை

ஸ்ரீராமின் கவிதைகள்.

 

No comments:

Post a Comment