விக்கல், ஏப்பம் அடிக்கடி வருகிறது. காரணம் என்ன?
உணவுக்குழாயில் புண் இருக்கலாம் அல்லது எதுக்கலிச்சலாக இருக்கலாம். தகுந்த மருத்துவரை அணுகுவது நல்லது.
சாப்பிடும்போது திடீரென்று புரையேறுகிறது. மூச்சுக்குழாயில் உணவு துகள் செல்வதாலா? வேறு காரணமா? மூச்சுக்குழாயில் உணவு சிக்கினால் எண்டோஸ்கோபி மூலம் எடுக்க முடியுமா?
சாப்பிடும்பொழுது உணவுக்குழாய் வழியாக உணவு செல்லும். அந்த நேரத்தில் பேசும்போது மூச்சுக்குழலில் உணவு செல்ல நேரிடும். அப்பொழுதுதான் புரையேறுகிறது. ஆனால் உணவுத்துகள் தானாகவே வெளி வந்துவிடும். சில சமயங்களில் உணவுத்துகள் சிக்க நேர்ந்தால் உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடுவதுண்டு. எனவே, சாப்பிடும்போது பேசுவதைத் தவிர்க்கவேண்டும்.
No comments:
Post a Comment