உயிருக்கு உலை வைக்கும் அணு உலைகள்


உயிருக்கு உலைவைக்கும் அணுஉலைகள்

மின் ஆக்கத்திற்கு அணுவிசையைப் பயன்படுத்துவதன் பெயரால் அணுஉலைகள்அமைப்பது பற்றியவிவாதம் தொடர்கிறது. இந்திய- அமெரிக்க அணுஒப்பந்தம், அணுஉலைஆக்கக்குழுமங்களோடு இந்தியஅரசின்வணிகபேரம், அணுவிபத்து இழப்பீட்டுச் சட்டமுன்வடிவு, மராட்டிய மாநிலம் இரத்தினகிரி மாவட்டம் செய்தாபூரில் புதியஅணுஉலைநிறுவஎடுத்து வரும்முயற்சி... இவையாவும் அணுவிசைத் தொடர்பான விவாதத்தை தூண்டித் தீவிரப்படுத்தியுள்ளன. ஆனால்இந்தியஅரசுதன்அனுவிசைத் திட்டத்தைக் கிஞ்சிற்றும் தளர்த்திக் கொள்ளவில்லை.

உலக அளவிலும், அணுவிசை தொடர்பான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 1993ஆம்ஆண்டுஅமெரிக்காவில் மூன்றுமைல்தீவிலும், 1986இல்சோவியத் நாட்டில் செர்னோபிளிலும் நேரிட்ட கொடியவிபத்துக்கள் அணுஉலையின் ஆபத்தைச் சுட்டுவதாய்க் கருதப்பட்டது. இந்தவிபத்துக்களுக்குப் பிறகும் இவற்றைக் காட்டிலும் சற்றேகுறைந்த அழிவைஏற்படுத்திய நூற்றுக்கணக்கான பிறவிபத்துகளுக்குப் பிறகும் அணுவிசை வழிமின்னாக்கத் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகின்றன. இவற்றால் மனிதஉயிர்களுக்கு ஏற்படக் கூடியஆபத்துகுறித்து விடுக்கப்படும் எச்சரிக்கைகளை அணுஉலையாக்கம் மற்றும் வணிகத்தில் ஈடுபட்டுள்ள தனியார் குழுமங்களோ, அரசுகளோ, இதுவரைபொருட்படுத்தவில்லை. அண்மையில் சப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கமும், அதன்விளைவாக எழுந்தஆழிப்பேரலையும், அந்நாட்டிற்கு பேரழிவு உண்டாக்கி இருப்பதோடு அணுஉலைகள்பலவெடித்துச் சிதறவும் காரணமாயிற்று.

நீர் கொண்டுநெருப்பை அணைப்பதுதான் வாடிக்கை. அங்கேநிலத்தில் பிறந்தசீற்றம் நீருக்குத் தாவிநெருப்பாய்ப் படர்ந்து ஊழிப்பேரழிவை தோற்றுவித்துள்ளது. இதைத்தொடர்ந்து அணுஉலைகளால் நேரிடக் கூடியஆபத்துபற்றியவிவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

சப்பான் நாட்டில் புகுசிமா அணுவிசை நிறுவனத்தில் இதுவரைமூன்றுஅணுஉலைகள்வெடித்துச் சிதறியுள்ளது. மேலும்சிலஅணுஉலைகளும் வெடித்துச் சிதறுகிற அல்லதுஉருகிக் கலைகிறஆபத்தில் உள்ளன. இந்தஅணுமின் நிறுவனத்தை நடத்திவரும்டோக்கியோ மின்விசைக்குழுமம் (டெப்கோ) என்றதனியார் நிறுவனம் அணுஉலைகளின் பாதுகாப்புக் குறித்து இதுகாறும் சொல்லிவந்தசெய்திகளில் முழுஉண்மைஇல்லைஎன்பதுஇப்போது தெளிவாகிற்று.

புகுசிமா அணுவிசை நிறுவனத்தில் நிகழ்ந்துள்ள அணுஉலைவெடிப்பினால் பெரும்அணுக்கதிர்வீச்சு தோன்றியுள்ளது. சுமார்நான்குஇலக்கம் மக்கள்சுற்றுவட்டாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அணுஉலைவெடித்ததால் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறையால் அம்மக்களை கொடுங்குளிர் வாட்டியெடுக்கும் நிலைஏற்பட்டுள்ளது.

நில நடுக்கத்தாலும், ஆழிப்பேரலையாலும் பல்லாயிரம் மக்கள்உயிரிழந்துள்ளனர். பிழைத்து உயிர்வாழ்வோரும் அணுக்கதிர்வீச்சின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக ஓடிஒளியவேண்டிய நிலை!

சப்பானில் மட்டுமல்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளிலும் அணுஉலைகளின் பாதுகாப்புத் தன்மைபற்றிதனியார் குழுமங்களும், அரசுகளும் அளித்து வந்தஉறுதிகளைப் புகுசிமா அணுஉலைவெடிப்பு பொய்யாக்கிவிட்டது. மூன்றுமைல்தீவு, செர்னோபிள், இப்போது புகுசிமா... இவையேபோதும்அணுஉலைகள்இனிநமக்குதேவையில்லை என்றுஉலகம்முடிவெடுப்பதற்கு!

புதிய உலைகள்திறப்பதை நிறுத்த வேண்டும். பழையஉலைகளைப் பாதுகாப்பான முறையில் கலைத்து விடவேண்டும். அடுத்தபெருநேர்ச்சிக்காகக் காத்திருக்கத்....... தேவையில்லை.

அறிவியல் தொழில்நுட்பத்தில் வெகுவாக மேம்பட்ட நிலையில் இருக்கும் சப்பானிலும் மேலைநாடுகளிலும் அணுஉலைகள்பாதுகாப்பற்றவை என்றால் இந்தியா போன்றநாடுகளில் மட்டும் எப்படிபாதுகாப்பானவையாக இருக்கமுடியும். அறிவியல் தொழில்நுட்பத்தில் பின்தங்கியநிலைமட்டுமல்ல, ஊழல்மலிந்தஅரசியல் தலைமையின் அதிகாரவர்க்கமும் சேர்ந்து அணுஉலைஆபத்தைப் பன்மடங்காக்கி விடுகின்றன.

அண்மையில் இந்தியவிண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தொடர்பாக அம்பலப்பட்ட ஊழலைமறந்துவிட வேண்டாம். அறிவியலர் அறவியலராகவும் இருக்கவேண்டிய கட்டாயம் ஏதுமில்லை.

சப்பானில் வெடித்துச் சிதறியஅணுஉலைகளின் தொழில்நுட்பம் வேறு. இந்தியஅணுஉலைகளின் தொழில்நுட்பம் வேறுஎன்றுஇந்தியஅணுவிசைத்துறையினர் சிலர்வாதிடுகின்றனர். சப்பானில் ஏற்பட்ட விபத்துக்கும் அணுஉலைத்தொழில்நுட்பத்துக்கும் எவ்விததொடர்பும் இல்லைஎன்பதைஇவர்கள் மறந்துவிட்டனர். நிலநடுக்கத்தாலும ஆழிப்பேரலையாலும் மரபுசார்குளிரூட்டிப் பொறியமைவுகள் செயல்இழந்து, அதனால்அணுஉலைகளின் வெப்பம் உயர்ந்ததுதான் அணுஉலைவெடிப்புக்குக் காரணமாயிற்று. இதற்கும் அணுஉலைத்தொழில்நுட்பத்திற்கும் என்னதொடர்பு? நிலநடுக்கம், ஆழிப்பேரலைபோன்றபேரிடர்கள் சப்பானில்தான் நிகழும் இந்தியாவில் ஒருபோதும் நிகழமாட்டாஎன்றுஉறுதியளிக்க யாரால்முடியும்?

அணு உலைஇயக்கம் என்பதுஅணுப்பிளவுஅல்லதுஅணுவிணைவுவழியாககிடைக்கும் ஆற்றலைமின்விசையாக மாற்றும் தொழில்நுட்பம் தொடர்பானது மட்டுமல்ல. இதில்வேண்டுமானால் சப்பானுக்கும், இந்தியாவுக்கும் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால்அணுஉலைக்கழிவுகள், அவற்றிலிருந்து வெளிப்படும் ஆபத்தான கதிர்வீச்சு... இவற்றில் எல்லாநாடுகளும் ஒன்றே! அணுக்கழிவுகளை ஆபத்தில்லாத முறையில் அழித்துத் தீர்வுகாண்பதற்கு இதுவரைஎந்தநாடும்உருப்படியான வழிகாணவில்லை என்பதேஉண்மை.

அணு உலைக்கழிவுகளில் இருந்து ஆனாலும், அணுஉலைவெடிப்பிலிருந்து ஆனாலும் ஏற்படக் கூடியகதிர்வீச்சின் ஆபத்துஎன்பதுசப்பான், ருசியா, அமெரிக்கா, இந்தியா எல்லாநாடுகளுக்கும் ஒன்றுதான். இந்தியாவில் மொத்தமின்னாக்கத்தில் இரண்டுவிழுக்காடுதான் அணுஉலைகளிலிருந்து பெறப்படும் எனப்படுகிறது. தங்களுக்கு வேண்டிய மின்னாற்றலில் ஒருபங்கைமின்உலைகளிலிருந்து எடுக்கக் கூடியமேலைநாடுகள் உண்டு. இந்தநாடுகளையெல்லாம் புகுசிமா அணுஉலைவெடிப்புகள் விழிக்கச் செய்துள்ளன. சற்றேநின்றுஇதுதேவைதானா என்றுஎண்ணிப் பார்க்கச் செய்துள்ளன.

உலகிலேயே மிகப்பெரியஅளவில்வணிகமுறையில் அணுமின்னாக்கம் செய்யும் அமெரிக்க நாட்டில் அணுஉலைகளுக்குக் கடும்எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. வெர்மான்ட் என்றஇடத்திலிருக்கும் அணுஉலைபுகுசிமாவில் வெடித்துச் சிதறியமுதல்உலையைஒத்ததாகும். அமெரிக்காவில் இதேவகைப்பட்ட தரஅணுஉலைகள்உள்ளன. வெர்மான்ட் அணுஉலையைவடிவமைத்துக் கட்டிக் கொடுத்தது 'செனரல்எலெக்ட்ரிக்' என்னும் பன்னாட்டுக் குழுமம். இப்போது வெர்மான்ட் ஆளுநர்பீட்டர் சம்லின் உட்படஅம்மாநில மக்களில் பெரும்பான்மையினர் அங்குள்ள அணுஉலையைஇழுத்து மூடவேண்டும் என்கிறார்கள்.

சப்பானிய அணுநேர்ச்சி உலகமெங்கும் எதிர்வினைகளைக் கிளறியுள்ளது. அய்ரோப்பா எங்கிலும் கிளர்ச்சிகள் வெடித்துள்ளன. அய்ரோப்பிய நாடாளுமன்றத்தில் உறுப்பினராயிருக்கும் பிரெஞ்சுக்காரர் ஈவாசோலி அணுவிசை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் இப்படிச் சொன்னார்: "அணு உலைகளைஎப்படித் துறப்பது என்பதைநாம்அறிவோம். நமக்குபுதுப்பிக்கக் கூடியஆற்றல்தேவை, காற்றாலைகள் தேவை, புவிவெப்பஆற்றல்தேவை, சூரியவெப்பஆற்றல்தேவை".

சுவிட்சர்லாந்து அரசுதன்அணுஉலைகளுக்கு மறுஉரிமம்வழங்கும் திட்டங்களை நிறுத்தியுள்ளது. செர்மானிய நகரம்இசுட்டக்கார்ட்டில் 10,000 மக்கள் திரண்டு அணுஉலைகளுக்கு எதிராகஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து அந்நாட்டின் அதிபர்ஏஞ்சலாமெர்க்கல் 1980க்குஉட்பட்ட 7 அணுஉலைகளைஉடனேமூடஆணையிட்டார்.

அமெரிக்காவில் மசாக்சுசெட்சு நாடாளுமன்ற உறுப்பினர், சனநாயகக் கட்சியைச் சேர்ந்த எடுமார்க்கே கூறினார்: "சப்பானில் இப்போது நிகழ்வதைப் பார்க்கும் போதுஇங்கும் அணுமின்னாக்க ஆலையில் கொடியவிபத்து நேரிடமுடியும் எனத்தெரிகிறது. எதில்தான் விபத்து இல்லை? வான்பயணத்தில் விபத்து நேரிடுவதால் வானூர்திகளே தேவையில்லை என்றுசொல்லிவிட முடியுமா? பார்க்கப் போனால்வானூர்தி விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் தொகையோடு ஒப்பிட்டால் அணுஉலைவிபத்துக்களால் உயிரிழந்தவர்களின் தொகைசொற்பமே".

அணு விசைக்குச் சப்பைகட்டுவோரின் மற்றொரு வாதம்இது. அணுஉலைகளின் ஆபத்துஎன்பதுவிபத்துகளில் உயிரிழப்போர் தொகையோடு முடிந்துவிடக் கூடியதன்று. அணுக்கழிவுகளின் கதிர்வீச்சு ஒருநிரந்தரச் சிக்கலாய் நீடிப்பதோடு, உலைவெடிப்புகளாலும் நேரிடும் கதிரியக்கத்தின் தீயவிளைவுகள் அந்நேரத்தோடும், அவ்விடத்தோடும் முடிந்து போகிறவை அல்ல. வானூர்தி விபத்துகள் போன்றபிறநேர்ச்சிகளுக்கும் அணுஉலைவெடிப்புகளுக்கும் இடையிலான இந்தவேறுபாடு மிகமுக்கியமானது.

அணு விசையின் அழிவாற்றல் காலத்திலும் இடத்திலும் நீண்டுவிரிந்து செல்வதை மெய்ப்பிக்க எத்தனையோ சான்றுகள் உண்டு. இதேசப்பான் நாட்டில் கிரோசிமா, நாகசாகி நகரங்கள் மீதுஅமெரிக்க வல்லாதிக்கம் வீசியஅணுகுண்டுகள் இலட்சக்கணக்கானவர்களின் உயிரைப் பறித்தன என்பதோடு அணுக்கதிர் வீச்சின் தாக்கத்தால் உருச்சிதைந்த குழந்தைகள், உலகமறிந்திராத புதுப்புது நோய்களுக்கு ஆளானஆண்கள், பெண்கள் ஏராளம், ஏராளம். அணுகுண்டுகளின் அதேகொடியவிளைவுகளை இன்னும் கூடபெரியஅளவில்அணுஉலைவெடிப்புகளால் ஏற்படுத்த முடியும். உண்மையிலேயே புகுசிமாவின் விளைவுஅப்படித்தான் இருக்குமோ என்றுஉலகம்அஞ்சிக் கொண்டிருக்கிறது.

விபத்து நேரிடும் வாய்ப்பே இல்லாத, முழுக்க முழுக்க பாதுகாப்பான அணுஉலைஎன்பதாக ஒன்றுஇல்லை, இருக்கவும் முடியாது. அணுக்கொள்கைதொடர்பான ஓர்அமைப்பின் தலைவர்டேனியல் கிர்ட்சு இப்படிக் கூறினார்: "ஆபத்தில்லாத ஒரேஅணுஉலைநம்மிடமிருந்து ஒன்பதுகோடிமைல்தொலைவில் உள்ளது. அதன்பெயர்சூரியன்".

அணு உலைகளின் துணையின்றி நம்மின்தேவையைநிறைவுசெய்யமுடியாது என்றுதலைமைஅமைச்சர் மன்மோகன்சிங் போன்றவர்கள் புழுகிவருவதைநம்பிவிடக் கூடாது. நாட்டில் காணப்படும் மின்பற்றாக் குறைக்கான உண்மைக் காரணங்களில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பி பன்னாட்டுக் குழுமங்களின் அணுஉலைவணிகத்தை வளர்க்கும் உத்தியே இது. அணுமின்னாக்கம் என்பதுஇக்குழுமங்கள் குறைந்த முதலீட்டில் கொள்ளைஇலாபமடிக்க வழிசெய்வதை மறந்துவிடக் கூடாது.

இந்திய வல்லாதிக்க அரசைப்பொறுத்தவரை அதன்அணுவிசைமோகத்திற்குத் தூபமிடுவது அணுஆயுதகுவிப்பு வெறியேஎன்பதைமறந்துவிடக் கூடாது. அணுவிசைப்பயன்பாட்டில் அமைதிவழியையும் ஆயுதவழியையும் வேறுபடுத்திப் பிரிக்க இயலாது. அமைதிவழிஅணுவாற்றல் என்றஒன்றேஇல்லை. அணுவிசைஆக்கம்என்பதுஅணுகுண்டுகளுக்குத் தரப்படும் ஊக்கமேதவிரவேறல்ல.

இந்திய மக்களின் உயிரைப் பற்றிகவலைப்படாமல் பன்னாட்டுக் குழுமங்களின் சுரண்டல் வேட்டைக்கு இந்தியஅரசுதுணைபோவதைப் போபால்நச்சுவாயு படுகொலை நிகழ்வில் பார்த்தோம். இராசீவ் காந்திதொடங்கி அத்தனைஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கொலைகாரனைப் பாதுகாப்பதிலும் பாதிக்கப்பட்டவர்களை வஞ்சிப்பதிலும் முனைந்து செயல்படக் கண்டோம்.

அணுவிசை பாதுகாப்பானது என்றுஆற்றுப்படுத்துகிற இதேஅரசுதான், அணுவிபத்து இழப்பீட்டு சட்டமுன்வடிவை இயற்றமுன்வந்தது. விபத்துகளுக்கு வாய்ப்பில்லை என்றால் இழப்பீடும், அந்தஉச்சவரம்பும் ஏன்? பெரியஇழப்பீடெல்லாம் நாங்கள் தரமுடியாது என்றுஅணுஉலைப்பெருங்குழுமங்கள் நிபந்தனை விதிப்பது ஏன்?

சுருங்கச் சொன்னால் அணுஉலைகளோடு வாழ்வது என்பதுமடியில் அணுகுண்டைக் கட்டிக்கொண்டு இருப்பதற்கு நிகரானது. உடனேஇதற்குமுடிவுகட்டியாக வேண்டும். இந்தியாவெங்கும் இருபதுஅணுஉலைகள்இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றைஉடனேஇழுத்து மூடவேண்டும். புதியஅணுஉலைஒப்பந்தங்களை கைவிடவேண்டும். இதனால்மின்பற்றாக்குறை ஏற்படுமென்றால் ஏற்படட்டும். இவைஇருந்தும் பற்றாக்குறைதான், இல்லாமலும் பற்றாக்குறைதான் என்னும் போதுஇரண்டாவதே மேல். ஆபத்துஇல்லாதவேறுவழியில் இந்தபற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கல்பாக்கம் அணுமின் நிலையம் சென்னைக்கு அருகில் உள்ளது. இப்போது சப்பானில் நேரிட்டது போல்2004இல்நாம்சந்தித்த அந்தஆழிப்பேரலை ஒருகெடுவாய்ப்பாகக் கல்ப்பாக்கம் அணுஉலையைபாதித்திருக்குமானால், அதன்விளைவுகளை எண்ணிப் பார்க்கவே நடுக்கமாய் உள்ளது. மக்கள்அடர்ந்து செறிந்து வாழும்சென்னைப் பெருநகரத்தில் அணுக்கதிர்வீச்சு பரவினால் என்னஆகும்?

கல்ப்பாக்கம் போதாதென்று கூடங்குளத்திலும் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டுமூன்றுவாரத்திற்குள் அங்கேஆயிரம்மெகாவாட் அணுஉலைஇயங்கத் தொடங்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் உலைகட்டும் பணியும் நிறைவுறும் நிலையில் உள்ளது. கூடங்குளத்தால் ஏற்படக் கூடியஆபத்துகுறித்து முன்பேதமிழ்த் தேசம்இதழில்(பங்குனி 2007) தோழர் கதிர்நிலவன் எழுதியகட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம்.

உயிருக்கு உலைவைக்கும் அணுஉலையைஒருபோதும் நம்தமிழகமண்ணில் இடம்பெறவிடோம் என்றுகிளர்ந்தெழுந்து போராடவேண்டும். சப்பானில் நிகழ்ந்திருப்பதை நமக்குஒருகடும்எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டுஅணுஉலைகளில் இருந்து நம்மண்ணையும், நம்மக்களையும் விடுவிப்பதற்காகப் போராடுவோம். அதுஉலகமக்கள்நலனுக்கு நாம்செய்யும் தொண்டாக அமையும்.


நன்றி: சமூகநீதித் தமிழ்த் தேசம்

 

No comments:

Post a Comment