இறக்கிவைக்காமல் மனதில் சுமந்துக் கொண்டு திரிந்தால் - நீதிக்கதைகள்


ஒரு புரொபசர் கண்ணாடி டம்ளரில் நீரை நிரப்பினார்.
இதை யாராவது பெரிய சுமை என்று நினைக்கிறீர்களா ?
'இல்லை... இல்லவே இல்லை' என்று மாணவர்களிடமிருந ்து கோரஸாக குரல் எழுந்தது.
கொஞ்சம் வலுவாகத் தெரிந்த மாணவனை அருகே அழைத்தார்.
நான் சொல்லும் வரையில் இந்த டம்ளரை இப்படியே உயர்த்தி பிடித்துக் கொண்டு இருஎன்றார்.
இதுஎன்ன பிரமாதம் என்பது போல் அதை அலட்சியமாகத் தூக்கிப் பிடித்திருந்த மாணவன் இரண்டே நிமிடங்களில் முகம் சுளித்தான்.
ஐந்து நிமிடங்களில் அவன் முகத்தில் மெலிதான வேதனை தெரிந்தது.
ஒரு மணி நேரம் இப்படியே வைத்துக் கொண்டிருக்க வேண்டும் முடியுமா?
'ஐயோ! கை பயங்கரமாக வலிக்குமே' !
ஒரு நாள் முழுவதும் தூக்கிப் பிடித்தால்..?
அவ்வளவுதான் செத்தேன்..!
டம்ளரில் இருக்கும் தண்ணீரின் எடை கூடுகிறதா என்ன?
'இல்லை'..!
வாழ்க்கையில் நீங்கள் பிரச்சனை என்று நினைக்கும் சில விஷயங்களும் அப்படித்தான் உடனுக்குடன் இறக்கிவைக்காமல் மனதில் சுமந்துக் கொண்டு திரிந்தால் சின்ன விஷயமும் பூதாகரமாகி உங்களை மொத்தமாக முடக்கி போட்டுவிடும் என்றார் புரொபசர்.

No comments:

Post a Comment