பகுத்தறிவும் பக்தி தரும்!
என்னது கடவுள் நம்பிக்கையை
பகுத்தறிவுதான் தருகிறதா? ஏன் இப்படி தலைப்பிலேயே
குழப்பறாங்க என்று நீங்கள் யோசித்தவாறே
இந்தக கட்டுரையில் நுழையறீங்களா? வாங்க! உங்களைத்தான் தேடுகிறோம்!.
பகுத்தறிவு என்பதும் தன்னம்பிககை என்பதும் நமக்கு நாமே கொடுத்துக கொள்கிற டானிக்குகள்தான் இல்லையா? இந்த ‘தன்னம்பிககை’ என்ற வார்த்தையை வைத்துக கொண்டு ஏகப்பட்ட ஜல்லியடி நாட்டில் நடககிறது-ஏகப்பட்ட எழுத்தாளர்கள், பப்ளிஷர்கள் பிழைப்பை பெருக்கிக கொண்டிருககிறார்கள். அதை மறுபடி ஒரு முறை பார்ககலாம். இப்போது ‘பகுத்தறிவு’.
பகுத்தறிவு என்பதும் தன்னம்பிககை என்பதும் நமக்கு நாமே கொடுத்துக கொள்கிற டானிக்குகள்தான் இல்லையா? இந்த ‘தன்னம்பிககை’ என்ற வார்த்தையை வைத்துக கொண்டு ஏகப்பட்ட ஜல்லியடி நாட்டில் நடககிறது-ஏகப்பட்ட எழுத்தாளர்கள், பப்ளிஷர்கள் பிழைப்பை பெருக்கிக கொண்டிருககிறார்கள். அதை மறுபடி ஒரு முறை பார்ககலாம். இப்போது ‘பகுத்தறிவு’.
பகுத்தறிவு என்பது உண்மையில் என்ன?
நிறைய பேர் நினைத்துக்
கொண்டிருக்கிற மாதிரி ‘கடவுள் இல்லை’
என்பதுதான் பகுத்தறிவா?.
மிகச் சரியாகச் சொன்னால்
கடவுள் இருககிறாரா, அதற்கான வாய்ப்புகள் என்ன
என்பதை யோசிப்பதும்-கடவுள் இல்லை என்றால்
அதற்கான சான்றுகள் என்ன என்பதை நமககுள்
யாசிப்பதுமே பகுத்தாயும் அறிவு அதாவது- பகுத்தறிவு.
இல்லையா?.
ஆனால் நம்மில் பலர்
கடவுள் இல்லை என்று வாதாடுவதுதான்
பகுத்தறிவு என்றே எண்ணிக கொண்டிருககிறோம்.
பல பகுத்தறிவுவாதிகளின் வாதமும் அதுதான். அதனால்தானோ
என்னவோ பகுத்தறிவுவாதிகள் பலர் நமது சமுதாயத்தில்
தீண்டத்தகாதவர்களாய் எண்ணப்படுகின்றனர் அல்லது ஒதுங்கியிருககின்றனர்.
பகுத்தறிவுவாதிகள் சமுதாயத்தோடு ஒட்டாமல் தனியராய் இருந்தால் அந்த சமுதாயம் சிந்திக்க
மறுககும் சமுதாயமாகத்தானே அர்த்தம்.
ஏதென்ஸ் நகரத்தின் சிந்தனாவாதி
சாக்ரடீஸ் தன் கடைசி நிமிடத்தில்,
சாகும் தருண்த்தில் கூட, சிறைச்சாலையில் அமர்ந்து
கொண்டு நேரத்தை வீணாககாமல்(!) தனது
நண்பர்களுடன் இறப்பு, ஆன்மா, வலி,
இன்பம், துன்பம் போன்ற பகுத்தறியும்
விஷயங்களைப் பற்றி பேசிக கொண்டிருந்ததாக
ப்ளேட்டோ (சாக்ரடீஸின் பிரதம சீடர்) தனது
‘Great Dialogues’ புத்தகத்தில்
உணர்ச்சி பொங்க குறிப்பிடுகிறார்.
விஷம் அருந்தும் சற்று
நேரத்துககு முன், அவரைப் பிணைத்திருந்த
சங்கிலிகள் அவிழ்ககப்பட்டதால், தன் கால்களை தேய்த்துவிட்டுக
கொண்டு சற்று சவுகரியமாக மேடையில்
அமர்ந்து கொண்டு ‘ஆன்மாவுககு மரணமுண்டா,
மறு பிறவு என்பது இருககிறதா?’
என்று தத்துவ விசாரணைகளில் தனது
சீடர்களுடன் ஈடுபட்டாராம்.
இடிந்துபோய் அமர்ந்திருந்த சீடர்களோ அவரிடம் நுணுககமாக கேள்வி ஏதும் கேட்க முடியாமல் தவித்தனராம்.
இடிந்துபோய் அமர்ந்திருந்த சீடர்களோ அவரிடம் நுணுககமாக கேள்வி ஏதும் கேட்க முடியாமல் தவித்தனராம்.
சாகும் தருவாயில்கூட சீரிய
பகுத்தறிவுத்தனம் என்பதன் உச்சத்தை சாக்ரடீஸிடம்
நாம் பார்கக முடிகிறது. அவரின்
கடைசி நிமிடத்தில் சிறையதிகாரி அவரிடம் வந்து, ‘என்னை
மன்னித்து விடுங்கள் சாக்ரடீஸ், இந்த சிறைககுள் நான்
பார்த்த எத்தனையோ கைதிகளுள் நீங்கள் மிகச் சிறந்த
மனிதர் என்பதை மட்டுமே என்னால்
சொல்ல முடிகிறது! வேறு ஏதும் என்னால்
சொல்ல முடியவில்லை. என் மீது உங்களுககு
கோபம் ஏதும் இல்லையே?’ என்று
குரல் உடைந்து அழ,
எழுந்து அவரிடம் சென்று
அவரை அணைத்தவாறே பழுத்த சிந்தனையாளரும், பகுத்தறிவுவாதியுமான
சாக்ரடீஸ் கேட்ட கேள்வி என்ன
தெரியுமா?.
“எனககு விஷம் தயாராக
இருககிறதா?”
அவருடைய முதன்மை சீடர்
கரீட்டோ கண்ணில் நீர்வழிய,’அவசரமில்லை
சாக்ரடீஸ், இன்னும் அஸ்தமனம் கூட
ஆகவில்லை. சட்டப்படி நள்ளிரவு வரை நேரம் எடுத்துக
கொள்ளலாம்’ என்றார் பதற்றமாக.
‘நான் கடைசிவரை ஆர்வத்துடன்
உயிரைப் பாதுகாத்துக கொண்டதை வரலாறு பதிவு
செய்ய வேண்டுமா கரீட்டோ? அது சற்று முட்டாள்தனமாகத்
தோற்றமளிககாதா?’ என்றுவிட்டு உடனே விஷக கோப்பையை
கொண்டுவரச் சொன்னாராம். தன் சாவு பற்றி
எவ்வளவு துல்லியமான, தெளிவான அறிவு அவருககு
இருந்திருந்தால் சாவு எனும் ‘வாழ்வின்
ஒருமுறை’ நிகழ்வுககு அவ்வள்வு
தயாராய் இருந்திருப்பார்?.
தயாராய் இருந்திருப்பார்?.
தன் சாவு- நிச்சயமான
ஒன்று என்கிற அறிவு,அதிகார
வர்ககம் அவருககு அளித்திருந்த தண்டணையே
சாவு என்கிற பகுத்துப் பார்ககிற
அறிவு, அவருககு இருந்ததால்தான் அவரால்
சாவு என்பது ஒரு வாழ்வின்
(கடைசி) நிகழ்வு என்கிற சாவகாசத்
தன்மையோடு அமைதி காகக முடிந்திருககிறது.
அது மட்டுமல்ல!
விஷத்தை அருந்திய சாக்ரடீஸ்,’அது முறையாக வேலை
செய்ய நான் ஏதாவது செய்ய
வேண்டுமா?’ என்று அதிகாரியிடம் கேட்டிருககிறார்.
பின்னர் அதிகாரி சொன்னபடி விஷத்தை
குடித்துவிட்டு கால்கள் மரத்துப் போகும்வரை
சற்று முன்னும் பின்னும் நடந்த அதுவரை சோகத்தை
அடககி வைத்துக கொண்டிருந்த சீடர்கள்
ஓவென்று கதற,’ என்ன இது?
மரணத்தின்போது அமைதி நிலவுவது அழகாக
இருககுமே!’ என்றாராம்.
‘என்ன ஒரு மனிதர்?’
என்று பிரமிககத் தோன்றுகிறதல்லவா?.
அதனால்தானோ என்னவோ அவர் இறந்த
பிறகு நாமெல்லாம் சொல்வதுமாதிரி, ‘அவர் இறந்துவிட்டார்’ என்றோ,’பரலோக ப்ராப்தி அடைந்தார்’
என்றோ, இறைவனடி சேர்ந்தார்’ என்றோ
சொல்லாமல், அவரது மரணத்தை ‘சாக்ரடீஸ்
இன்றுமுதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்’ என்று அவரது சீடர்கள்
அறிவித்தனர்.
ஏதென்ஸ் நகரமே களையிழந்து
போனதாக வரலாற்றின் பக்கங்களில் பதிவு இருககிறது!.
ஆம்!.
சிந்திப்பது ஒன்றுதான் மனிதனை மனிதனாக உயர்த்திருக்கிறது.
மனிதனை மீறி ஒரு சகதி
இல்லை என்பது ஒரு தத்துவம்.
பகுத்தறிவு மட்டுமே மனிதன் மனிதனாக
இருக்க உதவும் என்பது இன்னொரு
தத்துவம்.
சாகரடீஸ் சொன்ன ‘உன்னையே நீ
எண்ணிப் பார்’ என்பது எவ்வளவு
பெரிய பகுத்தறிவுத் தத்துவம்?.
நாம் நம் மீது
சந்தேகப்படும்போதெல்லாம் நம் பகுத்தறிவுதானே நமககு
வழித்துணை? நம் மீது விசாரணைகள்
ஏவப்படும்போதெல்லாம் நாமெப்படி சிந்திககிறோம்? அல்லது நிர்ப்பந்திககப்படுகிறோம்?.
கடவுள் இருககிறார் என்று
மார்தட்டுவதும் பகுத்தறிவுதான், கடவுள் இருககிறாரா என்று
கேள்வி எழுப்பதும் பகுத்தறிவுதான். நமககுள் ஒரு பயம்
ஏற்படும்போது கடவுள் பேரைச் சொல்லி
நமககு நாமே தைரியப்படுத்திககொள்வதற்கும், தப்பான வழியில் போகவிருககும்
ஒருவனை கடவுள் பேரைச் சொல்லி
நல்ல வழியில் திருப்புவதற்கும்………………..சொல்லுங்கள், இதுதான்
பயப்படவேண்டியது- இதுதான் சரியான பாதை
எனும் பகுத்தறிவு வேணுமா,வேண்டாமா?.
மாடனை, காடனை, வேடனைப்
போற்றி வணங்கும் மதியிலிகாள்! பல்லாயிரம் வேதங்கள் அறிவொன்றே தெய்வமென்றோதி அறியீரோ? என்றாரே பாரதி? ஏன்?
‘அறிவே தெய்வம்’ என்றதனால்தானே?
‘தெய்வம் நீ என்றுணர்!’
என்பதன் முழுமை எப்போது? நாம்
நம்மை முழுமையாக அறிந்தபின்தானே? அந்த நிலையில் பகுத்தறிவும்,
கடவுளும் இரண்டற கலந்து ஒன்றிவிட்ட
தன்மை தெரிகிறதே?
‘கடவுள் பாதி, மிருகம்
பாதி’ என கலந்து செய்த
கலவையாக மனிதன் இருககலாம். ஆனால்
எந்த பாதியை அவன் தனககுள்
தேடுகிறானோ அது தானே அவனுககுள்
பெருகும்?.
என்னுள் என் எல்லா
காரியங்களுககும் உறுதுணையாக இருப்பது யார், அது தான்
கடவுளா? ரைட். அவரை நான்
நம்புகிறேன். நான் அவரைப் பின்பற்றுகிறேன்.
என் எல்லாம் வல்லவனே நீ
என்னுடன் எப்போதும் என் எல்லா நல்ல
காரியத்திலும் இரு. நீயின்றி நானில்லை
அய்யனே!.-இப்படி வேண்டிக கொள்ளவும்
குறிப்பிட்ட பகுத்தறிவு வேண்டுமில்லையா?.
உண்மையில் கடவுளிடமிருந்து தூர விலகி இருப்பவன்
பகுத்தறிவுவாதி இல்லை. அவரின் அருகிலேயே
இருப்பவனே உண்மையான பகுத்தறிவுவாதியாக தன்னை தைரியமாக அறிவித்துக
கொள்ள தகுதி உள்ளவன் ஆவான்.
இல்லையென்றால் ‘சுயமரியாதைச் சுடர்’, ‘பகுத்தறிவுப் பகலவன்’, ’வெண்தாடிவேந்தன்’ , ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’, ‘இந்நாட்டு இங்கர்சால்’……தந்தை பெரியார் ஈ.வெ.ரா. ஈரோட்டின்
திருககோயிலுககு அறங்காவலராக இருந்திருகக முடியுமா?.
No comments:
Post a Comment