ஆரோக்கிய மருத்துவ குறிப்புகள்..


கிராம்பை நீர் விட்டு மை போல அரைத்து நெற்றியிலும், மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலை பாரம், நீரேற்றம் குணமாகும்.

படர் தாமரைக்கு அருகம் புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து, படர் தாமரை உள்ள இடத்தில் பூச, விரைவில் படர் தாமரை மறையும்.

கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்ற பின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு மிளகை தூள் செய்து, சம அளவு பனைவெல்லம் கலந்து, சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட இருமல் குறையும்.


கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக் கம்மல் நிவர்த்தியாகும்.

No comments:

Post a Comment