சுத்தம் - தெனாலிராமன் கதைகள்



மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு ஓர் எண்ணம் ஏற்பட்டது. எப்போது பார்த்தாலும் தனது புத்திக்கூர்மையால் னைவரையும் சிரிக்கவைத்து விடுகிறானே இந்ததெனாலிராமன். இவனை எப்படியும் மட்டம் தட்டவேண்டும் என்று எண்ணினார். அதன்படியே ​​செயல்படத்தொடங்கினார்.

ஒருநாள் அரசவை கூடியது. அப்போதுதெனாலிராமனை அருகில் ழைத்தார் மன்னர். ​தெனாலிராமா, ''​நேற்று இரவு நான் தூங்கும்போது ஒரு கனவு கண்டேன்'' என்றார் மன்னர்.

உடனேதெனாலிராமன் ''அது என்ன கனவு'' என்றுகேட்டான்.

அதற்கு மன்னர் ''வழக்கம்போல் நாம் இருவரும் உலாவச்சென்றோம். அப்போது எதிர்பாராதவிதமாக நான்தேன் நிறைந்த குழியிலும் நீ சாக்கடையிலும் விழுந்து விட்டோம்'' என்றார். தைக்கேட்டதும் அரசவையில் உள்ளோர் னைவரும்தெனாலிராமனைப் பார்த்துகேலியாகச் சிரித்தனர்.

எல்லோரும் சிரிப்பதைப் பார்த்ததும்தெனாலிராமனுக்குகோபம் ஏற்பட்டது. இருப்பினும் அடக்கிக்கொண்டான். அரசரை எப்படியும் மட்டம் தட்டியே தீருவது எனக் கங்கணம் கட்டிக்கொண்டான். மறுபடியும் மன்னர்சொன்னார், ''நான்தேன் குழியிலிருந்து எழுந்து விட்டேன். நீயோ அதிலிருந்து ரையேற முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாய்'' என்றார்.

தைக்கேட்டதெனாலிராமன் அதன் பின் என்ன நடந்தது என்றுகேட்டான். அதற்குள் நான் விழித்துக்கொண்டேன் என்றார் மன்னர். மறுநாள் அரசவைக் கூடியதும்தெனாலிராமன் வந்தான்.

மன்னரைப் பார்த்து,''மன்னர்பெருமா​​னே தாங்கள் கனவு கண்டதாகசொன்னீர்களே, அதன் மீதியை நான்நேற்று இரவு கனாக் கண்டேன்'' என்றான். தைக்கேட்டதும் மன்னர் கனவு எப்படி இருந்தது என்றார்.

'' தாங்கள்தேன் குழியிலிருந்து ரையேறி நின்றீர்களா? நானும் எப்படியோ அந்தச் சாக்கடைக் குழியிலிருந்து ரையேறி விட்டேன். இவ்விஷயம் மற்றவர்களுக்குத்தெரியாமல் இருப்பதற்காக நான் உங்களை என் நாவால் நக்கி சுத்தப்படுத்தி விட்டேன். நான்செய்ததுபோலவே நீங்களும் என்னை தங்கள் நாக்கால் நக்கி சுத்தப்படுத்தினீர்கள்'' என்றான்தெனாலிராமன்.


இவ்வார்த்தைகளைக்கேட்டதும் மன்னர் சிறிது அதிர்ச்சியுற்றாலும்தெனாலிராமனின் சாமர்த்தியத்தை எண்ணி மனமாரப் பாராட்டினார்.               

No comments:

Post a Comment