எந்நேரமும் மொபைல், கம்ப்யூட்டர் 'நோண்டுபவரா' நீங்கள்..? உஷார்..!


டிஜிட்டல் ஸ்க்ரீன்களுக்கு முன்னால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் வரை செலவு செய்யும் போது கண்களுக்கு ஏற்படும் சிரமம் ஆனது உடல்ரீதியான வசதியின்மையை உண்டாக்கும், அதைத்தான் 'டிஜிட்டல் ஸ்ட்ரெய்ன்' (Digital Eye Strain) என்கிறார்கள்..!



டெஸ்க்டாப், லாப்டாப், டேப்ளெட், ஸ்மார்ட்போன் என எல்லாமுமே டிஜிட்டல் திரைகள் தான். அதற்காக அவைகளையெல்லாம் பயன்படுத்தாமலும் இருக்க முடியாது. அதே சமயம் 'டிஜிட்டல் ஸ்ட்ரெய்ன்'தனை தவிர்க்கும் வாய்ப்பும் மிக குறைவு தான். அப்போது என்ன செய்யலாம்..??

'டிஜிட்டல் ஸ்ட்ரெய்ன்' ஏற்படும் போது அதை உடனடியாக சரிசெய்து கொள்ளும்படியான 5 டிப்ஸ்களை தான், கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம். கண்கள் 'ரொம்ப ரொம்ப' முக்கியம், பத்திரமா பாத்துக்கோங்க..!



டிப்ஸ் 01 :

கம்ப்யூட்டர் ஐவேர் அல்லது கிளாசஸ்களை அணிந்து கொள்ளலாம்.



பார்வை மேம்பாடு :

அதாவது உங்கள் கண்களுக்கு ஏற்றமுறையில், பாதிக்கக்கூடிய நீள நிறத்தை தடுத்து பார்வையை மேம்படுத்தும் கண்கண்ணாடிகளை பயன் படுத்தலாம்.



டிப்ஸ் 02 :

கண்களுக்கும் பார்வைக்கும் மிகவும் உதவும் 20 - 20 - 20 விதியை நடைமுறைப்படுத்தலாம்.



20 நொடி :

அதாவது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு இடையிலும், 20 அடி தூரத்தில் உள்ள ஏதாவது ஒரு பொருளை 20 நொடிகளுக்கு பார்க்க வேண்டும்.



டிப்ஸ் 03 :

ஒளிவழிக்கு உகந்தவாறு வேலை செய்யும் இடத்தை அமைத்துக்கொள்ளுதல்.



குறைவான ஒளி :

எடுத்துக்காட்டுக்கு தலைக்கு மேல் இருக்கும் மின்விளக்கின் ஒளி குறைவாக இருப்பின் கண்கள் கூசுவதை தவிர்க்கலாம்.



டிப்ஸ் 04 :

கருவிகளுக்கும் உங்களுக்கும் இடையே உள்ள ஹை-ஃபைவ் டிஸ்டன்ஸ்.



சரியான நிலை :

அதாவது, மொபைல் அல்லது கம்ப்யூட்டருக்கும் உங்களுக்கும் இடையே உள்ள இடைவெளி ஆனது நெருக்கமான பார்வையிலோ அல்லது மிக தொலைவான பார்வையிலோ இல்லாமல் சரியான நிலையில் இருக்கும்படியாக அமைத்துக் கொள்ளுதல்.



டிப்ஸ் 05 :

ஸ்க்ரீன் டெக்ஸ்ட் ஸைஸ்'தனை அதிகரித்தல்.



உள்ளடக்கம் :

ஸ்க்ரீனின் உள்ளடக்கம் நம் கண்களுக்கு தெளிவாக இருக்கும்படியான, பொதுவான ஒரு டெக்ஸ்ட் சைஸ் வைத்துக்கொள்ளுவது மிகவும் நல்லது.


No comments:

Post a Comment