விண்டோஸ் எக்ஸ்பியின் டிபால்ட் வால்பேப்பர் இது அனிமேடட் வால்பேப்பர் இல்லை, நிஜமான புகைப்படம்


தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட சில விடயங்களை மறக்காமல் சொல்வோம். அது நமது ஞாபக சக்தியை காட்டிலும், நாம் ஞாபகம் வைத்துக்கொள்ளும் பொருட்கள் மறக்கவே முடியாதபடி நம் மீதும் நம் வாழ்வின் மீதும் செலுத்தும் தாக்கத்தையே அதிகம் வெளிப்படுத்துகிறது. 



அப்படியாக 'கிட்டத்தட்ட' நம் அனைவர் நினைவிலும் நிற்கும் ஒரு பிரபலமான விடயம் தான் - விண்டோஸ் எக்ஸ்பியின் டிபால்ட் வால்பேப்பர் (Default wallpaper of Windows XP).அந்த அழகான நீல வானம், மிகவும் பசுமையான மலை பிரதேசம் என ஒரு காலத்தில் நமது கம்ப்யூட்டர்களின் ஒரே வால்பேப்பராக திகழ்ந்த அதை யாராலும் மறந்திருக்கவே முடியாது என்பது தான் நிதர்சனம். 

அப்படியான அந்த வால்பேப்பர் பற்றிய நாம் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய விடயம் ஒன்றும் இருக்கிறது..! 

அனிமேடட் வால்பேப்பர் : 

ஆனது ஒரு அனிமேஷன் வால்பேப்பர் என்று தான் நம்மில் பெரும்பாலனோர்கள் இன்றுவரை நம்பிக் கொண்டிருக்கிறோம். 
ஆனால் உண்மை என்னவென்றால் இது அனிமேடட் வால்பேப்பர் இல்லை, ஒரு நிஜமான புகைப்படம்., அதற்கு ஒரு சின்ன கதையும் இருக்கு..!


1996 : 

பிலிஸ் என்ற பெயர் கொண்ட விண்டோஸ் எக்ஸ்பி வால்பேப்பரை

புகைப்படம் எடுத்தவர் - சார்லஸ் ஒ ரியர், 

புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு : 1996.



காதலி :

நேஷனல் ஜியோகிராபிக் சேனலில் பணியாற்றிய சார்லஸ் தனது காதலியை காண்பதற்காக காரில் சென்று கொண்டிருக்கும் போது, வழியில் சோனோமோ என்ற நகரில் இந்த புகைப்படத்தை எடுத்தாராம்..! 


2001 : 

பின்பு 1989-ஆம் ஆண்டு பில் கேட்ஸ் நிறுவிய புகைப்படம் மற்றும் அதன் உரிம சேவை நிறுவனமான கோர்பிஸ் நிறுவனத்தில் தான் எடுத்த புகைப்படத்தை வழங்கியுள்ளார். அந்த புகைப்படம் ஆனது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கவனத்தை பெருமளவு ஈர்க்க, அது 2001 ஆம்-ஆண்டு வெளியான மைக்ரோசாப்ட் எக்ஸ்பியின் டிபால்ட் வால்பேப்பர் ஆனது. 


பெரிய தொகை :

ஒப்பந்த அடிப்படையில் இந்த புகைப்படத்திற்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ள போதும், இதுவரை ஒற்றை புகைப்படத்திற்கு யாரும் வழங்கி இல்லாத அளவிற்கு பெரிய தொகை இந்த புகைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாம். 


பின்பு : 

சுமார் 10 வருடங்களுக்கு பின்பு அதே இடம், சிமோன் கோல்டின் என்ற புகைப்பட கலைஞரால் எடுக்கப்பட்டப்போது. 



முடிவு : 

2014-ஆம் ஆண்டோடு மைக்ரோசாப்ட் எக்ஸ்பி யின் சேவை முடிவுக்க வர, மிகவும் பிரபலமான இந்த வால் பேப்பரின் பங்களிப்பும் முடிவுக்கு வந்தது..! 

வீடியோ :

விண்டோஸ் எக்ஸ்பி வால்பேப்பர் மற்றும் சார்லஸ்..!





No comments:

Post a Comment