அப்பா
இங்க வந்து பாருங்களேன்...
அம்மா
வச்ச குழம்பக் குடிச்சிட்டு மீனெல்லாம்
செத்துக்
கிடக்குது சட்டிக்குள்ள!!
யாருக்காவது
குழிதோண்டவும்
மண்ணள்ளிப்
போடவும் விரும்பினால்
அதை
விதைகளுக்குச் செய்யுங்கள்...
பிய்த்து
எடுத்தாலும் பீரோவை விட்டு
வர
மறுக்கும் சக்திமான் ஸ்டிக்கரில்
ஒட்டியிருக்கிறது
என் பால்யம்...
உச்சிக்குப்
போய்விட்டால் எல்லாப்
பக்கமும்
சரிவுதான்...
ஆம்பளைங்க
பண்ற தண்டச்செலவுல
மறக்கமுடியாதது
கல்யாணத்துக்கு
வாங்குன
கோட்டு...
எப்பப்
பாத்தாலும்
எரிச்சலா
வேற இருக்கும்...
இனி
ஒரு விவசாயி இன்னொரு
விவசாயிக்கு
இப்படி கடிதம் எழுதுவார்...
"இங்கு
நான் நிலத்துடன் இருக்கிறேன்,
அங்குநீ
நிலத்துடன் இருக்கிறாயா என
அறிய
ஆவல்"
நம்
புகைப்படத்தைப் பார்த்து
"ஆ!...
இது யாரு!" என திகைப்பதன்
சுருக்கமே
ஆதார்...
ரெய்னாவுக்கு
28 வயசுதான்.
கல்யாணம்
முடிஞ்சுடுச்சுன்னு
அம்மாகிட்ட
சொன்னேன். அவன்
சம்பளம்
எவ்வளவுன்னு டான்னு
பதிலுக்குக்
கேக்கறாங்க...
ஒரு
உண்மையில் சமாதானம்
ஆகாமல்
பல பொய்களால் சமாதானமடைபவள்
மனைவி...
பிளாட்பார
டிக்கெட் பத்து ரூபாய்க்கு வாங்கியே
பிளாட்பாரத்துக்கு
வந்துடுவோம் போல..!!
பிளாட்பாரத்துல
நின்னாதான் கட்டணம்
10 ரூபாயாம்.
அப்படியே கீழ உக்காந்துட்டா
கேட்கமாட்டாங்களாம்.
பிச்சைக்காரன்
சொன்னான்...
தொட்டாச்
சிணுங்கியைத் தொட்டு
விளையாடிய
குழந்தையின் கரங்கள்
இன்று
தொடு திரையில் சிக்கிக் கொண்டன...
ஒரு
கிரகத்துக்கு விஸ்வநாதன் ஆனந்த்
ன்னு
பேர் வச்சிருக்காங்களாம்...
எனக்கு
எங்கவீட்ல
'கெரகம்' ன்னு பேர் வச்சு
ரொம்ப
வருஷமாச்சு...
மழுங்கிப்
போன அப்பாவின் கண்ணாடியை
அணிந்தபோது
பூதாகரமாகத் தெரிந்தது,
எங்களுக்காகத்
தொலைத்த வாழ்க்கை.!!
No comments:
Post a Comment