ஒரு பள்ளி ஆசிரியை கரும்பலகையில் கீழ் கண்டவாறு எழுதினார்.
9×1=7
9×2=18
9×3=27
9×4=36
9×5=45
9×6=54
9×7=63
9×8=72
9×9=81
9×10=90
இதை எழுதி முடித்தவுடன், மாணவர்கள் அனைவரும் சிரித்து கேலி செய்தனர்.
காரணம் கேட்ட போது, ஆசிரியை எழுதிய முதல் வாக்கியம் தவறு என்று சொன்னார்கள்.
ஆசிரியை மாணவர்களை நோக்கி, "உண்மைதான்! அது தவறுதான் ஆனாலும் ஒரு காரணத்திற்காக நான் அப்படி செய்தேன். ஏனெனில் நான் மற்ற வாக்கியங்கள் எல்லாம் எழுதியிருந்தாலும் அதற்காக நீங்கள் என்னை பாராட்டவில்லை ஒரு தவறான செயலுக்கு கேலி செய்கிறீர்கள் அல்லவா? இது தான் உலகம்.
நீங்கள் நல்லது எவ்வளவு செய்தாலும் ஒரு தவறில் எல்லாம் முடிந்துவிடும். ஆக, நல்லது செய்வது முக்கியம் என்றால் தவறு செய்யாமல் நல்லது செய்வது அதைவிட முக்கியம்...
No comments:
Post a Comment