வாழ்க்கை குறுகியது, ஆனா அழகானது


 'நம்ம நாலு பேர்  ரெஸ்டாரண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்தை விட நம்ம நட்பை அதிகமா மதிக்கிறான்' னு அர்த்தம்.

 முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ (Ego) விட நம்ப உறவை மதிக்கிறாங்க' னு அர்த்தம்.

 நம்ம கண்டுக்காம விட்டாலும் இருந்திருந்து நமக்கு கால் பண்றாங்கன்னா அவங்க வேல வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்கட மனசில இருக்கம்னு அர்த்தம்.

 பின்னொரு காலத்தில நம்ம புள்ளங்க நம்மகிட்ட கேட்கும் '"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்?? ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் ' அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்கள நாங்க கழிச்சிருக்கோம்' என்று.

No comments:

Post a Comment