கோபத்தின் கதை...


ஒரு இளைஞனுக்கு அடிக்கடி அதிகமான கோபம் வந்து 
கொண்டே இருந்தது. ஒரு நாள் அவனிடம் அவன் தந்தை 
ஒரு சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார்.. 
இனிமேல் கோபம் வரும் பொழுது எல்லாம்.. வீட்டின் 
பின் சுவரில் ஆணிகள் அடுக்கும்படி ,கூறினார்.
முதல் நாள் 10 மறுநாள் 7,5,3என படிப்படியாக 
ஆணி எண்ணிக்கை குறைய குறைய கோபமும் 
குறைந்தது. ஒரு நாள் ஒரே ஒரு ஆணி மட்டுமே 
அடித்தான். மொத்தமாக 45 ஆணிகள் அடித்து 
உள்ளதாகவும் இனி கோபமே வராது, எனவும் 
தந்தையிடம் கூறினான். 

அதற்கு அவன் தந்தை, 
இனி கோபம் வராத நாட்களில் அடித்த ஆணிகளை 
பிடுங்கி விடு என்றார்.. மேலும் 45 நாளில் ஆணிகளை 
பிடுங்கி விட்டதாக பெருமையுடன் தந்தையை 
அழைத்து காட்டினான்.. 

உடனே அவன் தந்தை 
சொன்னார் ஆணிகளை பிடுங்கி விட்டாய், 
அதனால் சுவற்றில் ஆன ஓட்டைகளை என்ன செய்வாய்?.. 

உன் கோபம் பல பேரை இது போல காயபடுத்தி 
இருக்கும் அல்லவா...!!

அந்த இளைஞன் வெட்கி தலை குனிந்தான். !..
இந்த இளைஞர் போலதான் நாமும் சில நேரங்களில் 
நடந்து கொள்கிறோம் ...! 


நாம் கோபப்படடு சில அன்பு உள்ளங்களை 
காயப்படுத்தினால். மன்னிக்க முடியும். ஆனால்
உயிர் இருக்கும் மறக்கவும் முடியாது.மனதை
விட்டும் அழியவும் அழியாது. ...!!


கோபம் தோல்வியடைகிற போதெல்லாம்
அன்பு வெற்றியடைகிறது...!!

No comments:

Post a Comment