குழந்தைகள் செய்யும் சுட்டித்தனமான சில காரியங்கள்!!!


 குழந்தைகள் என்றாலே ஆனந்தம் தான். அவர்களின் தூய்மையான உள்ளமும் கள்ளம் கபடமற்ற சிரிப்பும் நம்மை வெகுவாக கவரும் வண்ணம் அமையும்.

 சில குழந்தைகள் நம்மை கவருவதில் சிறந்தவராக இருப்பார்கள் மற்றும் சிலர் அவர்களின் செயல்கள் மூலம் நம்மை பிரமிக்க வைப்பார்கள்.

 எது எப்படி இருந்தாலும் நாம் அவர்களால் மெய்மறந்து போகிறோம் என்பது உன்மைதான். அவர்கள் விளையாடும் போது நமக்குள் ஒளிந்திருக்கும் குழந்தையும் நம்மை அறியாமல் வெளியே வந்து விடும்.

இந்த சமயத்தில் ஒரு பெற்றோராக நம்மால் அவர்களை கண்டிக்கவோ அல்லது அமைதிப்படுத்தவோ முடியாது. இத்தகைய காரியங்கள் நமது குழந்தையானாலும் சரி, மற்றவர்களின் குழந்தையானாலும் சரி - யார் செய்தாலும் நமது உற்சாகத்தை தூண்டும் வண்ணம் அது அமையும்.

 இன்பத்தின் உச்சக்கட்டத்திற்கே நம்மை அது எடுத்து செல்லும் இத்தகைய சிறிய மனிதர்கள் தான் நமது குழந்தைகள். பெற்றோர் என்ற முறையில் நாம் பல காரியங்களை செய்வதுண்டு.

 ஆனால் நம்மை மிகவும் மகிழ்விக்கும் சம்பவங்கள் பெரும்பாலும் நமது குழந்தைகளை சார்ந்தே இருக்கின்றது. அவர்களின் சுட்டித்தனம், சிரிப்பூட்டும் காரியங்கள் மற்றும் பல காரியங்கள் நம்மை மயங்க வைக்கின்றன.

 இவர்களின் செயல்கள் நம்மை சிறிது கடினப்படுத்தினாலும் அவர்கள் செய்யும் குறும்புத்தனத்திற்கும் சுட்டித்தனத்திற்கும் அளவே இல்லை. இந்த பகுதியில் குழந்தைகளின் இன்பமான செயல்கள் பற்றி நாம் படித்து மகிழ்வோம்.

 எப்போதும் ஆர்வம் காட்டுவது எப்போதும் ஏதேனும் புதிய பொருட்களை பார்த்தால் அவர்கள் பெரும் ஆர்வத்தை காட்டுவார்கள். அதை அலசி ஆராயும் வரை அவர்களின் கைகள் ஓய்வதில்லை.

 இத்தகைய பொருட்களை குறித்து அவர்களுக்கு வரும் கேள்விகளை எப்போதும் கேட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். ஒராயிரம் கேள்விகள் கேட்டு சந்தேகம் தீரும் வரை அதை ஆராய்ந்து கொண்டு தான் இருப்பார்கள்.

 அளவற்ற சிரிப்பு குழந்தைகள் பொதுவாகவே எந்த ஒரு குறும்புத்தனம் செய்தாலும் ஒரு சுட்டித்தனமான சிரிப்பை நம்மை பார்த்து காட்டுவார்கள். சில சமயங்களில் அவர்கள் சந்தோஷமாக இருந்தாலும் எதை கண்டாலும் அதை பார்த்து நம்மை கவரும் வகையில் சிரிப்பார்கள்.

 அக்குழந்தையின் சிரிப்பு அவர்களின் கண்களில் மின்னுவதை நாம் காண முடியும். இது நமக்கு சுகந்தமான உணர்வை தரும். கவனத்தை ஈர்ப்பவர்கள் குழந்தைகள் நமது அன்பையும், அரவணைப்பையும், கவனிப்பையும் மிகவும் அதிகமாக எதிர்பார்ப்பார்கள்.

 அவர்கள் எதிர்பார்க்கும் கவனத்தை நாம் தராவிட்டால் மிகவும் சோர்ந்து விடுவார்கள். குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் தனக்காக மட்டும் தான் இத்தகைய காரியங்களை செய்ய வேண்டும் என்று எண்ணுவார்கள்.

 ஒரு வேளை அவர்களைக் காட்டிலும் அவர்களின் சகோரர்களிடம் இத்தகைய அன்பை வெளிப்படுத்தினால் கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. குழந்தைகளின் மனநிலை குழந்தைகளின் மனநிலை எப்போதும் மாறிக் கொண்டே தான் இருக்கும். அவர்களுடைய மனநிலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு முடிவே கிடையாது.

 அவர்களது மனநிலை சிறிய காரியங்களை குறித்தும் கூட மாறிக் கொண்டே இருக்கும். எப்போதும் நாம் அதை கணிக்க முடியாது. ஒரு வேளை காய்கறி சாப்பிட விரும்பாமல் சங்கடப்படலாம் அல்லது பள்ளிக்கு செல்லக் கூடாது என்று அவர்கள் கவலைப்படலாம்.

 இது போன்ற சிறிய காரியங்களை குறித்தே அவர்களின் மனநிலை இருக்கும். ஓடும் காரில் நிற்பது குழந்தைகள் எப்போதும் மிகவும் பரவசமாக இருப்பார்கள்.

 அதுவும் வெளியே நாம் கூட்டி செல்கின்றோம் என்று தெரிந்தால் போதும் மிகவும் ஆனந்தமாக இருப்பார்கள். காரில் அல்லது வண்டியில் ஏறினால் போதும் அவர்களின் உற்சாகத்திற்கு அளவே இருப்பதில்லை. உற்சாகத்தில் நின்று கொண்டு தான் இருப்பார்கள்.

 நின்று கொண்டு எதிர்வரும் அனைத்து விஷயங்களையும், பொருட்களையும் வரப்போகும் மக்களையும் பார்த்து ஆராய்ந்து கொண்டு இருப்பார்கள்.

 அவர்கள் காணும் அனைத்து விஷயங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள விரும்புவார்கள். செய்வதை திருப்பி செய்பவர்கள் நாம் செய்யும் செயல்களை திருப்பி செய்வதில் குழந்தைகளை அடித்துக் கொள்ள யாராலும் முடியாது. இதை எப்படி கற்றுக் கொள்கின்றனர் என்பதை யாராலும் அறிந்து கொள்ள முடியாது.

 வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் செய்யும் காரியங்களை மிக உன்னிப்பாக கவனிக்கும் சிறுவர்கள் நாம் இருக்கும் போதும் நாம் இல்லாத போதும் அதை செய்து பார்க்கின்றனர். போனில் பேசுவது, முகத்தில் பவுடர் பூசுவது போன்ற செயல்களை நம்மை பார்த்து கற்றுக் கொண்டு அதை திரும்பச் செய்கின்றனர்.

 அவர்கள் இதை எல்லாம் செய்யும் போது அதை நாமும் பார்த்து மகிழ்கின்றோம். அது மட்டுமல்லாமல் நாம் செய்யும் சைகைகள், முக பாவனைகள் ஆகியவற்றையும் கவனித்து கற்று அதையும் அவ்வப்போது பயன்படுத்துகின்றனர்.

 இதை எல்லாம் பார்க்கும் போது நமக்கே விந்தையாகதான் இருக்கும். மிருகங்களுடன் விளையாடுவது நாய் குட்டிகள் மற்றும் நாய் ஆகியவை மிகவும் அழகான பிராணிகளாகும். குழந்தைகளுக்கும் இவைகளை மிகவும் பிடிக்கும். அவற்றின் முடியை பிடிக்கவும், கட்டி அணைக்கவும் மற்றும் அதை வைத்துக் கொண்டு பல காரியங்களில் இவர்கள் ஈடுபடுவர். அதில் சந்தோஷமும் அடைவார்கள்.

 அவைகளுடன் விளையாடும் போது மிகுந்த பரவசமடைவார்கள். நாய் வாலை பிடிப்பது போலவும், அதை ஏமாற்றுவது போலவும் பல கேளிக்கையான காரியங்களை செய்து பார்பவர்களையும் மகிழ வைப்பார்கள். ‘இளங்கன்று பயமறியாது' என்ற கூற்றிற்கு இணங்க அவைகளின் அபாயம் தெரியாமல் அதன் வாயிற்குள் கைகளை விடும் அளவிற்கு அசட்டை தைரியம் கொண்டவர்கள் நமது அழகு குழந்தைகள்.

 அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் அவர்களின் வீட்டு நாய் அல்லது பூனை போன்ற பிராணிகளிடம் பேசுவதை பார்க்கும் நமக்கும் அது பொழுதுபோக்காக மாறி விடுகிறது. முகம் சுளிப்பது நாம் குழந்தைகளுக்கு பிடிக்காத காரியத்தை செய்யும் போதும், அவர்கள் கேட்பதை நாம் வாங்கித் தராத போதும் அவர்கள் முகத்தை சுளிப்தே ஒரு அழகு தான்.

 அழுவதை போல் நடிப்பது, கோபப்படுவதை போல் இருப்பது இவை எல்லாம் அவர்களுக்கு கைவந்த கலையாகி விடுகிறது. ஆனால் இத்தகைய முகம் சுளிப்பது குழந்தைகளின் இயல்பான செயல் என்பதை நாம் மறுக்க முடியாது.


No comments:

Post a Comment