கிரகணத்தின் போது ஏன் கோவில் மூடப்படுகிறது தெரியுமா?




                 வளிமண்டல மாசுபாடு 
இன்றைக்கு நிலாவில் தெரிகிற நிறத்தைக் கொண்டே வளிமண்டலத்தில் இருக்கிற மாசு குறித்தும் அதன் அளவு குறித்தும் நீங்கள் கண்டுபிடிக்கலாம். முழுகிரகணம் ஏற்படும் போது வளிமண்டலத்தில் இருக்ககூடிய மாசின் அளவைப் பொறுத்தே அதன் நிறமாற்றம் இருக்கும். வளி மணடலத்தில் அதிக மாசு இருந்தால் சூரியனின் வெளிச்சத்தை அது சிதறடித்துவிடும். அப்போது சிவப்பு நிற கூறு அதிகமாக இருக்கும் அவை நிலவில் விழுவதால் நிலவு சற்று ஆழமான சிவப்பு நிறத்தில் தோன்றும். மாசு குறைவாக இருந்தால் சற்று இளஞ்சிவப்பு நிறத்தில் நிலவு தெரியும்.


கிரகணம்
 இது போன்ற கிரகணங்கள் ஏற்படும் போது ஹிந்துக்கள் மத்தியில் அதிக நம்பிக்கைகள் இருக்கின்றன. இந்த சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகியவை இயற்கையான நிகழ்வாக இருந்தால் அதனால் ஏற்படுகிற தாக்கத்தை குறைக்கும் வகையில் ஹிந்துக்களிடையே பல்வேறு பழக்கங்கள் இருக்கின்றன. கிரகணம் ஏற்பட்டதும் சாப்பிடக்கூடாது, வெளியில் செல்லக்கூடாது என்று எக்கச்சக்க கட்டுப்பாடுகளை தங்களுக்குள் விதித்திருக்கிறார்கள்.


ராகு கேது
ஒளி ஊடுருவும் போது ஒரு பொருள் குறிக்கிட்டால் நிழல் உருவாகும். அதனால் நேரடியாக கிடைக்கூடிய ஒளியும் தடைபடும். இதனால் ஏற்படும் தாக்கத்தின் பலனால் நன்மை தீமை உண்டாகும் என்று ஜோதிடர்கள் கணிக்கிறார்கள். இங்கே நாம் பார்க்கக்கூடிய ராகுவும் கேதுவும் எதனுடைய நிழலும் கிடையாது. இவை ஒரேயிடத்தில் தான் இருக்கும். ஒரேயிடத்தில் நின்றால் பிறகு இந்த ராகு கேது பெயர்ச்சி எல்லாம்....

சூரிய குடும்பம்
 வளிமண்டலத்தில் ஒரேயிடத்தில் நிற்கக்கூடிய புகை மண்டல பகுதிகள் தான் இந்த ராகுவும் கேதுவும். ஆன்மீக ரீதியாகப் பார்த்தால் இந்த சூரிய குடும்பத்தை பன்னிரெண்டு பிரிவுகளாக பிரித்திருக்கிறார்கள். பூமி சுழன்று கொண்டிருப்பதால் நடுவில் நிற்கும் சூரியன் ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு ராசிக்கு மாறுவதாக சொல்லப்படுகிறது. இதில் நம் வளிமண்டலுமும் சுழன்று கொண்டிருக்கிறது என்பதை மறந்திட வேண்டாம். இப்படி சுழலும் போது ஒவ்வொரு ராசியின் நிழல் ராகு கேது மீது விழக்கூடும். அந்த நிழற்கோள்களைக் கொண்டே பலன் பார்க்கப்படுகிறது.


நிழல் கிரகங்கள்
 பொதுவாக இந்த நிழல் கிரகங்களுக்கு என்று தனியாக எந்த சக்தியும் கிடையாது. ஆனால் பிற கோளுடன் சேரும் போது அதன் தாக்கத்தை மாற்றம் ஆற்றல் இந்த ராகுவுக்கும் கேதுவுக்கும் உண்டு. இந்த கோள்களை தீய கோள்கள் என்றே சித்தரிக்கின்றோம். ஏன் தெரியுமா? நிஜவாழ்க்கையில் இந்த நிழல் கிரகங்கள் நமக்கு கிடைக்க வேண்டிய பலனின் தன்மையை மாற்றிவிடுகின்றது.  சிறப்பு குணங்கள் : ஒவ்வொரு கிரகங்களுக்கு என்று தனித்தனியே சில குணாதிசயங்கள் இருக்கும். இந்த ஒவ்வொரு கிரகத்திலிருந்து வெளிவரக்கூடிய கதிர்வீச்சு அவரது ஜாதக நிலைக்கு ஏற்ப அவர் மீது தாக்கத்தினை உண்டாக்கும். இந்த கிரகத்தின் கதீர்வீச்சு ராகு கேது வழியாக ஊடுருவி வருகிறது எனும் போது தான் நமக்கு தீமைகள் ஏற்படுகிறது.  


சந்திரன் 
சந்திரனின் கதிர்வீச்சானது ராகு அல்லது கேது ஆகிய புகை மண்டலத்தின் வழியாக ஊடுருவி வெளிவரும் போது அதில் நச்சுத்தன்மை சேர்ந்து விடுகிறது. இந்த நச்சுக் கதிர்வீச்சு மனிதர்கள் மீது விழும் போது, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உண்மையான பலனில் மாற்றங்கள் உண்டாகிறது. ஒரு கிரகத்தின் நல்ல பலனைக் கூட ராகுவும் கேதுவும் நடுவில் புகுந்து மாற்றும் ஆற்றல் உடையவர்களாக இருக்கிறார்கள். இதனால் தான் இன்றைக்கு சந்திர கிரகணத்தின் போது வெளியில் வரவேண்டாம் என்று சொல்லியதன் காரணம்.


கோவில்கள் 
இந்த சந்திர கிரகணத்தின் போது, பெரும்பாலான கோவில்கள் மூடப்படுகிறது. திருப்பத்தியில் கூட ஐந்து மணி நேரம் மட்டுமே கோவில் திறந்திருக்கும் என்ற செய்தி வெளியானது. இந்த சந்திர கிரகணத்திற்கும் கோவில்கள் மூடப்படுவதற்கும் என்ன காரணம் என்று தெரியுமா?



சிலைகள்
 கோவில் என்பது வெறும் நான்கைந்து மண்டபங்களும், சில சிலைகளும் இருக்ககூடிய இடம் கிடையாது அங்கே சில நன்மை தரக்கூடிய வைப்ரேஷன் இருக்கும் அதனால் தான் கோவிலுக்கு போனா அமைதியா இருக்கு, மனசு லேசான மாதிரி இருக்கு என்று சொல்கிறார்கள். அங்கே பல்வேறு விதமான எனர்ஜி சுழன்று கொண்டிருக்கும்.


கிரகண நாட்களில்
 இந்த கிரகண நாட்களின் போது அது சூரிய கிரகணமோ அல்லது சந்திர கிரகணமோ அதன் போது அதிகப்படியாக நெகட்டிவ் எனர்ஜி தான் வெளிவரும். அந்த தாக்கம் அதிகமாக கோவிலுக்குள் வரக்கூடாது என்ற காரணத்திற்காகவே கோவிலின் நடை சாத்தப்படுகிறது.


துளசி
 அதோடு சில கோவில்களில் மூலவரின் வீரியம் குறைந்து விடக்கூடாது என்று மூலவருக்கு துளசி இலைகளால் அலங்காரம் செய்யப்படும். குறிப்பாக துளசி இலைகள் பயன்படுத்துவதற்கு காரணம், அவை கெட்ட கதிர்வீச்சுக்களை உறிஞ்சும் ஆற்றல் கொண்டது.


காளஹஸ்தி
 கிரகணத்தின் போது காளஹஸ்தி கோவிலை மட்டும் மூட மாட்டார்கள். இதற்கு காரணம், இந்தியாவிலேயே இங்கே மட்டும் தான் ராகுவுக்கும் கேதுவுக்கும் பூஜை நடக்கிறது. அதனால் இங்கே கிரகணங்களின் தாக்கம் இருக்காது என்று சொல்லப்படுகிறது.


No comments:

Post a Comment