மஞ்சள் நிலவொன்று...


மஞ்சள் நிலவொன்று 
மயக்குது இசை தந்து.... 

கோபத்தில் சிவந்த 
கதிரை குளிரூட்டும் கானமிது... 

ஆழிக்குள் அடைக்கலமாகும் 
ஆதவனும் ஆனந்திக்கிறான்.... 

அழகே அழகான பதுமை 
ஆரோகணமாய் மீட்டுகிறாள்... 

ஆத்திர உணர்வுகளை 
அவரோகணமாய் குறைக்கிறாள்... 

மங்கல நிறத்தில் மதி எழுந்து 
தூய்மையாய் சிரிக்கிறான்... 

தாய் வீடு வந்த குளிர்ச்சியாய் 
இலைகள் ஓய்வெடுத்து உறங்குது... 

எரிந்து தகித்த வானம் 
வியர்த்து துளிர்க்குது நட்சத்திரம்.. 

இனிய பொழுதின் இன்பம் 
தண்மையின் தனிப் பண்பு... 

தென்றலும் சுகப்படும் 
தேனினிய மாலையிது...!!!!! 

No comments:

Post a Comment