உலகத்தையே ஒரு கலக்கு கலக்கனும்



உலகத்தையே ஒரு கலக்கு கலக்கனும்னு ஆசை...
         but
அந்த கரண்டிதான் எங்க இருக்குனு தெரியல்ல...

                      ***              


 ''டேய்..ஓடாதே.. நில்ரா..
எதுக்குடா இவளை தூக்கிட்டு ஓடறே ?''
''நீங்கதானே சார் சொன்னீங்க....
விளையாட்டு விழா ஆரம்பிக்கறதுக்கு முன்னால  , ஜோதியைத் தூக்கிட்டு ஓடணும்னு '' 

***

 "(என்ன இவ! இன்னக்கி இட்லில இவ்ளோ ஓட்ட போட்டு வச்சுருக்கா)"
"என்னங்க இடியாப்பம் எப்டி இருக்கு"
"(ஆத்தி இடியாப்பமா இது)
சூப்பர் செல்லம்"


***

ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைவாள்.
.
கோபு : யோவ் அது மச்சம் இல்லய்யா 'சூடுய்யா" - அதை வச்சதே என் மனைவி 

    ***


சார்! நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?
கல்யாணத்துக்கு முன்னாடியா,  பின்னாடியா.....?
கல்யாணத்துக்கு முன்னாடிதான் சொல்லுங்களேன்.....
கல்யாணத்துக்கு முன்னாடி, எனக்கு முருகனைத்தான் 
ரொம்பப் பிடிக்கும் .....

அப்போ பின்னாடி.....?
அட, அதை ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் 
நான் வேண்டாத தெய்வமே இல்லை.....!!!

***

             
சத்தியவான் சாவித்திரி.... தன் கணவனை.... எமதர்ம ராஜாவிடமிருந்து தன் தந்திர வரங்களால் கடுமையாகப் போராடி மீட்டாள்....
கதையின் கருத்து :--
ஒரு புருஷன... பொண்டாட்டிகிட்ட இருந்து .... எமதர்மனால கூட காப்பாத்த முடியாது.....!!!

           
***

மனைவி: ஏங்க!  உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு என் புத்தியை செருப்பாலதான்  
அடிச்சுக்கோணும்.....!

கணவன்: செருப்பு இந்தா இருக்கு.....! புத்திக்கு எங்க போவ!!??
                  
***

கணவன்: "என்ன சமைச்சிருக்கே ...? சாணி வரட்டி மாதிரி இருக்கு... நல்லாவேயில்லை"....
மனைவி: "கடவுளே! .... இந்த மனுஷன் இன்னும் என்னவெல்லாம் சாப்பிட்டுப் பார்த்திருக்காரோ.....? 
தெரியலையே... ஏ...ஏ... ஏ....." !

                
***

மனைவி என்பவள் திருக்குறள் போன்றவள்.....
அடேங்ங்ங்ங்ங்ங்ங்கப்பா! எவ்வளவு அதிகாரங்கள்???

***

 நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும்,
மனைவி வந்தபின் நிம்மதியைத் தேடுவதுமே..  ஆண்களின் வாழ்க்கைத் தேடல்..

 ***

மனைவி : என்னங்க பக்கத்து வீட்டில பெரிய சண்டை நடக்குது? போய் ஒரு தடவை என்னன்னு பார்த்துட்டு வாங்களேன்.
கணவன் : ஏற்கனவே ஒரு தடவை போனதுக்குத்தான் சண்டையே நடக்குது 


***

 தக்காளி சோறு, பிரியாணி மாறி இருந்தா அது அம்மா சமையல்! 

பிரியாணியே தக்காளி சோறு மாறி இருந்தா அது பொண்டாட்டி சமையல்! 

  சாப்ட்ட ஒடனே வாந்தி வந்துச்சுன்னா அது லவ்வர் சமையல்! 

        ***
       

பர்ஸ்ல உள்ள காசு எல்லாம் புடுங்கிட்டு,
ஒரு புது காலி பர்ஸ் கொடுப்பான் பாரு...
அவன்தான் நகை கடைக்காரன்

No comments:

Post a Comment