அனைவரிடம் நிச்சயம் வெள்ளை நிறத்தில் சாக்ஸ் இருக்கும். அப்படி வெள்ளை
நிறத்தில் வாங்கும் சாக்ஸானது சிறிது நாட்கள் கழித்துப் பார்த்தால், அதன் நிறமே முற்றிலும்
மாறுபட்டிருக்கும்.
ஏனெனில் அந்த அளவில் அதில் அழுக்கானது வேகமாக படியும். மேலும்
அப்படி அழுக்கு படிந்த வெள்ளை நிற சாக்ஸை துவைத்தால், அதில் உள்ள அழுக்கு அவ்வளவு
எளிதில் போகாமல் இருப்பதோடு, அதன் நிறமும் மஞ்சளாகிவிடும்.
இதனால் பலர் வெள்ளை நிற சாக்ஸ் பயன்படுத்த
வேண்டும் என்று நினைத்தாலே கடுப்பாவார்கள். ஆகவே அத்தகையவர்களுக்காக வெள்ளை நிற
சாக்ஸை துவைப்பதற்கு எந்த பொருட்களைக் கொண்டு துவைத்தால், சாக்ஸ் வெள்ளை நிறத்தில் இருக்கும்
என்று ஒருசில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம்.
அதன் படி துவைத்தால், நிச்சயம் சாக்ஸ் வெள்ளை
நிறத்தில் இருக்கும். அடிக்கடி துவைக்கவும் தினமும் வெள்ளை நிற சாக்ஸ் அணிந்து
செல்பவராக இருந்தால், குறைந்து 3 செட் வாங்கிக் கொள்ளுங்கள்.
ஏனெனில் சாக்ஸை தொடர்ச்சியாக நீண்ட நாட்கள்
பயன்படுத்தினால், அதில் உள்ள அழுக்குகளானது படிந்து நீங்கா கறைகளாகிவிடும்.
ஆகவே 3 செட் சாக்ஸ் வாங்கிக்
கொண்டு, தினமும் பயன்படுத்திய பின் துவைத்து வந்தால், சாக்ஸை வெள்ளை நிறத்திலேயே
வைத்துக் கொள்ளலாம். வெதுவெதுப்பான நீர் வெள்ளை நிற சாக்ஸை துவைக்கும் போது,
அதில் உள்ள
அழுக்குகள் போக வேண்டுமென்று பலர் மிகவும் சூடான நீரில் சாக்ஸை ஊற வைத்து
துவைப்பார்கள்.
அப்படி சூடான நீரில் துவைத்தால், சாக்ஸ் விரைவில் போய்விடும்.
ஆகவே வெதுவெதுப்பான நீரில் துவைத்து வாருங்கள்.
இதனால் அழுக்கு போவதோடு, அதன் தரமும் பாதுகாக்கப்படும்.
பிரஷ் வெள்ளை நிற சாக்ஸை வெதுவெதுப்பான சோப்பு நீரில் 1 மணிநேரம் ஊற வைத்த பின்னர்,
அதில் உள்ள கறைகளைப்
போக்க, பிரஷ்
பயன்படுத்தவும். பின் சுத்தமான நீரில் சாக்ஸில் உள்ள நுரை போகும் வரை அலசவும்.
ப்ளீச் சில சமயங்களில் வெள்ளை நிற சாக்ஸை துவைப்பதற்கு ப்ளீச் கூட பயன்படுத்தலாம்.
இதனாலும் சாக்ஸின் வெள்ளை நிறம் பராமரிக்கப்படும்.
எலுமிச்சை எலுமிச்சையில் உள்ள
சிட்ரிக் ஆசிட்டானது வெள்ளை நிறத்தை பராமரிக்க உதவுவதால், வெள்ளை நிற சாக்ஸை
துவைக்கும் போது, எலுமிச்சை சாற்றினை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து, 30 நிமிடம் ஊற வைத்து பின்
சுத்தமாக துவைத்து, சூரிய வெளிச்சத்தில் உலர வைக்க வேண்டும். பேக்கிங் சோடா இது மற்றொரு முறை.
அதற்கு வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, அதில் சாக்ஸை 25 நிமிடம் ஊற வைத்து, பின் சோப்பு மற்றும் பிரஷ்
பயன்படுத்தி துவைத்தால், சாக்ஸின் வெள்ளை நிறத்தைப் பராமரிக்கலாம்.
No comments:
Post a Comment