சாபம் பெற்ற உலகில் நாங்கள் பிறப்பதே சாபம் போல மாறிவிட்டது...😭😭😭



பிறந்த குழந்தையின் உணர்வுகள் போல்தான்
இருக்கும் எங்களுக்கு இதில் எங்கே எங்களிடம்
ஊடல் உணர்ச்சிகளை கண்டீர்கள்....?

பருவம் அடையவில்லை இன்னும்
பால் முனையும் வளரவில்லை உன்
இச்சை தீர்க்க எம்மிடம் என்ன அப்பா இருக்கின்றது...?

அப்பா ,அண்ணா,மாமா...! என்று
பாசத்தால் அணைத்த அணைப்புகள் மாறி
உங்கள் காதலியை. மனைவியை அணைத்து
முத்தமிடும் புணர்தலை எம்மேல் திணித்தால்
தீர்ந்திடுமோ உங்கள் மோகம்...!

சகோதரனே...! உன்னைப் போல்
எங்களுக்கு இரு கண்கள் ஒரு மூக்குதான்
உடலின் சில பகுதிகளில்தான் உன்னையும் என்னையும் வேறுப்படுத்துகின்றன. மனதால் உணர்கின்றோம்
எங்கள் பால் முனைகளையும் எங்கள் உறுப்புகளையும்
தொடவோ...! அல்லது பிசைவதற்கோ
மட்டும் நாங்கள் படைக்கப்படவில்லை....!

பூ ஒன்றை கருகற்களால் சிதைப்பது போல
மூச்சி எடுக்க கூட வழி இல்லாமல் வலியால் கதறுகின்றோம்
பாவம் பார்க்க பாவிகளுக்கு மனமில்லையோ....!
விளையாடும் போது விழுந்தாலும் சரி சிறு காயம்பட்டாலும் சரி
துடித்துடித்து போவாள் என் அம்மா - இன்று
என்னுடைய இந்த நிலையை கண்டாள் என்ன செய்வளோ தெரியவில்லை
அழுவாதே...! அம்மா காயம் வலிக்கவில்லை என்று
எழுந்து சொல்ல கூட முடியவில்லை பிணமாக கிடக்கின்றேனே....!

இவள் கொடுத்த பால் மனம் கூட எங்களை விட்டு போகவில்லை
காடுகளில் மட்டுமல்ல இன்று இறைவனின் கருவறை
முன்னாலும் நாங்கள் காயப்பட்டாலும்
இறைவன் கூட கல்லாய் மாறிவிடுகின்றான்....!

எங்களுக்கு இனி ஆசை ஒன்றுதான் சாகும் போது
வலியில்லாமல் சாக வேண்டும் என்பது தான்
அண்ணா...! நான் சாக இரு நிமிடம் தான் இருக்கு போல
வலிகள் குறையட்டும் விட்டு விடு சாகும் நொடியில் கூட
நான் உன் தங்கை என்ற ஞாபகம் வரவில்லையா....?

சாபம் பெற்ற உலகில் நாங்கள் பிறப்பதே சாபம் போல மாறிவிட்டது...😭😭😭


No comments:

Post a Comment