வெற்றி நமதே


வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. ஒவ்வொரு பின்னடைவும் சில படிப் பினைகளை தருகிறது. தனிப்பட்ட வாழ்க்கையிலோ, அலுவலக வாழ்விலோ நாம் காணும் ஒவ்வொரு தோல்வியும் நாம் மேலும் முன்னேற உதவவே செய்கிறது.

உங்கள் கடந்த காலத்தை எக்காரணம் கொண்டும் வெறுக்காதீர்கள். 

அதனை ஒரு ஆசிரியராக இணைத்து அரவணையுங்கள் (Never regret your past. Rather, embrace it as the teacher that it is")

உங்கள் மனதில் கெட்ட, தீய எண்ணங்களுக்கு முடிந்த வரை இடம் தராதீர்கள். அவை வந்தாலும் உடனே துரத்தி விடுங்கள். ஒரு சாதாரண மனிதன் மனதில் ஒரு நாளைக்கு 60,000 எண்ணங்கள் வருகின்றன. இதில் 95% ஏற்கனவே வந்த சிந்தனைகளே!! 

இதில் எதிர் மறை சிந்தனைகள் திரும்ப திரும்ப வந்தால் அதனால் அவர்கள் வாழ்க்கை முறை நிச்சயம் பாதிக்க படும்.

வாழ்க்கையில் தவறுகள் என்றே ஏதும் கிடையாது. அனைத்தும் பாடங்களே!! நெகடிவ் அனுபவம் என்று ஏதுமில்லை. ஒவ்வொன்றும் நாம் கற்று கொள்ளவும் மேலும் பலம் பெறவும் உதவுபவையே. வலியை விட சிறந்த ஆசிரியர் இருக்க முடியாது.

உலகில் எந்த விஷயமும் இரு முறை உருவாகிறது. முதலில் மனிதனின் மனதில் அடுத்து நிஜத்தில். (Things are created twice, first in the workshop of the mind and then only then in the reality).

நீங்கள் ஒரு மிக பெரிய லட்சியம் அல்லது ப்ராஜக்ட்டுக்காக ஈடுபடும் போது உங்கள் மனம் தன் எல்லைகளை தாண்டி பயணிக்கிறது. அனைத்து சக்திகளும் ஒரு முக பட, பல விஷயங்களும் உங்களுக்கு உதவ, உங்களை பற்றி, உங்கள் திறன் பற்றி நீங்கள் அப்போது தான் உணர்கிறீர்கள்.

உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து மீண்டும் உங்கள் இளமை காலத்தை இன்னொரு முறை வாழுங்கள்.

வாழ்க்கையில் என்ன தான் சாதித்திருந்தாலும் உங்கள் குடும்பத்தாரோடு நீங்கள் போதுமான நேரம் செலவழிக்கா விட்டால் நீங்கள் என்ன சாதித்தும் பயன் இல்லை

ஒரு நாளைக்கு பத்து நிமிடமாவது நீங்கள் அன்று செய்தது என்ன, உங்கள் இலக்கு நோக்கி சரியாக செல்கிறீர்களா என்று யோசியுங்கள். இந்த நேரம் நீங்கள் கற்கும் விஷயம் நிறையவே இருக்கும்.

சிலர் குறைவாக வேலை செய்து பிற நேரம் ஓய்வு எடுப்பதே சந்தோஷமாக இருக்கும் வழி என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையான சந்தோசம் ஒரு விஷயத்தை நாம் achieve செய்வதில் தான் உள்ளது. 

தொடர் மகிழ்ச்சி உங்கள் இலக்கை நோக்கி நீங்கள் விடாமல் பயணிப்பதில் தான் கிடைக்கும்.

வாழ்கையில் முன்னேற தூங்கும் நேரத்தை குறைக்க வேண்டும். சராசரி மனிதனுக்கு ஆறு மணி நேர தூக்கம் போதுமானது.

எந்த விஷயங்கள் செய்ய பயமும் தயக்கமும் கொள்கிறீர்களோ, அந்த விஷயங்களை தைரியமாக செய்ய துவங்குங்கள். கொஞ்ச காலத்தில் அந்த வேலை நன்றாகவே செய்ய துவங்கவதுடன், உங்கள் தன்னம்பிக்கையும் அதிகமாகியிருக்கும்.

இறைவன் அருளால் 
என்றென்றும் மிகுந்த மகிழ்ச்சியுடனும்
மன நிம்மதியுடனும் நன்றியுணர்வுடனும்
உங்கள் நண்பன் 

No comments:

Post a Comment