தமிழ் மாதங்களில்
முத்திரை பதிக்கும் மாதம் சித்திரை என்பார்கள். இந்த சித்திரை பிறக்கும் தினத்தையே
தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.
ஆங்கிலத்தில் ஜனவரி,
பிப்ரவரி என்று 12 மாதங்கள் உள்ளன. அதே போன்று சித்திரை, வைகாசி என்று 12 தமிழ் மாதங்கள் உள்ளன.
சூரியனின் இயக்கத்தை
அடிப்படையாகக் கொண்டே தமிழ் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. அதனால் தமிழ் மாதங்கள்
சூரிய மாதங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
ராசி சக்கரத்தை பொருத்த
வரை சூரியன் மேஷ ராசிக்குள் நுழைந்து வெளியேறும் காலம் சித்திரை மாதமாகும்.
31
நாட்களை கொண்ட சித்திரை மாதம் ஆங்கில மாதத்தில்
ஏப்ரல் 14ம் தேதி துவங்கி மே மாதம்
14ம் தேதி வரை உள்ள
நாட்களாகும்.
சித்திரை தமிழ்
மாதங்களில் முதல் மாதம் என்பதால் அம்மாதப் பிறப்பை தமிழர் புத்தாண்டு என்று
கொண்டாடுகிறோம்.
தமிழ் புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் கோவில்களில் விசேஷ பூஜைகள்
செய்யப்படும்.
மக்கள் இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என்று வேண்டிக்
கொள்வார்கள்.
புத்தாண்டையொன்டி மக்கள்
வீட்டை சுத்தம் செய்து மாவிலை தோரணம் கட்டி, புத்தாடை அணிந்து சாமியை கும்பிட்டு மகிழ்வர்.
அன்றைய தினம்
உணவில் வேப்பம்பூவை சேர்த்துக் கொள்வார்கள்.
No comments:
Post a Comment