பிளாஸ்மா தெரபி சிகிச்சை என்றால் என்ன?


கொரோனாவில் இருந்து குணமாகி 14 நாட்கள் கண்காணிக்கப்பட்ட நபர்களின் ரத்தத்தில் பி.லிம்போசைட் (B lymphocytes) செல்களால் சுரக்கப்படும் கொரோனா ஆன்டிபாடீஸ்களை பிரித்து எடுத்து அவற்றை நோயாளியின் உடலில் செலுத்துவதே பிளாஸ்மா தெரபி என அழைக்கப்படுகிறது.

ஆரோக்கியமான நபரிடம் இருந்து சுமார் 800 மில்லிலிட்டர் அளவிற்கு பிளாஸ்மா சேகரிக்க முடியும். 

இந்தியாவில் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒரு நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த தொற்றினைப் போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும் என்பதுதான் இதன் அடிப்படைக் கோட்பாடு. 

கொரோனாநோயால் பாதிக்கப்பட்டு மீண்ட ஒருவர் உடலில் நோய் இல்லை என்பதை உறுதிப்படுத்த இரண்டு முறை சோதனை செய்யப்பட்ட பிறகுதான் அவரது உடலில் இருந்து எதிரணுக்கள் எடுக்கப்படும்.

நோயில் இருந்து மீண்டவர்களுக்கு இரண்டு முறை கொரோனா இருக்கிறதா என்று பரிசோதனை, பிறகு எலிசா சோதனை ஆகியவை நடத்தப்பட்ட பிறகும், அவரது ரத்தம் தூய்மையானதா என்பதைத் தீர்மானிக்க இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நிர்ணயித்துள்ள திட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட்டபிறகே கொடையாளி உடலில் இருந்து ரத்தம் எடுக்கப்படும்.

 இதற்கான சோதனைமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் மேற்கொண்டு வருகிறது.

 ஓரிரு நாட்களில் இது முடிந்து இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது.

No comments:

Post a Comment