அமெரிக்க துணைக்கண்டத்தில் வாழ்ந்து வந்த'மாயன்' என்கிறசமூகத்தாரின் பஞ்சாங்கம் 2012ம்ஆண்டுடன் முடிவடைகிறது என்பதும், 2012ல்உலகம்அழிந்து விடும்என்பதைஅவர்கள் அறிந்து இருந்ததனால்தான் அதற்குமேல்அந்தபஞ்சாங்கம் தொடரவில்லை என்பதுமே இக்கூற்றினை பரப்புவோரின் வாதத்திற்கு ஆதாரமாகும்.
இன்னொரு சூரியன்
ஆகாயக் கோள்கள், நட்சத்திரங்கள் என்பனபோன்றவற்றின் நிலைகளில் நேர்ந்திடும் மாற்றங்களையும் கூடஇந்தவாதத்திற்கு சான்றாக அவர்கள் எடுத்தாளுகின்றனர். அவற்றுள் புதிதாக வந்தஒருகூற்றுதான் இன்னொரு சூரியன் தோன்றப் போகிறது என்பதும்!
வானியலை பற்றியும், நட்சத்திரங்களின் தோற்றம் - பரிணாமம் போன்றவை பற்றியும் எதுவுமே தெரியாது இருந்தகாலத்தில் சூரியனையோ, சந்திரனையோ போலஒளிர்கின்ற புதியபொருள்ஒன்றுவானத்தில் திடீரென தோன்றினால் எந்தஒருமனிதனும் நிச்சயமாக பயந்திடத்தானே செய்திருப்பான்?
இன்னுங்கூட மிகுதியானவர்களுக்கு வானியல் பற்றிபோதியஅறிவோ, விழிப்புணர்வோ இல்லாதநிலையில் - அடுத்தவருடம்நாம்இருசூரியன்களை காண்போம் என்றுஓர்அறிவிப்பை ஏதாவதுஒருவிஞ்ஞானி வெளியிட்டால் வரவிருக்கும் ஓர்பேராபத்தின் முன்னறிவிப்பாகவே இருக்கக் கூடும்அதுஎன்றுபலரும்எண்ணத்தானே செய்வர்! அதற்காக அந்தபாமரர்களை குற்றஞ்சாட்ட முடியுமா?
இணைய தளங்களில்...
கடந்த ஜனவரிமாதஇறுதியில்தான் அப்படிஒருசெய்திஇணையதளவெளியீடுகள் சிலவற்றில் பிரசுரமாகி இருக்கின்றன. (நம்நாட்டுஇணையதளங்களில் இச்செய்தி இடம்பெறவில்லை என்பதுசற்றுஆறுதலான விசயம்) இதனைத்தொடர்ந்து உடனடியாக வேறுசிலவிஞ்ஞானிகள் அதனைமறுத்துக் கூறியபோதும் அந்தமாற்றுக் கருத்துக்கு - முந்தைய செய்திக்கு கிடைத்த முக்கியத்துவம் கிடைத்திடவில்லை. எனவேஅந்ததகவலின் அடிப்படை என்ன? உலகம்அழியத்தான் போகிறதா? என்பனபற்றிநாம்இங்கேசற்றுஆராய்வோம்.
நீர் சுள்ளான்
ஹைட்ரஜன் என்கிறநீரியவாயுஹீலியமாக மாறிடும் செயல்பாட்டின் மூலம்தான் நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன. நட்சத்திர காம்பில்தான் இந்தசெயலாக்கம் நடைபெறுகிறது. இவ்வாறு நடைபெறும்போது ஹைட்ரஜனின் அளவுகுறையக் கூடியதருணத்தில் அதனால்வெப்பத்தை உற்பத்தி செய்யஇயலாமல் ஆகிவிடுகிறது. உட்புறத்தில் இருந்து கொண்டிருக்கும் வெப்பம் தணிந்து விட்டால் நட்சத்திரம் தனதுஈர்ப்பு சக்தியால் தானாகவே சுருங்கிப் போய்விடும். இவ்வாறு சுருங்கி விடும்நடைமுறையே மீண்டும் வெப்பத்தை உருவாக்கி விடும். அந்தவெப்பத்தால் ஒளிர்கின்ற நட்சத்திரம்தான் "நீர் சுள்ளான்" என்ற பெயரில் அறியப்படுகிறது. கடைசியில் வெப்பத்தை தொடர்ந்து தாங்கிட இயலாதநிலைநேரும்போது- ஒளியைஉற்பத்தி செய்திட இயலாமல் ஆகி, நம்பார்வையை விட்டுஅதுமறைந்து விடுகிறது.
நாம் இன்றுகாண்கிற நமதுசூரியனுக்கும் எதிர்காலத்தில் இப்படிஒருமுடிவேநேர்ந்திடக் கூடும். இந்தஅறிவியல் விளக்கம் பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையில் தான்கூறப்பட்டுள்ளது. இந்தசூரியனும், நட்சத்திரங்களும் கடைசிகாலத்தில் செக்கசிவந்தபிரம்மாண்டங்களாக ஆகிஅதன்பின்னர்தான் அவை'நீர்சுள்ளான்'களாகஆகிவிடும்.
சூப்பர் நோவா
ஆனால் சூரியனைவிட ஒன்றரைமடங்கிற்கு மேல்பெரியஅளவிலான கோள்வடிவநட்சத்திரங்களின் விதிவேறுபட்டதாகும். அவற்றின் முடிவுஅதிபயங்கரவெடிப்பின் மூலம்நியூட்ரான் நட்சத்திரமாகவோ, இருட்டுப் பள்ளமாகவோ அவைஆகிவிடும். அத்தகையதோர் வெடிப்பின் வாயிலாக வெளிப்படும் எரிசக்தி, சூரியனுக்கு இணையானதோர் நட்சத்திரம் அதன்ஆயுட்காலம் முழுமைக்கும் வீசுகின்ற அளவிற்கு இருக்கும். ஒருநட்சத்திர சமூகத்தை விடஅதிகமான ஒளியுடன் அப்போது அதுகாட்சிதரும். ஒருநட்சத்திர சமூகத்தில் ஏறத்தாழ பத்தாயிரம் கோடிநட்சத்திரங்கள் உள்ளனஎன்பதைநாம்தெரிந்து கொள்ளவேண்டும். அப்படியானால் இத்தகையதோர் மகாவெடிப்பின் தீவிரம் எத்தகையதாக இருக்கும் என்பதைசற்றுஎண்ணிப் பாருங்கள். இத்தகைய வெடிப்புகள் 'சூப்பர் நோவா' என்றபெயரில் அறியப்படுகின்றன.
திருவாதிரை நட்சத்திரம்
திருவாதிரை என்கிறசெக்கச் சிவந்ததோர் வண்ணம்பெரியநட்சத்திரமாகும். அதன்கோள்வடிவம்சூரியனை விட20 மடங்குபெரியதாகவும், அதன்விட்டம் பலநூறுமடங்குபெரியதாகவும் இருக்கும். சூரியன் இருக்கும் இடத்தில் அதுஇருக்குமானால் செவ்வாய், புதன், சுக்கிரன் மற்றும் பூமிஆகியகோள்களும் விரவிக் கிடக்கின்ற இதரபலகிரகங்கள் யாவும்அதனுள்ஆழ்ந்து - அமிழ்ந்து போயிருக்கும்! அந்தஅளவுக்கு பிரம்மாண்டமானதாகும் திருவாதிரை என்கிறநட்சத்திரம்!
இந்த நட்சத்திரம் அடுத்தஆண்டுஓர்சூப்பர் நோவாவாக ஆகிவெடித்து சிதறும் என்றும், அப்போது அதன்ஒளிசூரியனின் ஒளிக்கு ஒப்பானதாக இருக்கும் என்றும் - ஆஸ்திரேலியாவில் உள்ளதெற்குகுயின்ஸ் பல்கலைக் கழகத்தின் மூத்தவிரிவுரையாளர் பிராண்ட் கார்ட்டர் அறிவித்தார்.
இது சரியல்ல என்றும், திருவாதிரை நட்சத்திரம் எப்போது சூப்பர் நோவாவாக ஆகும்என்பதைகனித்து முன்னறிவிப்பு செய்யஎவராலும் முடியாது என்றும் வேறுபலஅறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்640 ஒளிஆண்டுகள் தொலைவில் இருக்கும் திருவாதிரை சூப்பர் நோவாவாக ஆனாலும் கூடஅதுஏறத்தாழ சந்திரஒளியின் அளவுதான் பூமியில் தென்படும் என்றும் சுட்டிக்காட்டினர் அந்தஅறிவியலாளர்கள். ஆயினும், இம்மாற்று கருத்துக்களுக்கு எந்தஒருஇணையதளமும் உரியமுக்கியத்துவத்தை வழங்கிடவில்லை.
நாம் இன்றுகற்றறிந்துள்ளவற்றின் அடிப்படையில் திருவாதிரையை போன்றதோர் நட்சத்திரம் நிச்சயமாக சூப்பர் நோவாவாக ஆகிவிடும்என்பதுஉண்மையே! ஆனால்அதுஎப்போது நிகழும் என்பதைகணித்துச் சொல்லும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சியை நாம்இன்னும் எட்டவில்லை. என்றாவது ஒருநாள் அதற்கான அறிவாற்றலை மனிதன்அடையக்கூடும். அதன்காலஅளவைக்கூட இன்றுநம்மால் கணக்கிட்டு கூறமுடியாது.
பூமி சாம்பலாகி விடும்
நாளை நடப்பவைகளில் சிலவற்றை நிச்சயமாக நாம்அறிவோம். எடுத்துக்காட்டாக மரணத்தைக் கூறலாம். மரணம்சர்வநிச்சயமான ஒன்று! ஆனால்அதுஎப்போது? எங்கே? எப்படிநேரும்என்பதைஎவறாலும் கூறிவிட இயலாதுஅல்லவா. அதுபோலத் தான்திருவாதிரை வெடித்துச் சிதறும் என்பதுதிண்ணம். ஆனால்அதுநிகழும் நாள்எந்நாள் என்பதுஎவருக்கும் தெரியாது.
சூரியன் அதன்முடிவைநெருங்கும்போது செக்கச் சிவந்ததோர் பிரம்மாண்டமாக ஆகிவிடும். அப்போது அதுசெவ்வாயின் சுற்றுவட்டப் பாதைவரை விரிவடைந்து பெரிதாகி விடும். அதனிடையே பூமிஎரிந்து சாம்பலாகி விடும். அத்துடன் ஆவியாகி சூரியனுடன் இணைந்து விடும். அதுவரைபூமியில் எஞ்சியிருக்கும் உயிரினங்கள் யாவும்அத்துடன் ஒட்டுமொத்தமாக அழிந்து விடும். மனிதஇனம்அதுவரைபூமியில் நீடித்து இருக்குமா என்பதையாராலும் கூறமுடியாது.
கட்டுப்பாடற்ற புவிவெப்பத்தின் மூலமாகவோ, சாம்ராஜ்ஜியங்களை கட்டமைப்பதற்கான பேராசையின் விளைவாக ஏற்படக் கூடியபோர்களின் மூலமாகவோ ஒட்டுமொத்த உயிரினவாழ்வுமண்டலத்தையும் மனிதர்களே அழித்து விடாமல் இருந்தால் ஒருவேளை இப்புவியில் மனிதஇனமும்எஞ்சியிருக்கக் கூடும். ஆயினும், நாம்அறிந்துள்ளதோ, அறியாததோ ஆனகாரியங்களின் மூலம்இந்தபூவுலகின் ஆயுள்ஒருநாள் முற்றுப் பெறத்தான் போகிறது.
அழிவு நிச்சயம்
உதாரணமாக விண்வெளியில் தவழ்ந்து கொண்டிருப்பவற்றுள் ஏதேனும் ஒருபெரும்பொருள்நிலைகுலைந்து வேகமாகவந்துபூமியில் மோதினால் இங்குவாழும்உயிரினங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக மடிந்து விடஅதுவேபோதுமானதாகும். அவ்வாறு நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் மிகமிககுறைவுதான்என்றுவிஞ்ஞானிகள் கூறினாலும் - அப்படிஎதுவும் நிகழாது என்றுதிட்டவட்டமாக கூறிடஎவராலும் இயலாது.
சூரியனிலிருந்து வீசுகின்ற ஒளியின் அளவுஏதேனும் காரணத்தால் சற்றேகூடினாலும் இந்தபூமியில் உயிர்வாழமுடியாத நிலைநேர்ந்திடும். இதற்கான சாத்தியக் கூறுகள் மிகக்குறைவேஎன்றுஅறிவியலாளர்கள் கூறுவர். என்றாலும், நாம்இன்றுகாண்கிற இந்தபிரபஞ்சம் என்றாவது ஒருநாள்அழிந்து விடும்என்பதும் சர்வநிச்சயமாகும்.
ஆயினும் உடனடியாக இந்தஉலகம்அழிந்து விடப்போவதில்லை என்பதும் அதுபோலவே நிச்சயமானதேயாகும். அப்படிநிகழ்வதற்கேற்ற எந்தஒருசாத்தியக் கூறினையும் தற்போது நம்மால் காணமுடியவில்லை. இதேஉலகம்அழியப்போகிறது என்றுகூறுவோர் அதற்குஆதாரமாக சுட்டிக்காட்டும் காரணிகளை ஆழ்ந்து ஆராய்ந்தால் அவைஅடிப்படையற்றவை என்பதுபுலனாகும். இத்தகைய வதந்திகள் இதற்குமுன்னரும் பலமுறைபரவியுள்ளன.
அறியாமை
உலகம் அழியப்போகிறது என்றுஏறத்தாழ கடந்த12 ஆண்டுகளுக்கு முன்புபலர்கூறினர். அதாவது2000ம்ஆண்டில் ஏசுகிறிஸ்து திரும்பவும் உலகில்வருவார் என்றும், அத்துடன் உலகம்அழிந்து போய்விடும்என்றும் ஒருசாரார்கூறினர்.
2000ம் ஆண்டுடன் பெரும்பிரளயங்களோ, வேறுவகையானமாபெரும் இயற்கைசீற்றங்களோ நேர்ந்திடும். அதன்மூலம்உலகம்அழிந்திடும் என்றுஅடுத்து ஒருசாரார்அறிவித்தனர்.
இப்படியெல்லாம் பரவியபற்பலவதந்திகளால் தாக்குண்டு, உலகம்அழிவதற்கு முன்பாகவே தற்கொலை செய்துதங்களைமாய்த்துக் கொண்டவர்கள் பற்றியசெய்திகள் பலவும்அப்போதே வெளிவந்தன. இவர்களில் பலரும்ஒருவேளைஉள்ளபடியே நம்பிக் கொண்டிருந்தவற்றைத்தான் அறிவித்திருக்கக் கூடும். ஆனால்அப்படிஎதுவும் நேர்ந்திடவில்லை!
அறிவுடைமை
ஆண்டுகள் உள்ளிட்ட காலக்கணக்கீடுகளை ஏற்படுத்தியிருப்பது மனிதர்களது சவுகரியத்திற்காகத் தானேயன்றி பிரபஞ்சத்தின் செயல்பாடுகளில் இதற்கெல்லாம் எந்தபங்கும் இல்லைஎன்பதைவிளங்கிக் கொள்ளும் போதுதான் இத்தகைய அறியாமைகள் மற்றும் மூடநம்பிக்கைகளின் பாற்பட்ட அறிக்கைகளின் அர்த்தமின்மையை உணர்ந்திட இயலும்.
உலகம் அழியும்போது அதைதடுக்கஎந்தச்சக்தியாலும் முடியாது. ஆனால்அதுஎப்போது நிகழும் என்பதைதிட்டவட்டமாக எவராலும் கூறவும் முடியாது. ஆகவேஉலகஅழிவைபற்றிதற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களை பொருட்படுத்தாமல் அதுபற்றியஅனாவசியமான அச்சங்களை விட்டுவிலகிஆக்கப்பூர்வமான வகையில் வாழ்க்கையை வாழ்வதுதான் அறிவுடைமையாகும்.
நன்றி: மக்கள் ரிப்போர்ட்
No comments:
Post a Comment