ஓசோன் படலத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன?
உலகில் வாழும்உயிரினங்களை சூரியனின் புறஊதாக் கதிர்வீச்சிலிருந்து பாதுகாத்து வரும்ஓசோன்படலத்தின் பாதுகாப்பின் அவசியத்தை உலகமக்கள் அனைவரும் உணர்த்தும் பொருட்டு, ஆண்டுதோறும் செப்டம்பர் திங்கள் 16-ம்நாளினைஓசோன்படலம்பாதுகாப்பு தினமாகபன்னாட்டு அமைப்புகள் அனுசரித்து வருகின்றன. இந்தியவானிலைஆய்வுத்துறையின் தென்மண்டல தலைமையகத்தில் பணியாற்றிய ஏ. குழந்தைவேலு மற்றும் நா. மாரிகிருஷ்ணன் இருவரும் ஓசோன்படலம்பாதுகாப்பு தினம்என்றதலைப்பில் கட்டுரை ஒன்றினை வடிவமைத்துள்ளனர். தமிழகமக்களும் ஓசோன்படலத்தின் பணிமற்றும் அதன்பாதுகாப்பின் அவசியத்தை உணரும்விதமாகஎளியநடைமுறையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை. அதைஇங்குகாண்போம்.
மண்ணில் உயிரினம் பிணியின்றி வாழ்ந்திட விண்ணில் ஓசோன்படலம்ஆற்றிவரும் பணிமகத்தானது. அதனைநினைத்து அதற்குநன்றிநவிலவும் அதன்பாதுகாப்பின் அவசியத்தை உறுதிசெய்திடவும் உலகின்பல்வேறு பகுதிகளில் உள்ளபன்னாட்டு அமைப்புகளும் செப்டம்பர் திங்கள் 16-ம்நாளினைஓசோன்நாளாகஆண்டுதோறும் அனுசரிக்கின்றன. தற்போது ஓசோன்படலத்தில் ஏற்படும் மாற்றங்களையும் அதன்விரிவான சுற்றுச்சூழலின் பாதுகாப்பற்ற தன்மைகுறித்தும் அனைவரும் பேசிவருகின்றனர்.
ஓசோன் இருப்பிடம்:
பூமியிலிருந்து சுமார்15 கி.மீ. முதல் 60 கி.மீ உயரம் வரைஉள்ளவளிமண்டலப்பகுதி ஸ்ட்ரட்ரோ ஸ்பீயர் என்றழைக்கப்படுகிறது. இந்தபகுதியில் தான்ஓசோன்படலம்அமைந்துள்ளது. இந்தபகுதியில் இயல்பாக இடம்பிடித்துள்ள பிராணவாயு மூலக்கூறு மீதுசூரியனின் புறஊதாகதிர்வீச்சு தாக்குதல் ஏற்படுத்தி இரண்டுபிராணவாயு அணுவாகபிரிக்கப்பட்டு பின்இந்தஅணுக்கள் பிராணவாயு மூலக்கூறுடன் கூடிஓசோன்பிராணவாயு வடிவமாக உருவாகின்றது. ஓசோனைமுதன்முதலாககண்டறிந்தவர் சி.எப். ஸ்கோன்பின் என்பவராவார்.
ஓசோன் ஸ்ட்ரட்டோஸ்பியரில் உற்பத்தியானாலும் இதன்90 விழுக்காடு ஸ்ட்ர்டடோஸ்பியரின் கீழ்பகுதியில் மட்டுமே உள்ளது. ஓசோன்படலம்முழுமையாக பூமியின் மேற்பரப்பில் மாற்றப்பட்டால் அதன்திண்மம் 2.5 மி.மீ முதல் 3.5 மி.மீ வரை இருக்கும்.
ஓசோன் அளவிடல்:
வளிமண்டலத்தில் ஓசோன்அடர்த்தி டாப்சன் அலகினால் அளவிடப்படுகிறது. ஓர்இடத்தின் மொத்தஓசோன்உலகில்230 ஈமமுதல்500 ஈமவரைவேறுபடுகின்றது. ஓசோன்அடர்த்தி கணக்கிட பத்தொன்பது வகையானகருவிகள் உள்ளன. அவற்றில் சில(1) டாப்சன் ஸ்பேக்ட்ரோ போட்டோமீட்டர் (2) ப்ருவர் ஸ்பேக்ட்ரோ போட்டோமீட்டர் (3) ஜோடுமீட்டர் (4) பில்டர் ஓசோன்மீட்டர் எம்.83 (5) பில்டர் ஓசோன்மீட்டர் எம்.124 (6) மாஸ்ட்(7) ஆக்ஸ்போர்டு (8) சர்பேஸ் ஓசோன்பப்ளர்(9) எலக்ட்ரோ கெமிக்கல் செல்சோன்ட்.
இந்தியாவில் முதன்முதலாகஓசோன்அளவிடும் பணிபேராசிரியர் ராமநாதன் என்பவரால் 1919-ம்ஆண்டுகொடைக்கானலில் துவக்கப்பட்டது. 1957-ம் ஆண்டுமுதல்இந்தியவானிலைஆய்வுத்துறை ஓசோன்அளவிடும் பணியைஆரம்பித்தது. இந்தியவானிலைஆய்வுத்துறையின் கீழ்தேசியஓசோன்மையம்இயங்கிவருகின்றது. ஓசோன்அடர்த்தியை அளவிடஉலகெங்கிலும் சுமார்450 நிலையங்கள் இயங்கிவருகின்றன. இந்தியாவில் கொடைக்கானல், மவுண்ட் அபு, புதுடெல்லி, ஸ்ரீநகர், அகமதாபாத், வாரணாசி, புனே, நாக்பூர், மற்றும் திருவனந்தபுரம் ஆகியஒன்பதுஇடங்களில் இந்தநிலையங்கள் இயங்கிவருகின்றன. இவற்றில் புதுடெல்லி, புனேமற்றும் திருவனந்தபுரத்தில் மாதமிருமுறை ஓசோன்சோன்ட்பலூன்பறக்கச் செய்துவளிமண்டலத்தின் செங்குத்தான ஓசோன்மற்றும் வெப்பவடிவுருவம் அளவிடப்படுகின்றன. இந்தியவானிலைஆய்வுத் துறையின் ஓசோன்நிலையங்களால் ஓசோன்அளவினைகண்டறிய டாப்சன் ஸ்பேக்ட்ரோ போட்டோமீட்டர், ப்ருவர் ஸ்பேக்ட்ரோ போட்டோமீட்டர், சர்பேஸ் ஓசோன்பப்ளர்மற்றும் எலக்ட்ரோ கெமிக்கல் செல்முதலானகருவிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் மீதானஓசோன்அளவுசராசரியாக 280 ஈமமுதல்300 ஈமவரைவேறுபடுகிறது.
அண்டார்டிகாவில் ஓசோன்ஓட்டை:
அண்டார்டிகா பனிகண்டத்தில் ஓசோன்அளவுபருவநிலைக்கேற்ப சிறியஅளவிலான மாறுதலுடன் சராசரியாக 300 ஈமநிலவுகிறது. ஆனால்வசந்தகாலத்தில் (ஆகஸ்ட்-நவம்பர்) ஓசோன் அளவு சராசரிஅளவில்50 முதல்60 விழுக்காடு வரைகுறைந்து காணப்படுகின்றது. இந்தஓசோன்குறைவே``ஓசோன்ஓட்டை" என்றுஅழைக்கப்படுகிறது. பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜெ. போர்மன் தலைமையிலான ஆய்வுக்குழு அண்டார்டிகாவின் ஹாலேபேஎன்றநிலையத்தில் 1970-ம்வருடமத்தியில் ஓசோன்அளவானஅதன்சராசரிஅளவு350 ஈமல்இருந்து வெகுவாக குறைந்து 1986-ல்இதன்அளவு190 ஈமவாககுறைந்து காணப்பட்டதை முதன்முதலாககண்டறிந்தது.
ஓசோன் அடர்த்தி குறைவிற்கான காரணங்கள்:
குளிர்காலத்தில் அண்டார்டிகா பனிப்பிரதேசம் மேல்நிலவும் துருவஇரவுஅதிவேககாற்றுஓசோன்செறிவுமிகுந்த காற்றினை கீழ்அட்சரேகை பகுதியிலிருந்து துருவப்பிரதேசத்தினுள் அனுமதிக்காதது வசந்தகாலத்தில் ஓசோன்அடர்த்தி குறைந்து இருப்பதற்கு ஒருகாரணமாகும். ஓசோனின் செங்குத்தான வடிவுருவம் ஆய்வின் வழியேஅதன்அடர்த்தி சுமார்10 கி.மீ முதல் 20 கி.மீ உயரத்தில் குறைந்து இருப்பது தெளிவாக காணப்படுகின்றது. துருவப் பிரதேசத்தில் ஓசோன்அடர்த்தி குறைவதற்கு காரணமாக விளங்குவது துருவஸ்ட்ரடோஸ்பரிக் மேகங்களை. இந்தமேகங்கள் மீதுநிகழும் பல்வேறு வகையானவேதியில் செயல்பாடுகளின் போதுகுளோரின் வெளிப்படுகின்றது. இந்தகுளோரின் அணுஓசோனுடன் வினைபுரிந்து குளோரின் ஆக்சைடை வெளிப்படுத்துவதால் ஓசோன்செறிவுகுறைகின்றது.
வளிமண்டலத்தில் ஸ்ட்ரடோஸ்பியர் பகுதியில் மேகங்கள் இல்லாதிருந்தாலும் அதிவேககாற்றுநிலவுவதாலும் அதிகவேக ஜெட்விமானங்கள் வானில்பயணிக்க இந்தபகுதியை பயன்படுத்துகின்றன. இந்தபகுதியில் பறக்கும் ஒருஜெட்விமானம் ஒருமணிநேரத்தில் சுமார்3 டன்நைட்ரிக் ஆக்சைடை இயந்திரத்திலிருந்து வெளிப்படுத்துகின்றன. இந்தநைட்ரிக் ஆக்சைடு ஓசோனுடன் வினைபுரிந்து நைட்ரஜன் டைஆக்சைடாகவும் பிராணவாயுவாகவும் மாறிஓசோனின் அடர்த்தியை குறைக்கின்றன.
குளிர்சாதன பெட்டியில் பயன்படுத்தும் குளோரபுளோரகார்பன்கள் வளிமண்டலத்தில் வெளிப்படும் போதுநுண்ணுயிரிகளால் சிதைவுறுகிறது. ஸ்ட்ரடோஸ்பியரின் கீழ்பகுதியில் கலந்துஓசோனுடன் வினைபுரிந்து ஓசோனின் அடர்த்தியை குறைத்து குளோரின்களாகவும், பிராணவாயுவாகவும் மாற்றிவிடுகின்றன. அண்மையில் பசும்கடில்வாயுக்களும் ஓசோன்குறைவிற்கு காரணமாய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஓசோன் ஓட்டையின் சமீபகாலத்திய நிலை:
சமீப காலங்களில் ஓசோன்ஓட்டையின் பரப்பையும் ஓசோன்செறிவுகுறைவினையும் அறிவியல் வல்லுநர்கள் செயற்கை கோள்கள் உதவியுடன் கணக்கிட்டு வருகின்றனர். அண்டார்டிகாவில் ஓசோன்ஓட்டையின் பரப்பு1980-ம்ஆண்டுமுதல்கணக்கிடப்பட்டுள்ளது. அண்டார்டிகாவில் அமைக்கப்பட்டுள்ள இந்தியவானிலைஆய்வுத் துறையின் மைத்தரி ஆய்வகமும் (படம்பார்க்க) 15 ஆண்டுகளாக ஓசோன்ஓட்டையின் நிலவரம் குறித்து ஆய்வுசெய்துவருகின்றது. 2000-ம் ஆண்டுவசந்தகாலத்தில் (ஆகஸ்ட்-நவம்பர்) மிகக் குறைந்த அளவுஓசோன்113 ஈமஇருந்ததாக இந்தஆய்வுமையம்பதிவுசெய்துள்ளது.
ஓசோன் ஓட்டையின் பரப்புஆகஸ்ட்மாதத்தில் 10 மில்லியன் ச.கி.மீ. அளவில்துவங்கி செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிகஅளவிற்கு விரிவடைந்து நவம்பர் மாதஇறுதியில் குறையஆரம்பித்து டிசம்பர் முதல்வாரத்தில் ஓசோன்ஒட்டைமுழுமையாக மறைந்து விடுகின்றது. கடந்தபத்தாண்டுகளில் ஓசோன்ஒட்டையின் பரப்புஅதிகபட்ச நிலையில் 25 மில்லியன் ச.கி.மீ. ஆகஇருந்தநிலைமாறி 2000-ம்ஆண்டில் 28.3 மில்லியன் ச.கி.மீ. ஆகஅதிகரித்திருந்தது. இந்தபரப்பளவு ஆஸ்திரேலியாவின் பரப்பளவினை போல்மூன்றுமடங்கானது. ஆனால்2002-ம்ஆண்டில் இதன்பரப்புவெகுவாக குறைந்து 15 மில்லியன் ச.கி.மீ ஆகஇருந்தது. இதுகடந்தஇருபதுஆண்டுகளில் மிகக்குறைந்த பரப்பளவு கொண்டஓசோன்ஓட்டைஎன்றுகண்டறியப்பட்டுள்ளது. 2002-ம் ஆண்டில் ஸ்ட்ரட்டோ ஸ்பீரியன் கீழ்ப்பகுதியின் வெப்பம் அதிகரித்திருந்தும் மற்றும் துருவசுழற்சி வலுவிழந்து குறைவான பகுதிக்குள் இருந்ததும் ஓசோன்ஓட்டையின் பரப்புகுறைவிற்கான காரணங்கள் என்பதுவிஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு(2003) அண்டார்டிகாவில் இயல்பிற்கு மாறாகஓசோன்குறைவு6 வாரங்களுக்கு முன்னரே துவங்கிவிட்டது. ஸ்ட்ரட்டோஸ்பீரியரின் வெப்பம் குறைந்துள்ளதாகவும் அண்டார்டிகாவில் ஆஸ்திரேலியாவின் ``மாசான்" ஆய்வகம் அருகேதுருவஸ்ட்ரட்டோஸ்பரிக் மேகங்கள் தென்படுவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இதன் காரணமாக இந்தஆண்டுஓசோன்ஓட்டையின் பரப்பும் அதிகரிக்கக் கூடுமஎன்றுவிஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஓசோன் பூமியில் வாழும்உயிரினங்களை சூரியன் வெளிப்படுத்தும் புறஊதாகதிர்வீச்சிலிருந்து காப்பாற்றும் போர்வையாக (கம்பளமாக) வளிமண்டலத்தில் இருந்து செயல்படுகிறது. இந்தபுறஊதாகதிர்வீச்சின் காரணமாக கண்பார்வை குறைவும் தோலில்புற்றுநோயும் உண்டாகின்றது.
வளிமண்டலத்தில் ஓசோனின் அடர்த்தி குறைவால் சூரியனின் புறஊதாக்கதிர்கள் முழமையாக உறிஞ்சப்படாமல் பூமியைவந்தடையும் போதுபூமியின் உயிரினங்கள் வாழுவதற்கான சூழலின் சமன்நிலையிலும் பாதிப்பு ஏற்படுகின்றது. பூமியின் சராசரிவெப்பநிலை உயரும், அதேசமயத்தில் வளிமண்டலத்தில் கரியமிலவாயுவின் பங்கும் உயர்கிறது. கரியமில வாயுபூமிவெளிப்படுத்தும் அகச்சிவப்பு கதிர்வீச்சினை உறிஞ்சி பூமியின் சராசரிவெப்பநிலையை மேலும்அதிகரிக்கின்றது. இந்தவிளைவாலும் பூமியின் சராசரிவெப்பநிலை உயரும்போதுபனிப்பிரதேசங்களில் மிகவும் அதிகமான பனிஉருகிகடல்மட்டம்உயர்கிறது. கடல்மட்ட உயர்வின் விளைவால் கடலருகே உள்ளபூமியின் பெரும்பான்மையான நிலப்பகுதி நீரால்சூழப்பெற்று உயிரினங்கள் வாழும்நிலப்பகுதி வெகுவாக குறைந்து விடும்அபாயம்பூதாகரமானதாக தெரிகின்றது. கடல்வாழ் உயிரினங்கள் புறஊதாக்கதிர்வீச்சுக்கு ஆளாகிஅழிந்துவிடக்கூடிய அபாயம்உள்ளது.
இவ்விதமான உயிரினங்களை வாழ்விக்க வளிமண்டலத்திலிருந்து செயல்படும் ஓசோனின் அடர்த்தி குறையாது காப்பாற்ற வேண்டிய பெரும்பொறுப்பு மனிதவர்க்கத்தினர் அனைவருக்கும் உரியதே. ஓசோனைசிதைக்கும் எந்தவொரு செயல்பாட்டையும் பூமியில் மேற்கொள்ளமாட்டோம் என்றுசூளுரைப்போம்.
No comments:
Post a Comment