# மாமாக்களும், மாமிக்களும்:
"மனசில் எத்தனை வயசென்று நினைக்கிறீர்களோ, அதுதான் உங்கள் வயசு" என்று ஒரு பொன்மொழி சொல்கிறார்கள். அபத்தமானது..!
அதை நம்பி மாமாக்களும், மாமிக்களும் மனசில் இளமை என்று சொல்லிக்கொண்டு, ஜீன்ஸ் பேண்ட், ஸ்னீக்கர், அரை டிராயருடன் தலையைத் தேன் கலரில் டை அடித்துக்கொண்டு கொட்டம் அடிக்கிறார்கள்.சிலர் 'ஜாகிங்' என்று சொல்லி, பயங்கரமாக வேகு வேகென்று பீச்சில் (உத்தரவாதமாக ஹார்ட் அட்டாக்கை நோக்கி)ஓடுகிறார்கள். எல்லாரும் நாற்பதுகளில் உள்ளவர்கள். சிலர் அம்பதுகளில். அறுபது வயசானதும் இதெல்லாம் அவ்வளவு முக்கியமானது அல்ல என்கிற ஞானோதயம் பெரும்பாலானவருக்கு பிறந்து விடும்.
இந்த ஞானோதயம் முதன்முதல் எப்போது பிறக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் இளமையிலேயே, இருபதுகள் போய் முப்பதுடன் சந்திக்கும் தருணத்திலேயே ஓசைப்படாமல் நமக்கு இயற்கையால் அறிவிக்கப்படுகிறது.
அதை நாம் அடையாளம் கண்டுகொள்வதில்லை.அது ஒன்றும் அத்தனை கடினமில்லை. வயசாகத் துவங்கி விட்டது என்பதற்கு சில தெளிவான அங்க அடையாளங்கள் உண்டு. அவை இவை:
1) முதலில் வயிற்றில் ஆரம்பிக்கும். ஒரே ஒரு தோசையோ, அல்லது ஒரு இட்லி வடையோ சாப்பிட்டு, ஒரு காபி மட்டும் சாப்பிட்டால் வயிறு நிரம்பாது.
2) காரோ, ஸ்கூட்டரோ ஓட்டும்போது எப்போதும் ஏற்படும் ஜாலி குறையும், கொஞ்சம் போர் அடிக்கிறார்போலத் தோன்றும்.
3) பத்து வயசுப் பையன்களோடு பேசும்போது அவர்களுக்கு ஸ்ரீகாந்த், வெங்க்சர்க்கார் போன்ற பெயர்கள் எல்லாம் தெரியாது என்பார்கள். ஆச்சர்யமாக இருக்கும்.
4) வீண் வம்புக்காக சண்டைக்குப் போவதில் ஒரு த்ரில் இருந்ததே, அது திடீரென்று காணாமற் போய்விடும்.
5) உங்கள் கிளாஸ்மேட் வீட்டுக்குப் போனால் அதிர்ச்சி காத்திருக்கும். அவனுக்கு குழந்தை இருக்கும்.
6) ஞாயிற்றுக்கிழமை ஊர் சுற்றுவீர்களே..! இப்போது சுற்றாமல் தூங்க வேண்டும்போல இருக்கும்.
7) முன்பெல்லாம் அப்பா, அம்மா பேசுவதை நின்று கவனிக்கவே நேரமிருக்காது. இப்போது உங்கள் பெற்றோர் பேசுவதில் கொஞ்சம் அர்த்தம் இருப்பதுபோல் தோன்றும்.
8) நீங்கள் கண்ணில் நீர்வர உருகிய சில சினிமா பாட்டுகளைத் திரும்பக் கேட்கும்போது அப்படியொன்றும் பிரமாதமாக இல்லை போலத் தோன்றும். சிலசமயம் அபத்தமாகக்கூடத் தெரியும்.
9) நீங்கள் பைண்டு பண்ணி சேர்த்து வைத்திருந்த அந்த எழுத்தாளரின் தொடர்கதை, இப்போது படிக்கும்போது, "இந்தக் கண்றாவியையா வாராவாரம் கடையில் காத்திருந்து வாங்கினேன்" என்று தோன்றும்.
10) தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரம் முன்பிருந்தே அதைப் பற்றி பரபரப்பு இருக்குமே, "இப்போது அது எங்கே போச்சு?"
11) பனியன், அண்டர்வேர், பாடி, பாவாடை போன்ற உள்ளாடைகளைத் துவைக்காவிட்டால் என்ன? பழசையே போட்டுக் கொள்ளலாம் என்று தோன்றும்.
12) ஆண்களுக்கு தினம் ஷேவ் செய்துகொள்வது அப்படி ஒன்றும் அவசியம் இல்லை என்றும், பெண்களுக்கு மாட்சிங் ப்ளவுஸ் முக்கியமில்லை என்றும் தோன்றும்.
13) மத்தியானத் தூக்கம் சுகமாக இருக்கும்.
14) நிரோத் விளம்பரம் டிவியில் வரும்போது சங்கடமாக இருக்காது.
இந்த அடையாளங்கள் உங்களுக்கு இருந்தால் நிச்சயம் நீங்கள் முப்பது.
- சுஜாதாட்ஸ்.

No comments:
Post a Comment