சென்னைவாசி ' என்று பெயர்பெற


' சென்னைவாசி ' என்று பெயர்பெற, அதற்கேற்ற குணாதிசயங்கள் என்ன...?

1)
ஒரு நாளைக்கு இரண்டு காபி சாப்பிடுவார்.

2)
கையேந்தி பவனில் இட்லி சாப்பிட்டிருக்க வேண்டும்.

3)
பீச்சுக்கு வருஷம் ஒருமுறைதான் போவார்.

4)
பார்த்தசாரதி கோவில் எங்கிருக்கிறது, தெரியாது. கொட்டிவாக்கமும் தெரியாது.

5)
அண்ணா சாலையை மவுண்ட்ரோட் என்றுதான் சொல்வார்.

6)
எலக்ட்ரிக் ட்ரெயினிலும், பஸ்சிலும் பிடித்துக் கொள்ளாமல்தான் பிரயாணம் செய்வார்.

7)
லைட் ஹவுசில் ஏறியே பார்த்திராதவர்.

8)
ஒருமுறையாவது பிக்பாக்கெட் அடிக்கப்பட்டவர்.

9)
ரோட்டில் படுத்திருக்கும் மாடுகள் அவர் கண்ணுக்குத் தெரியாது.

10)
கார்ப்பரேஷன் குழியில் ஒருமுறையாவது விழுந்திருப்பவர்.

11)
போலிஸ்காரருக்கு ஒருமுறையாவது லஞ்சம் கொடுத்திருப்பவர்.

-
எழுத்தாளர் சுஜாதா.

No comments:

Post a Comment