கதை எழுத அனுபவ அறிவு அவசியமா ?


கதை எழுத அனுபவ அறிவு அவசியமா ?

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தனக்கு நேர்ந்த ஒரு நிகழ்வை விவரிக்கிறார்.

பெங்களூரில் ஒருநாள் ராத்திரி, ஓர் அன்பர் என்னை சந்திக்க வந்தார். "நீங்கள் எழுதும் எந்தக் கதையையும் போட்டு விடுகிறார்கள். ஆனால், நான் எழுதிய சிறந்த கதைகள் திரும்பி வந்து விடுகின்றன. இவற்றில் என்ன தப்பு என்று ஒருமுறை படித்துவிட்டுச் சொல்லுங்கள். நீங்கள் வேண்டாம் என்று சொன்னால் கதை எழுதுவதை நிறுத்தி விடுகிறேன்." என்று பை நிறைய வைத்திருந்த கையெழுத்துப் பிரதிகளை எடுத்து மேஜையில் பரப்பினார்.

நான் அவற்றில் ஒரு கதையை எடுத்து முதல் பாராவைப் படித்தேன். கல்லூரியில் நடக்கும் காதல் கதை.

"
கல்லூரியைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். எந்தக் கல்லூரி..?" என்று கேட்டேன்.

கோலாரில் ஒரு கல்லூரி பெயர் சொன்னார்.

"
அந்தக் கல்லூரியின் வர்ணனை எங்கே? அதில் உள்ளே நுழைந்ததும் என்ன இருக்கும்?"

"
நடுவில ஒரு மரம் இருக்குங்க" என்றார்.

"
என்ன மரம் ...?"

"
எதோ மரம்ங்க..."

"
கல்லூரிக்குள் நுழையும்போது காம்பௌண்ட் சுவரில் என்ன எழுதி இருக்கும்...?"

"
அதையெல்லாம் யாருங்க கவனிச்சாங்க..."

"
ரெண்டு வருஷமாவது தினம் அந்தக் கல்லூரிக்குச் செல்கிறீர்கள். கண்ணைத் திறந்து சுற்றிலும் பார்க்கவே இல்லை. சரி, காதல் கதை எழுதியிருக்கீங்க...காதல் பண்ணியிருக்கீங்களா?" என்றேன்.

"
இல்லைங்க..."

"
போய் பண்ணிட்டு வாங்க..அப்புறம் எழுதுங்க" என்றேன்.

HE HAD THE LAST WORD.

"
நீங்க கூட நெறைய கொலைக்கதை எழுதியிருக்கீங்களே...!"

No comments:

Post a Comment